ஏதாவது சாப்பிட்டு விட்டு தூக்கத்தை தொடரலாம் என்று சிலர் நினைப்பார்கள், ஆனால் அப்படி எதையாவது சாப்பிட்டு இருக்கும் கொஞ்சநஞ்ச தூக்கமும் போய்விடுமோ அல்லது கஷ்டப்பட்டு குறைத்து கொண்டிருக்கும் எடை கூடுமோ என்ற பயம் அவர்களுக்கு இருக்கும். நள்ளிரவு நேரத்தில் பசிக்கும் போது என்ன சாப்பிடுவது என்று உங்களுக்கு குழப்பமாக இருந்தால், குற்ற உணர்ச்சியின்றி சாப்பிட கூடிய ஸ்னாக்ஸ்களின் பட்டியல் இங்கே...
வாழைப்பழம் : ஆரோக்கியமான ஆண்கள் சிலர் 2 வாழைப்பழங்களை சாப்பிட்ட 2 மணி நேரத்திற்குள் ஆய்வுக்குட்படுத்தப்பட்டனர். இந்த ஆய்வில் பங்கேற்ற ஆண்களின் ரத்தத்தில் மெலடோனின் அளவு 4 மடங்குக்கு மேல் அதிகரித்திருப்பது கண்டறியப்பட்டு உள்ளது. நம் உடலின் தூக்க சுழற்சியை கட்டுப்படுத்த மெலடோனின் உதவுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
கிவி: கிவி பழங்கள் ஒரு திருப்திகரமான சிற்றுண்டியாகும், இதில் வைட்டமின் சி நிறைந்துள்ளது. 2 உரிக்கப்பட்ட கிவிகளில் 84 கலோரிகளை மட்டுமே உள்ளன மற்றும் இந்த பழங்கள் செரோடோனின் இயற்கையான மூலமாகும். ஆய்வு ஒன்றில் பங்கேற்றவர்களுக்கு இரவு படுக்க போகும் 1 மணி நேரத்திற்கு முன் 2 கிவி பழங்கள் சாப்பிட்ட கொடுக்கப்பட்டன. 1 மாதத்திற்கு பின் ஆய்வில் பங்கேற்றவர்கள் தூங்குவதற்கு ஆகும் நேரத்தில் 35% குறைந்துள்ளது கண்டறியப்பட்டது.