முகப்பு » புகைப்பட செய்தி » வீக் எண்ட் வந்தாலே இரவு மூவி டைம் தானா..? படம் பார்க்கும்போது கொறிக்க ஸ்நாக்ஸ் லிஸ்ட்..!

வீக் எண்ட் வந்தாலே இரவு மூவி டைம் தானா..? படம் பார்க்கும்போது கொறிக்க ஸ்நாக்ஸ் லிஸ்ட்..!

உங்களுக்கு பிடித்த மூவி அல்லது வெப் சீரிஸை டிவி முன் அமர்ந்து நீண்ட பார்க்கும் போது நீங்கள் எடுத்து கொள்ள கூடிய சில ஆரோக்கியம் நிறைந்த ஸ்நாக்ஸ்களை இங்கே பார்க்கலாம்.

 • 18

  வீக் எண்ட் வந்தாலே இரவு மூவி டைம் தானா..? படம் பார்க்கும்போது கொறிக்க ஸ்நாக்ஸ் லிஸ்ட்..!

  நாம் அனைவரும் வீட்டிலேயே டிவி-யில் ஒரு திரைப்படம், வெப் சீரிஸ் அல்லது பிடித்த ஷோக்களை பார்த்துக் கொண்டிருக்கும் போது ஸ்நாக்ஸ்களை சாப்பிட்டு கொண்டே பார்க்கும் அனுபவத்தை மேலும் என்ஜாய் செய்கிறோம்.

  MORE
  GALLERIES

 • 28

  வீக் எண்ட் வந்தாலே இரவு மூவி டைம் தானா..? படம் பார்க்கும்போது கொறிக்க ஸ்நாக்ஸ் லிஸ்ட்..!

  ஆனால் பெரும்பாலும் நம் கைகளில் இருக்கும் ஸ்னாக்ஸ்கள் எடை அதிகரிப்பை ஊக்குவிக்க கூடியவை மற்றும் பிற உடல்நல பிரச்சனைகளுக்கு வழிவகுக்கும் அதிக கலோரி கொண்டவையாக இருக்கின்றன. அவற்றில் சில அதிக சர்க்கரை கொண்ட ஸ்னாக்ஸ்களாகவும் இருக்கின்றன. இவற்றுக்கு பதில் ஊட்டச்சத்துக்கள் நிறைந்த மற்றும் குறைந்த கலோரிகள் கொண்ட ஆரோக்கிய ஸ்நாக்ஸ்களை சாப்பிட முக்கியத்துவம் கொடுத்தால் நன்றாக இருக்கும். அதே போல டிவி முன் அமர்ந்து அதிகம் சாப்பிடும் பழக்கத்தையும் கட்டுப்படுத்தி கொள்ள வேண்டும்.

  MORE
  GALLERIES

 • 38

  வீக் எண்ட் வந்தாலே இரவு மூவி டைம் தானா..? படம் பார்க்கும்போது கொறிக்க ஸ்நாக்ஸ் லிஸ்ட்..!

  சரி, உங்களுக்கு பிடித்த மூவி அல்லது வெப் சீரிஸை டிவி முன் அமர்ந்து நீண்ட பார்க்கும் போது நீங்கள் எடுத்து கொள்ள கூடிய சில ஆரோக்கியம் நிறைந்த ஸ்நாக்ஸ்களை இங்கே பார்க்கலாம்.

  MORE
  GALLERIES

 • 48

  வீக் எண்ட் வந்தாலே இரவு மூவி டைம் தானா..? படம் பார்க்கும்போது கொறிக்க ஸ்நாக்ஸ் லிஸ்ட்..!

  பாப்கார்ன் : ஏர்-பாப்ட் (Air-popped ) பாப்கார்ன், டிவி பார்க்க அதிக நேரம் செலவழிக்கும் போது சாப்பிட கூடிய ஒரு சிறந்த ஸ்நாக் ஆகும். இதில் குறைந்த கலோரி மற்றும் அதிக நார்ச்சத்து உள்ளது. எனவே இது ஆரோக்கிய ஸ்னாக் ஆப்ஷனாக அமைகிறது. இருப்பினும் பாப்கார்னில் நீங்கள் சேர்த்து கொள்ளும் பட்டர் மற்றும் உப்பில் கவனம் தேவை. ஏனெனில் அவை உங்கள் கலோரி மற்றும் சோடியம் நுகர்வை அதிகரிக்க செய்யும்.

  MORE
  GALLERIES

 • 58

  வீக் எண்ட் வந்தாலே இரவு மூவி டைம் தானா..? படம் பார்க்கும்போது கொறிக்க ஸ்நாக்ஸ் லிஸ்ட்..!

  வறுத்த கொண்டைகடலை : இந்த ஆரோக்கியமான மற்றும் சுவையான ஸ்நாக்ஸை வீட்டில் செய்வது எளிது. கொண்டைக்கடலை புரதம், நார்ச்சத்து மற்றும் காம்ப்ளக்ஸ் கார்போஹைட்ரேட்ஸ்களின் சிறந்த மூலமாகும். கொண்டைக்கடலையில் அடங்கி இருக்கும் சத்துக்கள் அதை ஆரோக்கியமான ஸ்னாக் ஆப்ஷனாக மாற்றுகிறது. கொண்டைக்கடலையை நன்கு வெயிலில் காயவைத்து, அதில் சிறிதளவு எண்ணெய் விட்டு கொஞ்சம் உப்பு சேர்த்து மிதமான தீயில் வறுத்து, ஆறிய பின் சாப்பிடலாம். இப்படி வறுத்த பின் கொண்டைக்கடலை மொறுமொறுப்பாக மாறுவதோடு சுவையும் அதிகரிக்கிறது.

  MORE
  GALLERIES

 • 68

  வீக் எண்ட் வந்தாலே இரவு மூவி டைம் தானா..? படம் பார்க்கும்போது கொறிக்க ஸ்நாக்ஸ் லிஸ்ட்..!

  பழங்கள் : ஆரோக்கியமற்ற ஸ்னாக்ஸ்களை விட ஊட்டச்சத்து மிக்க பழங்களை மூவி டைம் ஸ்னாக்ஸாக தேர்ந்தெடுப்பது சிறந்ததாக இருக்கும். ஆப்பிள், ஆரஞ்சு, வாழைப்பழங்கள், திராட்சைமற்றும் பெர்ரி போன்ற பழங்களில் நார்ச்சத்து, வைட்டமின்ஸ் மற்றும் ஆன்டிஆக்ஸிடன்ட்ஸ் நிரம்பியுள்ளன. இவை உங்கள் ஒட்டுமொத்த ஆரோக்கியத்தையும் சிறப்பாக வைக்க உதவுகின்றன.

  MORE
  GALLERIES

 • 78

  வீக் எண்ட் வந்தாலே இரவு மூவி டைம் தானா..? படம் பார்க்கும்போது கொறிக்க ஸ்நாக்ஸ் லிஸ்ட்..!

  வெஜிடபிள் ஸ்டிக்ஸ் வித் டிப் : ஆரோக்கியமான வெஜ் ஸ்னாக்ஸ் என்று வரும் போது கேரட், வெள்ளரிகள், செலரி மற்றும் குடைமிளகாய் ஸ்டிக்ஸ் போன்றவை சிறந்த தேர்வாகும். கூடுதல் புரோட்டீன் மற்றும் ஃப்ளேவரை பெற வெஜிடபிள் ஸ்டிக்ஸ்களை Hummus, guacamole அல்லது Grreek yogurt போன்ற பல டிப்ஸுடன் நீங்கள் இவற்றை சேர்த்து சுவைக்கலாம்.

  MORE
  GALLERIES

 • 88

  வீக் எண்ட் வந்தாலே இரவு மூவி டைம் தானா..? படம் பார்க்கும்போது கொறிக்க ஸ்நாக்ஸ் லிஸ்ட்..!

  டார்க் சாக்லேட் : நீண்ட நேரம் அமர்ந்து டிவி பார்க்கும் சூழலில் மில்க் சாக்லேட்ஸ் அல்லது ஐஸ்கிரீம்களுக்கு பதில் டார்க் சாக்லேட்டை நீங்கள் தேர்வு செய்யலாம். இதில் மில்க் சாக்லேட்டை விட சர்க்கரை குறைவு அதே நேரம் ஆன்டிஆக்ஸிடன்ட்ஸ் அதிகம். எனவே இது உங்கள் ஆரோக்கியத்திற்கு சிறந்த தேர்வாக அமைகிறது. எனினும் டார்க் சாக்லேட்டில் கலோரிகள் இருப்பதால் மிதமாக சாப்பிடுவது நல்லது.

  MORE
  GALLERIES