Hot Water Benefits : நம் உடல் ஆரோக்கியமாக இருக்க, தண்ணீர் குடிப்பது அவசியம். தினமும் போதுமான அளவு தண்ணீரை குடிப்பது மிகவும் முக்கியமான ஒன்று. நம் உடலின் மெட்டபாலிசம் மற்றும் ஆரோக்கியம் சீராக இருக்க 8 முதல் 10 கிளாஸ் தண்ணீர் தினசரி எடுத்து கொள்வது அவசியம். அன்றாடம் குடிக்கும் நீரில் வெந்நீர் இடம் பெறுவது தண்ணீர் குடிப்பதால் கிடைக்கும் நன்மைகளை மேலும் அதிகரிக்கும். பிரபல ஆயுர்வேத மருத்துவர் டாக்டர் நித்திகா, சோஷியல் மீடியாவான இன்ஸ்டாவில் தினசரி வெந்நீரை குடிப்பதால் கிடைக்கும் பல நன்மைகளை பற்றிய தகவல்களை ஷேர் செய்து உள்ளார்.