முகப்பு » புகைப்பட செய்தி » லைஃப்ஸ்டைல் » நீங்கள் சிக்கன் பிரியரா..? அதன் நன்மைகள் தெரிஞ்சா தினமும் சாப்பிடுவீங்க..!

நீங்கள் சிக்கன் பிரியரா..? அதன் நன்மைகள் தெரிஞ்சா தினமும் சாப்பிடுவீங்க..!

கோழிக்கறியில் அதிக அளவு புரதம் உள்ளது, இது உங்கள் உடலுக்கு நன்மை பயக்கும். குறிப்பாக நீங்கள் வேலை செய்யும் உங்களுக்கு அதிக ஆற்றலை கொடுக்கும். இது ஜீரணிக்க எளிதானது. ஒரு நாளைக்கு ஒரு முறை கோழிக்கறி சாப்பிடுவது உங்கள் உடலை வலுவாக வைக்க உதவும்.

  • 111

    நீங்கள் சிக்கன் பிரியரா..? அதன் நன்மைகள் தெரிஞ்சா தினமும் சாப்பிடுவீங்க..!

    இந்த உலகில் சிக்கன் பிடிக்காதவர்கள் இருக்க முடியாது. ஏனென்றால், சிக்கனை வைத்து சமைக்கும் அனைத்து உணவுகளுக்கும் நாம் அடிமைகள். நமது வீட்டில் சிக்கன் சமைக்கும் நாளில் மட்டும், நாம் சப்புக்கொட்டி வயிறு புடைக்க சாப்பிடுவது உண்டு. நம்மில் பலருக்கு தோன்றும், தினமும் சிக்கன் சாப்பிடுவது பாதுகாப்பானதா என்று?... நம்மில் பலர் தினமும் அசைவ உணவு சாப்பிட்டால் அது உடலுக்கு கேடு என நினைப்போம். ஆனால், அந்த நம்பிக்கை 50% தவறானது. அளவுக்கு மீறினால் அமிர்தமும் நஞ்சு என்ற பழமொழி நாம் அனைவருக்கும் தெரிந்த ஒன்று. அந்தவகையில், சிக்கனை அளவுக்கு அதிகமாக சாப்பிடுவது ஆபத்தானது தான். ஆனால், தினமும் சரியான அளவு சிக்கன் சாப்பிட்டால் உடலுக்கு பல்வேறு நன்மைகள் கிடைக்கும்.

    MORE
    GALLERIES

  • 211

    நீங்கள் சிக்கன் பிரியரா..? அதன் நன்மைகள் தெரிஞ்சா தினமும் சாப்பிடுவீங்க..!

    சுகாதார நிபுணர்களின் கூற்றுப்படி, இறைச்சியை சமைக்கும் முறை மற்றும் நீங்கள் சாப்பிடும் இறைச்சி வகை ஆகியவற்றைக் கருத்தில் கொள்ள வேண்டியது அவசியம். குறிப்பாக, ஒருவேளை நீங்கள் தினமும் சிக்கன் சாப்பிட விரும்புபவராகவோ அல்லது ஆசைப்படுபவராகவோ இருந்தால், இந்த பதிவு உங்களுக்கானது. ஏனென்றால், தினமும் சிக்கன் சாப்பிட்டால் கிடைக்கும் நன்மைகள் பற்றி காணலாம்.

    MORE
    GALLERIES

  • 311

    நீங்கள் சிக்கன் பிரியரா..? அதன் நன்மைகள் தெரிஞ்சா தினமும் சாப்பிடுவீங்க..!

    எலும்புகள் வலுவாகும் : கோழிக்கறியில் நிறைந்துள்ள புரதம் ஆஸ்டியோபோரோசிஸ் (osteoporosis) எனப்படும் எலும்பு தொடர்பான பிரச்சனையை தடுக்கிறது. அதுமட்டும் அல்ல, சிக்கன் ஆரோக்கியமான எலும்புகளை பராமரிப்பதிலும் முக்கிய பங்கு வகிக்கின்றது.

    MORE
    GALLERIES

  • 411

    நீங்கள் சிக்கன் பிரியரா..? அதன் நன்மைகள் தெரிஞ்சா தினமும் சாப்பிடுவீங்க..!

    நினைவாற்றல் மேம்படும் : சிக்கனில் உள்ள கோலின் மற்றும் வைட்டமின் B12 நினைவாற்றல் மேம்பாட்டிற்கு உதவுகிறது. அதிகளவு கோலின் உட்கொள்வபர்களின் நினைவாற்றல் சிறப்பாக இருப்பதாக பல ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன.

    MORE
    GALLERIES

  • 511

    நீங்கள் சிக்கன் பிரியரா..? அதன் நன்மைகள் தெரிஞ்சா தினமும் சாப்பிடுவீங்க..!

    உடல்சோர்வை குறைக்கும் : இரத்த சோகை, இரும்புச்சத்து குறைப்பாடு உள்ளவர்கள் அடிக்கடி உடல் சோர்வு பிரச்சனையை சந்திப்பார்கள். அடிக்கடி சிக்கன் உட்கொள்வது உடலுக்கு தேவையான இரும்புச்சத்தை அளிக்கிறது. அத்துடன், உடல் சோர்வை நீக்கி நிம்மதியான உறக்கத்திற்கு வழிவகுக்கிறது.

    MORE
    GALLERIES

  • 611

    நீங்கள் சிக்கன் பிரியரா..? அதன் நன்மைகள் தெரிஞ்சா தினமும் சாப்பிடுவீங்க..!

    புத்துணர்ச்சி கொடுக்கும் : கோழிக்கறியில் செரோடோனின் (Serotonin) ஹார்மோன் உற்பத்திக்கு உதவும் டிரிப்டோபான் (Tryptophan) உள்ளது. இந்த செரோடோனின் ஹார்மோன் உடலின் புத்துணர்ச்சிக்கு உதவும் ஹார்மோன் ஆகும். இதனால், உடல் சோர்வு நீங்கி உடலுக்கு புத்துணர்ச்சி கிடைக்கும்.

    MORE
    GALLERIES

  • 711

    நீங்கள் சிக்கன் பிரியரா..? அதன் நன்மைகள் தெரிஞ்சா தினமும் சாப்பிடுவீங்க..!

    இதய நோய்களை குறைக்கும் : சிக்கன் துண்டுகளை எண்ணெய் சேர்க்காமல் அவித்து சாப்பிடுவது, தேவையற்ற LDL கொழுப்பை குறைத்து இதய ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவும். எண்ணெயில் பொரித்து, வறுத்து சாப்பிடுவது இதய பிரச்சனைகளுக்கு வழிவகுக்கும்.

    MORE
    GALLERIES

  • 811

    நீங்கள் சிக்கன் பிரியரா..? அதன் நன்மைகள் தெரிஞ்சா தினமும் சாப்பிடுவீங்க..!

    ஆரோக்கியமான கருவுறதல் : இயல்பாக சிக்கன் “பெண் குழந்தைகளுக்கு அவ்வளவு நல்லது அல்ல” என வீட்டில் உள்ள பெரியவர்கள் கூறுவதுண்டு. இது ஒரு பக்கம் இருந்தாலும், பெண்கள் ஆரோக்கியமான கருவுறதல் செயல்பாடு மற்றும் ஆண்களின் சிறந்த மற்றும் தரமான விந்து உற்பத்திக்கு உதவும் என ஆய்வு முடிவுகள் கூறுகின்றனர். அந்தவகையில், குழந்தை பெற்றுக்கொள்ள விரும்பும் பெண்கள் மற்றும் ஆண்கள் தினசரி போதுமான அளவு சிக்கன் எடுத்துக்கொள்வது நல்லது.

    MORE
    GALLERIES

  • 911

    நீங்கள் சிக்கன் பிரியரா..? அதன் நன்மைகள் தெரிஞ்சா தினமும் சாப்பிடுவீங்க..!

    முழுமையான உணவு : கோழிக்கறியில் நிறைந்துள்ள புரதத்தின் மூலங்கள், நீங்கள் குறைவான உணவு எடுத்துக்கொண்டாலும், நிறைவான உணர்வை கொடுக்கக்கூடியது. அதாவது, உங்களின் யானைப்பசியை போக்க, சிறிதளவு சிக்கன் போதுமானது. உடல் எடையை குறைக்க டயட் செய்பவர்களுக்கு இது மிகவும் நல்ல உணவு.

    MORE
    GALLERIES

  • 1011

    நீங்கள் சிக்கன் பிரியரா..? அதன் நன்மைகள் தெரிஞ்சா தினமும் சாப்பிடுவீங்க..!

    புற்றுநோய் அபாயம் குறையும் : தினசரி உங்கள் உணவில் கோழிக்கறியை சேர்த்து வந்தால், பெருங்குடல் புற்றுநோயின் அபாயம் குறையும் என ஆய்வுகள் தெரிவிக்கின்றன. கோழிக்கறியில் உள்ள சேர்மங்கள் தேவையற்ற கொழுப்புகளின் தேக்கத்தை குறைப்பதால், புற்றுநோய் அபாயத்தை குறைப்பதில் முக்கியப்பங்கு வகுக்கிறது.

    MORE
    GALLERIES

  • 1111

    நீங்கள் சிக்கன் பிரியரா..? அதன் நன்மைகள் தெரிஞ்சா தினமும் சாப்பிடுவீங்க..!

    ஊட்டச்சத்து நிறைந்தது : கோழிக்கறியில் பாஸ்பரஸ், கால்சியம், புரதம், கலோரிகள் மற்றும் உடலுக்கு ஆரோக்கியம் தரும் கொழுப்புகள் நிறைந்துள்ளது. இவை, நம் உடலின் சீரான இயக்கத்திற்கு தேவையான ஊட்டச்சத்துக்களின் சரியான அளவை வழங்குகிறது. எனவே, தினசரி போதுமான அளவு சிக்கனை உங்கள் உணவில் சேர்த்துக்கொள்வது நல்லது.

    MORE
    GALLERIES