முகப்பு » புகைப்பட செய்தி » லைஃப்ஸ்டைல் » தினமும் கிரீன் டீ அருந்துவதால் இத்தனை நன்மைகளா..?

தினமும் கிரீன் டீ அருந்துவதால் இத்தனை நன்மைகளா..?

உலகிலேயே ஜப்பானியர்கள் தான் கிரீன் டீயை அதிகம் பருகுகிறார்கள். இதனால் தான் அவர்கள் நீண்ட நாட்கள் இளமையுடனும், ஆரோக்கியமாகவும் வாழ்ந்து வருகிறார்கள்.

 • 112

  தினமும் கிரீன் டீ அருந்துவதால் இத்தனை நன்மைகளா..?

  இன்று உலகம் முழுவதும் மக்களிடையே மிகவும் பிரபலமாக இருக்கும் ஒரு ஆரோக்கியமான டீ என்றால் அது கிரீன் டீ ஆகத் தான் இருக்கும். இன்று ஏராளமானோர் பால், டீ குடிப்பதை விட, கிரீன் டீயைத் தான் அன்றாடம் பருகி வருகின்றனர். பலருக்கு கிரீன் டீ குடித்தால், உடலுக்கு நல்லது என்பது தெரியும். கிரீன் டீ குடிப்பதால் பல முக்கியமான நன்மைகள் உண்டு.

  MORE
  GALLERIES

 • 212

  தினமும் கிரீன் டீ அருந்துவதால் இத்தனை நன்மைகளா..?

  உலகிலேயே ஜப்பானியர்கள் தான் கிரீன் டீயை அதிகம் பருகுகிறார்கள். இதனால் தான் அவர்கள் நீண்ட நாட்கள் இளமையுடனும், ஆரோக்கியமாகவும் வாழ்ந்து வருகிறார்கள். இதற்கு கிரீன் டீயில் உள்ள உட்பொருட்களும், மருத்துவ குணங்களும் தான் காரணம். கிரீன் டீ மிகவும் சுவையுடன் இல்லாமல் இருக்கலாம். ஆனால் இதை ஒருவர் தினமும் காலையில் வெறும் வயிற்றில் குடித்தால் ஏராளமான நன்மைகளைப் பெறலாம். இக்கட்டுரையில் வெறும் வயிற்றில் கிரீன் டீ குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள் கொடுக்கப்பட்டுள்ளன.

  MORE
  GALLERIES

 • 312

  தினமும் கிரீன் டீ அருந்துவதால் இத்தனை நன்மைகளா..?

  உடல் எடை குறைவு: கிரீன் டீயானது உடல் எடையை குறைக்கவும், சரியான அளவிலான உடல் எடையை பராமரிக்கவும் பெரிதும் பயன்படுகிறது. மூச்சு சம்மந்தமான பிரச்சனைகளும் கிரீன் டீயால் சரியாகின்றன. இதில் உள்ள பாலீஃபீனால் என்னும் சத்து தான் உடல் எடையைக் குறைக்க உதவுகிறது. மேலும் மற்ற டீக்களை விட கிரீன் டீயில் தான் ஏராளமான கேட்டசின்கள் உள்ளன. உடல் எடை குறைக்க, கொழுப்பு குறைய, இதய ஆரோக்கியம் மேம்பட எனப் பல ஆரோக்கியச் செயல்பாடுகளுக்கு அழுத்தமாகப் பரிந்துரைக்கப்படுகிறது இந்த கிரீன் டீ. சாதாரண காபி, டீ-க்கு நல்ல மாற்றாக மாறிக்கொண்டிருக்கிறது இந்த சீனாவின் தேசிய பானம்.

  MORE
  GALLERIES

 • 412

  தினமும் கிரீன் டீ அருந்துவதால் இத்தனை நன்மைகளா..?

  சிறந்த டயட்டிற்கு: ஒரு கப் கிரின் டீயில் 30-50 மிகி காப்ஃபைன் உள்ளது. கிரீன் டீ எடையைக் குறைக்கும் என ஒரே நாளில் அளவுக்கு அதிகமாக குடித்தால், பக்கவிளைவுகளுடன் தான் உடல் எடையைக் குறைக்க முடியும். இதனை அளவாக தினமும் கப் என குடித்து வர பாதுகாப்பான வழியில் உடல் எடை குறையும். ஆகவே எடையைக் குறைக்க உதவும் பானங்களுள் சிறந்த ஒன்றாக கிரீன் டீயை சொல்லலாம்.

  MORE
  GALLERIES

 • 512

  தினமும் கிரீன் டீ அருந்துவதால் இத்தனை நன்மைகளா..?

  புற்றுநோய்க்கு கிரீன் டீ: ல ஆய்வுகளில் எபிகேலோகேட்டசின்3 கேலேட்டிற்கு, உடலில் வளரும் புற்றுநோய் செல்களின் வளர்ச்சியைத் தடுத்து அழிப்பதாக தெரிய வந்துள்ளது. மேலும் இந்த ஆன்டிஆக்ஸிடன்ட் இரத்தத்தை சுத்தம் செய்து, இதயத்தை ஆரோக்கியமாக வைத்துக்கொண்டு உடலில் தேவையற்ற கட்டிகளை வளரவிடாது. பெருங்குடல், மார்பகம் மற்றும் ப்ராஸ்டேட் புற்றுநோய் போன்றவை வருவதற்கான வாய்ப்புகளை கிரீன் டீ குறைக்கிறது.

  MORE
  GALLERIES

 • 612

  தினமும் கிரீன் டீ அருந்துவதால் இத்தனை நன்மைகளா..?

  நோயெதிர்ப்பு சக்தி : கிரீன் டீயில் தயனைன் உள்ளது. இந்த அமினோ அமிலம், நோயெதிர்ப்பு மண்டலத்தை வலிமையாக்கும் ஆன்டி-பாடிகளை வழங்கும். இதனால் உடலைத் தாக்கும் நோய்களின் எண்ணிக்கையும் குறையும்.

  MORE
  GALLERIES

 • 712

  தினமும் கிரீன் டீ அருந்துவதால் இத்தனை நன்மைகளா..?

  உடலுக்கு ஆற்றல்: வெறும் வயிற்றில் கிரீன் டீயைக் குடிக்கும் போது, அதில் உள்ள ஆன்டிஆக்ஸிடன்ட் மற்றும் காப்ஃபைன் உடலின் ஆற்றலை அதிகரித்து மெட்டபாலிசத்தை தூண்டி, கொழுப்புச் செல்களை கரையச் செய்து, உடல் எடை குறைய வழிவகுக்கும். இதனால் உடல் எடையை குறைக்க நினைப்பவர்கள் தினமும் க்ரீன் டீ அருந்தலாம்.

  MORE
  GALLERIES

 • 812

  தினமும் கிரீன் டீ அருந்துவதால் இத்தனை நன்மைகளா..?

  வாய் துர்நாற்றம்: கிரீன் டீயை ஒருவர் தினமும் குடித்து வந்தால், அதில் உள்ள உட்பொருட்கள் வாயை புத்துணர்ச்சியுடன் வைப்பதோடு, வாய் துர்நாற்ற பிரச்சனையில் இருந்தும் விடுவிக்கும்.

  MORE
  GALLERIES

 • 912

  தினமும் கிரீன் டீ அருந்துவதால் இத்தனை நன்மைகளா..?

  சர்க்கரை நோய்: கிரீன் டீயில் உள்ள பாலிஃபீனால், இரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவை சீராக்கி, சர்க்கரை நோய் வரும் அபாயத்தைக் குறைக்கும். கொரியன் ஆய்வு ஒன்றில், க்ரீன் டீயை குடிப்பதால், டைப்-2 சர்க்கரை நோயின் அபாயம் 33% குறைவாக தெரிய வந்துள்ளது.

  MORE
  GALLERIES

 • 1012

  தினமும் கிரீன் டீ அருந்துவதால் இத்தனை நன்மைகளா..?

  கொலஸ்ட்ரால்: கொலஸ்ட்ரால் பிரச்சனை இருப்பவர்கள், கிரீன் டீயை வெறும் வயிற்றில் ஒரு கப் குடித்தால், அதில் உள்ள மருத்துவ பண்புகள் உடலில் ஆங்காங்கு தேங்கியுள்ள கெட்ட கொலஸ்ட்ராலைக் கரைத்து, உடலை சிக்கென்று ஆரோக்கியமாக வைத்துக் கொள்ளும்.

  MORE
  GALLERIES

 • 1112

  தினமும் கிரீன் டீ அருந்துவதால் இத்தனை நன்மைகளா..?

  இரத்த அழுத்தம் / இதய நோய்: இரத்த அழுத்த பிரச்சனையால் கஷ்டப்படுபவர்கள், அன்றாடம் கிரீன் டீயைக் குடித்து வர, அது இரத்த அழுத்த பிரச்சனையைத் தடுப்பதாக ஆய்வுகளில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. கிரீன் டீ உடலில் உள்ள கெட்ட கொலஸ்ட்ராலைக் குறைப்பதால், அது இதய நோய் வரும் அபாயத்தைக் குறைத்து, இதயத்தின் ஆரோக்கியத்தை பாதுகாக்கும். எனவே இதய நோயின்றி வாழ கிரீன் டீ குடிக்கும் பழக்கத்தைக் கொள்ளுங்கள்.

  MORE
  GALLERIES

 • 1212

  தினமும் கிரீன் டீ அருந்துவதால் இத்தனை நன்மைகளா..?

  மூளை ஆரோக்கியம்: கிரீன் டீயில் காப்ஃபைனுடன், L-தயனைன் என்னும் அமினோ அமிலமும் உள்ளது. இவை இரண்டும் மூளையின் செயல்பாட்டை சீராக வைத்துக் கொள்வதோடு, அதன் ஆரோக்கியத்தையும் மேம்படுத்தும். ஆய்வு ஒன்றில், வாரத்திற்கு குறைந்தது 6 கப் கிரீன் டீ குடிப்பவர்களுக்கு, மூளை சம்பந்தப்பட்ட நோய்கள் தாக்கும் அபாயம் குறைவு என தெரிய வந்துள்ளது. கிரீன் டீயில் சிறிதளவு காஃபின் (Caffeine) இருக்கிறது. இது மூளையில் உள்ள நியூரோ டிரான்ஸ்மீட்டர்களைத் தூண்டி, நரம்பு இயக்கங்களைப் புத்துணர்ச்சி அடையச் செய்கிறது.இதனால் சுறுசுறுப்பான உணர்வு கிடைக்கும். மூளை நன்றாக இயங்கும்.

  MORE
  GALLERIES