முகப்பு » புகைப்பட செய்தி » காஃபி குடித்தால் தூக்கம் களையும் என்பது உண்மையா..? தெரிந்துகொள்ளுங்கள்..!

காஃபி குடித்தால் தூக்கம் களையும் என்பது உண்மையா..? தெரிந்துகொள்ளுங்கள்..!

காஃபியை ஒரு குறிப்பிட்ட வரம்பிற்குள் உட்கொண்டால், அது உடலுக்கு எந்த தீங்கையும் ஏற்படுத்தாது. அதாவது, ஒருவர் ஒரு நாளைக்கு 4 கப் காஃபி வரை உட்கொள்ளலாம். அதற்கு மேல் குடிப்பது உடலுக்கு பாதுகாப்பானது அல்ல.

  • 17

    காஃபி குடித்தால் தூக்கம் களையும் என்பது உண்மையா..? தெரிந்துகொள்ளுங்கள்..!

    தேர்வு காலம் துவங்கிவிட்டது. படிப்பில் கவனம் செலுத்த வேண்டியது மாணவர்களின் கடமை மட்டும் அல்ல, பெற்றோர்களின் கடமையும் ஆகும். தங்களின் குழந்தைகள் படிக்கும் போது, பெற்றோர்கள் அவர்களுக்கு உதவ வேண்டும். நம்மில் சிலர் குழந்தைகள் இரவில் படிக்கும் போது அவர்கள் தூங்காமல் இருக்க அடிக்கடி காஃபி போட்டு கொடுப்போம். காஃபி எப்படி உறக்கத்தை கட்டுப்படுத்துகிறது என எப்போதாவது நீங்கள் யோசித்தது உண்டா?. அது நமது உடலில் என்ன செய்கிறது என இங்கே காணலாம்.

    MORE
    GALLERIES

  • 27

    காஃபி குடித்தால் தூக்கம் களையும் என்பது உண்மையா..? தெரிந்துகொள்ளுங்கள்..!

    காஃபியை ஒரு குறிப்பிட்ட வரம்பிற்குள் உட்கொண்டால், அது உடலுக்கு எந்த தீங்கையும் ஏற்படுத்தாது. அதாவது, ஒருவர் ஒரு நாளைக்கு 4 கப் காஃபி வரை உட்கொள்ளலாம். அதற்கு மேல் குடிப்பது உடலுக்கு பாதுகாப்பானது அல்ல. அதிகமாக காஃபி குடிப்பதால் ஏற்படும் பக்கவிளைவுகளை விவரிக்க முடியாவிட்டாலும், இது தொடர்ச்சியான தலைவலி, சீரற்ற இதயத் துடிப்புக்கு வழிவகும்.

    MORE
    GALLERIES

  • 37

    காஃபி குடித்தால் தூக்கம் களையும் என்பது உண்மையா..? தெரிந்துகொள்ளுங்கள்..!

    காஃபி காதலர்கள் தான் குடிக்கும் ஒவ்வொரு கப் காபியிலும் நீங்கள் உட்கொள்ளும் சர்க்கரையின் அளவைப் பற்றி கவனமாக இருக்க வேண்டும். ஏனென்றால், சர்க்கரை உடலுக்கு தீங்கு விளைவிக்கும். அதிக அளவு சர்க்கரை எடுத்துக்கொண்டால் மனநிலை தொடர்பான பாதிப்புகளை உண்டாக்கும் என ஆய்வுகள் கூறுகின்றனர். இது தவிர அதிக அளவு சர்க்கரை வாழ்நாளை குறைக்கும் எனவும் கூறுகிறது. பல்வறு உடல்நல பிரச்சனையையும் ஏற்படுத்துகிறது.

    MORE
    GALLERIES

  • 47

    காஃபி குடித்தால் தூக்கம் களையும் என்பது உண்மையா..? தெரிந்துகொள்ளுங்கள்..!

    காஃபி உங்களை நாள் முழுவதும் உறங்காமல் வைக்கும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. ஆனால், அதிலிருந்து கிடைக்கும் ஆற்றல் தற்காலிகமானது. இரவில் உங்களுக்கு கிடைக்கும் ஆற்றலை, பகலில் திருப்பி கொடுக்க வேண்டும். அதாவது, பகலில் தூக்கம் வரலாம். அதிகமாக காபி உட்கொள்வதை காஃபின் க்ராஷ் (caffeine crash) என்று அழைக்கின்றனர். இது சோர்வு, கவனம் செலுத்துவதில் சிரமம் மற்றும் அலைப்பாயும் மனநிலைக்கு வழிவகுக்கும்.

    MORE
    GALLERIES

  • 57

    காஃபி குடித்தால் தூக்கம் களையும் என்பது உண்மையா..? தெரிந்துகொள்ளுங்கள்..!

    காபியின் பாதகமான விளைவுகள் : இன்றைய காலத்தில் காபி அல்லது காஃபி தண்ணீரை போல அடிக்கடி குடிக்கும் ஒரு உணவாக மாறிவிட்டது. ஆனால், இதில் நல்ல விஷயங்களை விட, அதிக பக்க விளைவுகளை ஏற்படுத்தும். மக்கள் உளவியல் உணர்வுகளை குறைக்க விரும்புவதால் காஃபினுக்கு அடிமையாகிறார்கள் என மருத்துவர்கள் கூறுகின்றனர். ஏனென்றால், தங்களின் அதீத சிந்தனைகளுக்கு தற்காலிக தீர்வு காஃபி மூலம் கிடைக்கிறதாம்.

    MORE
    GALLERIES

  • 67

    காஃபி குடித்தால் தூக்கம் களையும் என்பது உண்மையா..? தெரிந்துகொள்ளுங்கள்..!

    காஃபி நமது நியூரான்களில் டோபமைன் மற்றும் செரோடோனின் ஆகியவற்றை உற்பத்தி செய்கிறது. இது நம் உடலை ஓய்வெடுக்க உதவுகிறது. ஆனால், தினமும் காபி உட்கொள்வது உங்கள் தூக்க சுழற்சியை பாதிக்கும், செரிமான பிரச்சனை, பசியின்மை மற்றும் நோயெதிர்ப்பு சக்தியை குறைக்கலாம். இதன் விளைவாக ஒருவரின் வாசிப்புத் திறன், அறிவாற்றல் செயல்பாடுகள், பதட்டம், காலையில் சோர்வு மற்றும் ஒரு நபரின் வளர்சிதை மாற்றத்தால் வயது முதிர்வு பிரச்சனை ஏற்படலாம்.

    MORE
    GALLERIES

  • 77

    காஃபி குடித்தால் தூக்கம் களையும் என்பது உண்மையா..? தெரிந்துகொள்ளுங்கள்..!

    ஒருவர் எவ்வளவு காபி குடிக்கலாம் : ஒரு நாளைக்கு 1 முதல் 2 கப் பாலுடன் சேர்த்து சாப்பிடுவது நல்லது. கருப்பு காபி அல்லது இரவு நேரங்களில் கண் விழித்து படிக்க காஃபி குடிப்பது வளர்சிதை மாற்றத்தை அதிகரிக்கும் என மருத்துவ ஊட்டச்சத்து நிபுணர்கள் பரிந்துரைக்கின்றனர். அளவுக்கு மீறினால் அமிர்தமும் நஞ்சு என்ற பழமொழி நாம் அனைவருக்கும் அறிந்ததே. எனவே, அதற்கு ஏற்றார் போல நாம் இருந்தால் மேம்படும்.

    MORE
    GALLERIES