Healthy food For weight loss: அனைவருக்கும் சைஸ் ஜீரோவாக இருக்க வேண்டும் என்ற ஆசை இருக்கும். ஆனால், நமது மனமும் உடலும் பெரும்பாலான சமயங்களில் அதற்கு ஒத்துப்போவதில்லை. சரியான நேரத்தில் உடல் எடையை குறைக்கவிட்டால், அது பெரிய பிரச்சனைகளை ஏற்படுத்தலாம் என நிபுணர்கள் கூறுகின்றனர். எந்த விதமான உடற் பயிற்சியும் செய்யாமல் எளிமையான வழியில் உடல் எடையை குறைக்க ஆசைப்பட்டால் இந்த பதிவு உங்களுக்கானது. உடல் குறைப்புக்கு உதவும் 20 ஆரோக்கியமான உணவுகளை பற்றி இந்த தொகுப்பில் காணலாம்.
நம்மில் பலருக்கு உருளைக்கிழங்கு பிடி த்தமான உணவுகளில் ஒன்றாக இருக்கும். ஆனால், கார்போஹைட்ரேட் நிறைந்த ஆரோக்கியமற்ற உணவு என சிலர் நினைத்திருப்பார்கள். உண்மையில், இது எடை குறைப்பு மற்றும் ஆரோக்கியம் நிறைந்த உணவு. இதில், பொட்டாசியம் அதிகம் இருப்பதால் இருதயம் மற்றும் ரத்த கொதிப்பு நோயாளிகளுக்கு சிறந்த உணவு.