இவற்றின் உள்ள மஞ்சள் நிறத்தில் இருக்கின்ற பழமோ தித்திப்பான சுவையை தரும். அதேபோல இந்த 2 பழங்களும் பழுத்துவிட்டால் அதன் மனம் நம் மூக்கை துளைக்கும். அன்னாசிப் பழத்தின் பூர்வீகம் தென் அமெரிக்கா என்று கூறுகின்றனர். இதில் ஊட்டச்சத்துக்கள், ஆண்டிஆக்ஸிடண்ட்ஸ் மற்றும் எண்ணற்ற சத்துக்கள் உள்ளன. தனியொரு பழமாக ஸ்நாக்ஸ் போல சாப்பிடலாம் அல்லது ஃப்ரூட் சாலட்டில் சேர்த்துக் கொள்ளலாம். எப்படி சாப்பிட்டாலும் அன்னாசியின் சுவை அலாதியானது தான். அன்னாசிப்பழம் சாப்பிடுவதால் கிடைக்கும் பலன்கள்..
செரிமானத்திற்கு உதவும் : அன்னாசிப் பழத்தில் நார்ச்சத்து நிரம்பியுள்ளது. இது குடல் நலனை மேம்படுத்தும் பண்புகளை கொண்டிருக்கிறது. அன்னாசியில் உள்ள ப்ரோமெலைன் என்னும் சத்தும் நம் செரிமான சக்தியை மேம்படுத்தக் கூடியதாக இருக்கிறது. சாப்பிட்ட சிறிது நேரத்திற்கு பின் வாழைப்பழம் சாப்பிடுவதைப் போல அன்னாசியையும் சாப்பிடலாம்.
காயங்களை ஆற வைக்கும் : ஏற்கனவே குறிப்பிடப்பட்ட ப்ரோமெலைன் என்பது அழற்சிக்கு எதிரான பண்புகளை கொண்டதாகும். வீக்கம், காயம் போன்றவற்றை கொண்டவர்கள் அன்னாசி பழம் சாப்பிட, நோய் எதிர்ப்பு சக்தி அதிகரித்து காயங்கள் விரைவில் குணமாகும். குறிப்பாக விளையாட்டு வீரர்கள் அடிக்கடி அன்னாசிப் பழம் எடுத்துக் கொள்ளலாம்.
புற்றுநோயை எதிர்த்து போராடும் : அன்னாசிப்பழம் சாப்பிட்டால் ஆக்ஸிடேடிவ் ஸ்ட்ரெஸ் அளவு குறையும். அது மட்டுமல்லாமல் புற்றுநோய் ஏற்பட்டு விடாமல் தடுக்கிறது. புற்றுநோய்க்கான குடும்ப பின்னணி கொண்டவர்கள், இந்த நோய் தாக்குவதற்கான புறச்சூழலில் வசிப்பவர்கள், சிகரெட் பிடிப்பவர்கள் அவ்வபோது அன்னாசி பழம் சாப்பிடலாம். அதே சமயம், அன்னாசிப் பழம் சிலருக்கு அலர்ஜியை ஏற்படுத்தலாம். அவ்வாறு இருப்பின் அதை நீங்கள் கவனத்தில் கொள்ள வேண்டும். ஆரம்பகட்ட கர்ப்ப காலங்களில் அன்னாசிப் பழம் சாப்பிடுவதை தவிர்ப்பது நல்லது.