முகப்பு » புகைப்பட செய்தி » லைஃப்ஸ்டைல் » இரும்பு பாத்திரங்களில் சமைத்தால் இரும்பு சத்து கிடைக்கும் என்பது உண்மையா..? நிபுணர் விளக்கம்

இரும்பு பாத்திரங்களில் சமைத்தால் இரும்பு சத்து கிடைக்கும் என்பது உண்மையா..? நிபுணர் விளக்கம்

Teflon பூசப்பட்ட அலுமினிய பாத்திரங்கள் அதன் ஒட்டாத சமையல் குணங்களால் பிரபலமான பிறகு வார்ப்பிரும்பு பாத்திரங்கள் முற்றிலும் புறக்கணிக்கப்பட்டது.

  • 18

    இரும்பு பாத்திரங்களில் சமைத்தால் இரும்பு சத்து கிடைக்கும் என்பது உண்மையா..? நிபுணர் விளக்கம்

    நம் கிச்சன்களில் பயன்படுத்தும் வெவ்வேறு சமையல் பாத்திரங்களில், cast iron அதாவது வார்ப்பிரும்பு பாத்திரங்கள் எப்போதும் ஸ்பெஷலானதாக குறிப்பிடப்படுகின்றன. வார்ப்பிரும்பு பாத்திரங்களில் சமைப்பது நமது உணவை இரும்புச் சத்து நிறைந்த உணவாக மாற்ற உதவும் ஆரோக்கியமான வழி என்று பல சமயங்களில் கேள்விப்பட்டிருப்போம். ஆனால், வார்ப்பிரும்பு பாத்திரங்கள் உண்மையில் நம் உணவில் Iron elements -களை உட்செலுத்த உதவுகின்றனவா.? இது குறித்து நிபுணர்கள் சிலர் கூறிய சுவாரஸ்ய தகவல்களை இப்போது பார்க்கலாம்.

    MORE
    GALLERIES

  • 28

    இரும்பு பாத்திரங்களில் சமைத்தால் இரும்பு சத்து கிடைக்கும் என்பது உண்மையா..? நிபுணர் விளக்கம்

    இந்த கேள்விக்கு பதிலளித்த அகமதாபாத் அப்பல்லோ மருத்துவமனையின் சீனியர் கிளினிக்கல் டயட்டிஷியன் ஜினல் பர்மர் (Jinal Parmar), வார்ப்பிரும்பு சமையல் பாத்திரங்கள் பெரும்பாலும் பழைய நாட்களை நினைவுக்கு கொண்டு வருகின்றன. இந்தியாவில், இரும்பு குக்வேர்களில் தயாரிக்கப்படும் உணவுகளை நிறைய பேர் உட்கொள்கின்றனர். இரும்பு பாத்திரங்களில் சமைப்பது ஆரோக்கிய நன்மைகளை வழங்குவதாக மக்கள் நம்புகிறார்கள். இதனடிப்படையில் வார்ப்பிரும்பு பாத்திரங்கள் மலிவு விலையிலும், நீடித்ததாகவும் இருக்கும் என்றும் அவர்கள் நம்பினர்.

    MORE
    GALLERIES

  • 38

    இரும்பு பாத்திரங்களில் சமைத்தால் இரும்பு சத்து கிடைக்கும் என்பது உண்மையா..? நிபுணர் விளக்கம்

    வார்ப்பிரும்பு பாத்திரங்கள் நேச்சுரலி நான்-ஸ்டிக் சமையல் பாத்திரங்கள் மற்றும் சுத்தம் செய்ய எளிதானவை. மேலும் இவை குறைந்த எண்ணெய் நுகர்வு, கேஸ், எலெக்ட்ரிக் அல்லது இன்டக்ஷன் போன்ற பல ஹீட் சோர்ஸ்களில் நன்கு வேலை செய்வதோடு உணவை நீண்ட நேரம் சூடாக வைத்திருக்க வெப்பத்தை தக்க வைக்கின்றன. சிறிது சுத்தம் மற்றும் கவனிப்புடன் இவை துருப்பிடிப்பதை தவிர்க்கலாம் மற்றும் பாத்திரங்களும் புத்தம் புதியதாக இருக்கும். பல ஆய்வுகள் மற்றும் ஆராய்ச்சிகள் இந்த பாத்திரங்களில் சமைப்பது உடலில் ஆக்ஸிஜன் அளவை மேம்படுத்துகிறது, இயற்கையாகவே ரத்தத்தில் ஹீமோகுளோபினை அதிகரிக்கிறது மற்றும் ரத்த சோகை சிகிச்சைக்கு பயனுள்ளதாக இருக்கும், குறிப்பாக குழந்தைகளுக்கு என்று வெளிப்படுத்தி இருப்பதாக கூறுகிறார் ஜினல் பர்மர்.

    MORE
    GALLERIES

  • 48

    இரும்பு பாத்திரங்களில் சமைத்தால் இரும்பு சத்து கிடைக்கும் என்பது உண்மையா..? நிபுணர் விளக்கம்

    நாராயண ஹெல்த் சிட்டியை சேர்ந்த சீனியர் டயட்டீஷியன் சுபர்ணா முகர்ஜி பேசுகையில், வார்ப்பிரும்பு மிகவும் பழமையான மற்றும் நீண்ட வரலாற்றை கொண்டுள்ளது, குறிப்பாக இதன் வெப்பத்தைத் தக்கவைக்கும் திறன் மற்றும் எளிதில் துருப்பிடிக்காத தரம் ஆகியவற்றிற்காக சமையல் பாத்திரங்களாக முன்பு அதிகம் பயன்படுத்தப்பட்டது. ஆனால் பாத்திரங்களின் உலகில் அலுமினியம் நுழைந்த பிறகு வார்ப்பிரும்பு பாத்திரங்களின் பயன்பாடு கொஞ்சம் கொஞ்சமாக குறைந்தது.

    MORE
    GALLERIES

  • 58

    இரும்பு பாத்திரங்களில் சமைத்தால் இரும்பு சத்து கிடைக்கும் என்பது உண்மையா..? நிபுணர் விளக்கம்

    Teflon பூசப்பட்ட அலுமினிய பாத்திரங்கள் அதன் ஒட்டாத சமையல் குணங்களால் பிரபலமான பிறகு வார்ப்பிரும்பு பாத்திரங்கள் முற்றிலும் புறக்கணிக்கப்பட்டது. ஆனால் Teflon கோட்டட் அலுமினிய பாத்திரங்களால் ஏற்படும் கெமிக்கல் விளைவுகள் உலகிற்கு தெரியவந்த பிறகு, பிரபல செஃப்ஸ் மற்றும் சமையல் வல்லுநர்கள் வார்ப்பிரும்பை மீண்டும் அறிமுகப்படுத்தி வருகின்றனர் என்றார்.

    MORE
    GALLERIES

  • 68

    இரும்பு பாத்திரங்களில் சமைத்தால் இரும்பு சத்து கிடைக்கும் என்பது உண்மையா..? நிபுணர் விளக்கம்

    எனினும், பல உடல்நல பிரச்சனைகளை மேற்கோள் காட்டி வார்ப்பிரும்புபாத்திரங்களை பயன்படுத்துவதற்கு எதிராக நிபுணர்கள் சில எச்சரிக்கைகளையும் விடுத்து உள்ளனர். இதுபற்றி பேசி இருக்கும் நிபுணர் சுபர்ணா முகர்ஜி, வார்ப்பிரும்பு பாத்திரங்கள் நம்முடைய உணவில் வெவ்வேறு அளவுகளில் இரும்புச் சத்தை சேர்க்கலாம் என்று உலகளவிலான ஆய்வுகள் நிரூபித்துள்ளன. ஆனால் இவற்றை சேர்ப்பதால் உணவில் இரும்பு சத்து சேரும் அளவு உணவின் pH அளவு, உணவைச் சமைக்க தேவைப்படும் நேரம் மற்றும் சமையல் பாத்திரங்களின் ஆயுளை பொறுத்தது என்பது தெளிவானது என்கிறார். இது குறித்து ஜினல் பர்மர் விளக்கம் அளிக்கையில், நீங்கள் ஒரு சில முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்தால், வார்ப்பிரும்பு பாத்திரங்களைப் பயன்படுத்துவது என்பது பாதுகாப்பானது தான்.

    MORE
    GALLERIES

  • 78

    இரும்பு பாத்திரங்களில் சமைத்தால் இரும்பு சத்து கிடைக்கும் என்பது உண்மையா..? நிபுணர் விளக்கம்

    உதாரணமாக தக்காளி கறி அல்லது தயிர் அல்லது புளி பேஸ்ட் பயன்படுத்தும் அமில உணவுகளை சமைப்பது அல்லது இரும்பு பாத்திரத்தில் நீண்ட நேரம் வைப்பது உள்ளிட்டவற்றை தவிர்க்க வேண்டும். ஏனென்றால் நீங்கள் இரும்பு பாத்திரங்களில் அமில உணவை சமைக்கும் போது, ​​உணவானது உலோக மேற்பரப்புடன் வினைபுரிந்து, உணவில் இரும்பை வெளியிடுகிறது, இது விஷத்தன்மையுடையதாக இருக்கும் என எச்சரிக்கிறார். இப்படிப்பட்ட ரசாயன கலவைகளை தொடர்ந்து உட்கொள்வது வாந்தி, வயிற்றுப்போக்கு, பிங்க் சிறுநீர், கருப்பு மலம் மற்றும் நாள்பட்ட விளைவுகள் இருந்தால் கல்லீரல் பாதிப்பு உள்ளிட்ட பல உடல்நல சிக்கல்களுக்கு வழிவகுக்கும் என்கிறார்.

    MORE
    GALLERIES

  • 88

    இரும்பு பாத்திரங்களில் சமைத்தால் இரும்பு சத்து கிடைக்கும் என்பது உண்மையா..? நிபுணர் விளக்கம்

    வார்ப்பிரும்பு பாத்திரங்களை பயன்படுத்துவதை யார் தவிர்க்க வேண்டும்..? வார்ப்பிரும்பு பாத்திரங்களை பயன்படுத்தி தயாரிக்கப்படும் வெவ்வேறு உணவுகளில் இரும்பு கசிவின் சரியான அளவைப் புரிந்து கொள்ள பொருத்தமான ஆய்வுகள் இல்லை. அதே போல வார்ப்பிரும்பு பாத்திரங்களை பயன்படுத்தி சமைப்பதன் மூலம் அதிகப்படியான இரும்பு உறிஞ்சுதலால் ஏற்படும் நோய்கள் பற்றியும் தற்போது எதுவும் நிரூபிக்கப்படவில்லை. ஆனால் ஹீமோக்ரோமாடோசிஸ் (Hemochromatosis) நிலை உள்ளவர்கள் தங்கள் உணவில் இரும்புச்சத்து அதிகம் இருப்பதைத் தவிர்க்க வார்ப்பிரும்பு பாத்திரங்களை தவிர்க்க வேண்டும். ஏனெனில் இவர்கள் தங்கள் உணவில் மிதமான இரும்பு சத்தை மட்டுமே சேர்த்து கொள்ள வேண்டும் என்கிறார் சுபர்ணா முகர்ஜி.

    MORE
    GALLERIES