பீட்சா பேஸை சரியாக தேர்வு செய்யவும் : நாம் வீட்டிலே பீட்சா செய்யப் போவதால் நமக்கு பிடித்த மாதிரி, ஆரோக்கியமான பொருட்களை தயக்கமில்லாமல் பயன்படுத்தலாம். பீட்சா செய்ய எப்போதும் மெல்லிய கிரஸ்ட் அல்லது குளூட்டன் இல்லாத மாவு அல்லது முழு தானிய மாவை பயன்படுத்தவும். ஆல் பர்பஸ் ஃபுளோர் பயன்படுத்துவதற்கு பதிலாக இந்த ஆரோக்கியமான முறையை நீங்கள் தேர்வு செய்யலாம்.
சாஸ் : சாஸ் என்பது பீட்சாவின் சுவையை அதிகரிக்கக்கூடிய ஒரு பொருள் ஆகும். அதில் உடலுக்கு தீங்கு விளைவிக்கும் ஏராளமான சர்க்கரை, பதப்படுத்திகள், சோடியம் மற்றும் கொழுப்புகள் நிறைந்துள்ளது. ஆகவே, நீங்கள் வீட்டிலே சாஸ் செய்யும்போது ஃபிரஷான தக்காளி, பூண்டு, இஞ்சி, மூலிகைகள் மற்றும் மசாலா பொருட்கள் கொண்டு செய்யவும். இது சுவையை அதிகரிப்பதோடு ஆரோக்கியத்தையும் கூட்டும்.
சீஸ் : நீங்கள் உடல் எடையைக் குறைக்க முயற்சி செய்து வருகிறீர்கள் என்றால், பிராசஸ் செய்யப்பட்ட சீஸ் பயன்படுத்துவதற்கு பதிலாக காட்டேஜ் சீஸ் அல்லது ஸ்கிம்டு மொசரெல்லா சீஸ் அல்லது பராமேசின் சீஸ், செடார் சீஸ் போன்றவற்றை பயன்படுத்தலாம். மேலும் அதிகப்படியான சீஸ் சேர்த்து விட வேண்டாம். அது உடலுக்கு கேடு விளைவிக்கும்.