ஹோம் » போடோகல்லெரி » லைஃப்ஸ்டைல் » மூளை ஆரோக்கியம் முதல் விந்தணுக்களின் தரம் வரை... தினமும் 5 வால்நட்ஸ் சாப்பிட்டு வந்தால் கிடைக்கும் நன்மைகள்..!

மூளை ஆரோக்கியம் முதல் விந்தணுக்களின் தரம் வரை... தினமும் 5 வால்நட்ஸ் சாப்பிட்டு வந்தால் கிடைக்கும் நன்மைகள்..!

வால்நட்ஸ் விந்தணுக்களின் தரத்தை அதிகரிப்பதுடன், விந்து இயக்கம் மற்றும் விந்தணுவின் உருவகம் ஆகியவற்றை மேம்படுத்துகிறது.

  • 110

    மூளை ஆரோக்கியம் முதல் விந்தணுக்களின் தரம் வரை... தினமும் 5 வால்நட்ஸ் சாப்பிட்டு வந்தால் கிடைக்கும் நன்மைகள்..!

    நட்ஸ் வகைகளிலேயே வால்நட்ஸ் என்பது தனித்துவமான மருத்துவ குணங்களை உள்ளடக்கியது. இதை தமிழில் அக்ரூட் பருப்பு என்று அழைக்கின்றனர். ஒரு அவுன்ஸ் வால்நட்ஸில் 4 கிராம் புரதம், 2 கிராம் ஃபைபர், கார்போஹைட்ரேட், மாங்கனீசு, மெக்னீசியம், பாஸ்பரஸ் மற்றும் துத்தநாகம், செலினியம், வைட்டமின் பி, அதிக அளவில் வைட்டமின் ஈ மற்றும் நல்ல கொழுப்பு சத்துக்கள் நிறைந்துள்ளது.

    MORE
    GALLERIES

  • 210

    மூளை ஆரோக்கியம் முதல் விந்தணுக்களின் தரம் வரை... தினமும் 5 வால்நட்ஸ் சாப்பிட்டு வந்தால் கிடைக்கும் நன்மைகள்..!

    அதோடு வால்நட்ஸில் அதிகளவு ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் மற்றும் அழற்சி எதிர்ப்பு பண்புகள் நிறைந்துள்ளன. வால்நட்ஸில் உள்ள MUFA மற்றும் ஒமேகா 3 கொழுப்புக்கள் அனைத்தும் நம் உடலுக்கு மிகவும் நல்லது. தாவர அடிப்படையிலான ஒமேகா -3 ALA மற்றும் சிறந்த ஆதாரத்தை வழங்கும் பருப்பு வகை வால்நட்ஸ் ஆகும். பிற சத்துள்ள பருப்புகளை விட இந்த வால்நட் 5 மடங்கு ALA-ஐக் கொண்டுள்ளது. வால்நட்ஸ் சாப்பிடுவதால் ஏற்படும் சில நன்மைகளை குறித்து காண்போம்.

    MORE
    GALLERIES

  • 310

    மூளை ஆரோக்கியம் முதல் விந்தணுக்களின் தரம் வரை... தினமும் 5 வால்நட்ஸ் சாப்பிட்டு வந்தால் கிடைக்கும் நன்மைகள்..!

    மூளை ஆரோக்கியத்திற்கு நல்லது : வால்நட்ஸில் உள்ள ஒமேகா 3 போன்ற அத்தியாவசிய ஃபேட்டி அமிலங்கள், மூளையின் ஆரோக்கியத்தைப் பராமரிக்க உதவும். இதனை தினமும் சாப்பிடுபவதால் மூளை சம்பந்தப்பட்ட பிரச்சனைகளான அல்சைமர் நோய் வருவதை தடுக்க முடியும்.

    MORE
    GALLERIES

  • 410

    மூளை ஆரோக்கியம் முதல் விந்தணுக்களின் தரம் வரை... தினமும் 5 வால்நட்ஸ் சாப்பிட்டு வந்தால் கிடைக்கும் நன்மைகள்..!

    மனச்சோர்வை குறைக்கும் : வால்நட்ஸ், ஒமேகா 3 கொழுப்பு அமிலங்களில் உள்ள உயர்தர பருப்பு வகைகளில் ஒன்றாகும். இது மூளையின் செயல்பாட்டை நேர்மறையாக ஆதரிக்கிறது மற்றும் மனச்சோர்வின் அறிகுறிகளைக் குறைக்க உதவுகிறது.

    MORE
    GALLERIES

  • 510

    மூளை ஆரோக்கியம் முதல் விந்தணுக்களின் தரம் வரை... தினமும் 5 வால்நட்ஸ் சாப்பிட்டு வந்தால் கிடைக்கும் நன்மைகள்..!

    ஆன்டிஆக்ஸிடன்ட்கள் நிறைந்தவை : பாதாம், பிஸ்தா போன்ற பல்வேறு வகை பருப்புகள் மற்றும் பெர்ரி வகைகளை காட்டிலும், வைட்டமின் ஈ, எலாஜிக் அமிலம், மெலடோனின், கரோட்டினாய்டுகள் போன்ற சிறந்த உயர்தர ஆன்டிஆக்ஸிடன்ட்கள் இந்த வால்நட்சில் உள்ளன.

    MORE
    GALLERIES

  • 610

    மூளை ஆரோக்கியம் முதல் விந்தணுக்களின் தரம் வரை... தினமும் 5 வால்நட்ஸ் சாப்பிட்டு வந்தால் கிடைக்கும் நன்மைகள்..!

    குடல் ஆரோக்கியத்திற்கு உதவுகிறது : இந்த அக்ரூட் பருப்புகள் அதாவது வால்நட் நல்ல செரிமானம், வளர்சிதை மாற்றம் மற்றும் வலுவான நோய் எதிர்ப்பு சக்தியை ஊக்குவிக்கின்றன. அவற்றில் இருக்கும் ப்ரீபயாடிக் பண்புகள், குடல் ஆரோக்கியத்தை ஆதரிக்கிறது. மேலும் நன்மை பயக்கும் பாக்டீரியாக்களின் வளர்ச்சியை மேம்படுத்துகிறது.

    MORE
    GALLERIES

  • 710

    மூளை ஆரோக்கியம் முதல் விந்தணுக்களின் தரம் வரை... தினமும் 5 வால்நட்ஸ் சாப்பிட்டு வந்தால் கிடைக்கும் நன்மைகள்..!

    இதயத்திற்கு நல்லது : வீக்கத்தைக் குறைப்பதன் மூலமும், இரத்த நாளங்களின் செயல்பாட்டை மேம்படுத்துவதன் மூலமும் இதய ஆரோகியத்திற்கு வழிவகுக்கிறது. இந்த பருப்புகளில் உள்ள வைட்டமின் ஈ, ஒரு காமா-டோகோபெரோல் வடிவத்தில் உள்ளது. இது இதய பாதுகாப்பிற்கு மிகவும் உதவுகிறது. மேலும் ஒமேகா -3, கொழுப்பின் அளவைக் குறைக்கவும், வீக்கத்தைக் குறைக்கவும் மற்றும் தமனிகள் வழியாக இரத்த ஓட்டத்தை மேம்படுத்தவும் உதவுகிறது.

    MORE
    GALLERIES

  • 810

    மூளை ஆரோக்கியம் முதல் விந்தணுக்களின் தரம் வரை... தினமும் 5 வால்நட்ஸ் சாப்பிட்டு வந்தால் கிடைக்கும் நன்மைகள்..!

    தலைமுடி உதிர்வை குறிக்கிறது : வால்நட்ஸை தினமும் சாப்பிட்டால், அதில் உள்ள பயோடின் என்னும் வைட்டமின் பி7, தலைமுடியின் வலிமையை அதிகரித்து தலைமுடி உதிர்வதை குறைத்து, முடியின் வளர்ச்சியை அதிகரிக்கும். எனவே தலைமுடி சம்பந்தப்பட்ட பிரச்சனைகளை சந்திப்பவர்கள் வால்நட்ஸை சாப்பிடுவது மிகவும் நல்லது.

    MORE
    GALLERIES

  • 910

    மூளை ஆரோக்கியம் முதல் விந்தணுக்களின் தரம் வரை... தினமும் 5 வால்நட்ஸ் சாப்பிட்டு வந்தால் கிடைக்கும் நன்மைகள்..!

    விந்தணுக்களின் வளர்ச்சிக்கு நல்லது : வால்நட்ஸ் விந்தணுக்களின் தரத்தை அதிகரிப்பதுடன், விந்து இயக்கம் மற்றும் விந்தணுவின் உருவகம் ஆகியவற்றை மேம்படுத்துகிறது. ஆகவே தான் ஆண்கள் தினமும் 5 வால்நட்ஸை சாப்பிடுவது நல்லது என்று கூறப்படுகிறது.

    MORE
    GALLERIES

  • 1010

    மூளை ஆரோக்கியம் முதல் விந்தணுக்களின் தரம் வரை... தினமும் 5 வால்நட்ஸ் சாப்பிட்டு வந்தால் கிடைக்கும் நன்மைகள்..!

    இது தவிர, சருமத்தில் சுருக்கங்கள் வருவதைத் தடுக்க உதவுகிறது :  மேலும், ப்ரீ ராடிக்கல்களிடமிருந்து சருமத்திற்கு பாதுகாப்பு அளிக்கும். சமீபத்திய ஆய்வு ஒன்றில் வால்நட்ஸ் கணைய புற்றுநோயின் அபாயத்தைத் தடுப்பதாக தகவல் வெளியாகியிருந்தது. வால்நட்ஸ்களை நாம் தினமும் சாப்பிடுவதால் உடல் ஆரோக்கியமாகவும், புத்துணர்ச்சியுடனும் இருக்க உதவுகிறது.

    MORE
    GALLERIES