முகப்பு » புகைப்பட செய்தி » லைஃப்ஸ்டைல் » ஆண்களுக்கென பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்ட உணவுத்திட்டம் : அனைத்து வயதினருக்கும் ஏற்றது..!

ஆண்களுக்கென பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்ட உணவுத்திட்டம் : அனைத்து வயதினருக்கும் ஏற்றது..!

ஆண் மற்றும் பெண் என இருபாலரும் தங்கள் ஆரோக்கியத்தை கவனித்து கொள்வது முக்கியம். ஆரோக்கியமான உணவு மற்றும் டயட் என்று வரும் போது பெரும்பாலும் அக்கறை இல்லாமல் ருப்பவர்கள் ஆண்களாக தான் இருக்கிறார்கள். 

  • 15

    ஆண்களுக்கென பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்ட உணவுத்திட்டம் : அனைத்து வயதினருக்கும் ஏற்றது..!

    ஆண் மற்றும் பெண் என இருபாலரும் தங்கள் ஆரோக்கியத்தை கவனித்து கொள்வது முக்கியம். ஆரோக்கியமான உணவு மற்றும் டயட் என்று வரும் போது பெரும்பாலும் அக்கறை இல்லாமல் ருப்பவர்கள் ஆண்களாக தான் இருக்கிறார்கள். பெண்களுடன் ஒப்பிடும் போது வயது ஏற ஏற ஆண்களுக்கு தசை இழப்பு வேகமாக உள்ளது. இது பல உடல்நலப் பிரச்சினைகளுக்கு வழிவகுக்கும் என்கிறார்கள் நிபுணர்கள். வயது ஏறும் போது தன்னிச்சையாக ஏற்படும் தசை செயல்பாடு குறைவு வாழ்க்கைத் தரத்தில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்துகிறது. எனவே ஆண்கள் தங்கள் உணவு பழக்கத்தில் ஆரோக்கிய மாற்றத்தை கொண்டு வர பின்பற்ற வேண்டிய சில டிப்ஸ்களை இங்கே பார்க்கலாம்.

    MORE
    GALLERIES

  • 25

    ஆண்களுக்கென பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்ட உணவுத்திட்டம் : அனைத்து வயதினருக்கும் ஏற்றது..!

    எளிமையான ஆரோக்கிய மந்திரம்: ஆரோக்கியமான டயட்டை பின்பற்றுவதற்காக எளிய மந்திரம் ஃபிரெஷ்ஷாக தயாரிக்கப்பட்ட உணவு மற்றும் அந்தந்த சீசனில் கிடைக்கும் முக்கிய பழங்களை சாப்பிடுவதே. ஆரோக்கியமான டயட்டில் குறைந்த ஆயிலில் தயாரிக்கப்பட்ட உங்கள் வழக்கமான உணவு, ஃபிரெஷ் பழங்கள் மற்றும் ஃபிரெஷ் காய்கறிகள் அடங்கி இருக்க வேண்டும். கட்டாயமாக பழைய உணவுகளை சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும். மதியம் மீந்த உணவை இரவோ அல்லது இரவு மீந்த உணவை அடுத்த நாள் காலையோ சாப்பிடும் பழக்கம் இருக்க கூடாது. ஒவ்வொரு வேளை உணவையும் அப்போதே சமைத்து அப்போதே சாப்பிடுவதே சிறந்தது.

    MORE
    GALLERIES

  • 35

    ஆண்களுக்கென பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்ட உணவுத்திட்டம் : அனைத்து வயதினருக்கும் ஏற்றது..!

    ஹோல் 30 டயட்: சமீப காலமாக பிரபலமடைந்து வரும் Whole30 டயட் என்பது ஸ்ட்ரிக்ட்டான 30 நாள் எலிமினேஷன் டயட் ஆகும். இந்த டயட் உங்கள் உணவில் இருந்து 30 நாட்களுக்கு மது, சுத்திகரிக்கப்பட்ட சர்க்கரை, தானியங்கள், பருப்பு வகைகள், பால் பொருட்களை குறைக்க உங்களை ஊக்குவிக்கிறது. இதன் போது நீங்கள் மேற்கண்டவற்றை சாப்பிட கூடாது. பழங்கள், காய்கறிகள், முட்டை, நட்ஸ், சீட்ஸ், பதப்படுத்தப்படாத இறைச்சிகள், கடல் உணவுகள் மற்றும் ஆலிவ் எண்ணெய் மற்றும் தேங்காய் எண்ணெய் போன்ற எண்ணெய் உள்ளிட்டவற்றை சேர்க்கலாம்.

    MORE
    GALLERIES

  • 45

    ஆண்களுக்கென பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்ட உணவுத்திட்டம் : அனைத்து வயதினருக்கும் ஏற்றது..!

    வீட்டில் தயாரிக்கப்பட்ட எளிமையான உணவு: நமது வீட்டு கிச்சன்களில் காய்கறிகள், பழங்கள் முதல் பருப்பு வகைகள் மற்றும் மசாலாப் பொருட்கள் வரை நம் ஊட்டச்சத்து தேவைகளை பூர்த்தி செய்ய தேவையான அனைத்து பொருட்களும் பயன்படுத்தப்படுகிறது. கிச்சடி மற்றும் டாலியா போன்ற சில உணவு வகைகளில் பருவகால காய்கறிகள் சேர்க்கப்படுகின்றன. இவை ஊட்டச்சத்துக்கள் மற்றும் நார்ச்சத்துகளின் ஆற்றல் மையங்களாக இருக்கின்றன. எனவே வீடுகளில் செய்யப்படும் பல எளிய உணவு வகைகள் ஆரோக்கியத்தை மேம்படுத்துபவை.

    MORE
    GALLERIES

  • 55

    ஆண்களுக்கென பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்ட உணவுத்திட்டம் : அனைத்து வயதினருக்கும் ஏற்றது..!

    ஊட்டச்சத்து தேவைகளை சமன் செய்தல்: நீங்கள் பழங்கள் மற்றும் காய்கறிகளை உண்ணுபவராக இருந்தால் கூட, சில வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள் குறைபாடு உங்கள் உடலில் இருக்கலாம். இந்த குறைபாடுகள் ஆரோக்கியத்தில் சிறிய தாக்கங்களை ஏற்படுத்தலாம். எனவே உங்கள் உடலை சரியாக மதிப்பீடு செய்து உங்களுக்கு தேவைப்படும் வைட்டமின்களை தர கூடிய சப்ளிமெண்ட்ஸ்களை உங்கள் மருத்துவர் ஆலோசனையுடன் எடுத்து கொள்வது சிறந்தது.

    MORE
    GALLERIES