ஆக, இதய நலனுக்கு பரிந்துரைக்கப்பட்ட உணவுகளை நாம் குறைவில்லாமல் எடுத்துக் கொள்வது அவசியம். அதைவிட முக்கியமானது உணவை வேக வைக்கும் முறை ஆகும். ஏனெனில் உணவை வேக வைக்கும் அளவை பொறுத்து அதன் நிறம், சுவை, மனம் மற்றும் ஊட்டச்சத்து போன்றவை மாற்றம் அடைகின்றன. ஆக, கீழ்காணும் வழிமுறைகளை பின்பற்றுவது பயனுள்ளதாக அமையும்.
குறைவான தண்ணீர் பயன்பாடு : உணவுப் பொருட்களை வேக வைக்கும்போது முடிந்தவரை குறைவான தண்ணீர் பயன்படுத்த வேண்டும். ஏனெனில் கரையத் தகுந்த ஊட்டச்சத்துக்கள் வெளியேறுவதை இது தடுக்கும். அதே சமயம் காய்கறி வேக வைத்து தண்ணீர் வடித்தால், அதை கிரேவி, சாஸ் போன்றவற்றுக்கு பயன்படுத்திக் கொள்ளலாம். மேலும் பேக்கிங் சோடா பயன்படுத்துவதை தவிர்க்கவும்.
மிக அதிகமான தீ கூடாது : எந்த ஒரு உணவையும் மிதமான தீயில் வேக வைப்பது அவசியம் ஆகும். அவசரம் கருதி மிகக் கடுமையான அளவில் தீ மூட்டக் கூடாது. குறிப்பாக கிரில், பேக்கிங், பாய்லிங், வறுவல் போன்றவற்றை செய்யும்போது அளவான தீயில் சமைக்கவும். அதிக தீ கொண்டு சமைத்தால் புற்றுநோய், இதய நோய், நீரிழிவு போன்றவை வரலாம்.