முகப்பு » புகைப்பட செய்தி » லைஃப்ஸ்டைல் » அவரைக்காயில் இத்தனை நன்மைகளா..? தெரிஞ்சுக்கிட்டா மிஸ் பண்ணவே மாட்டீங்க..!

அவரைக்காயில் இத்தனை நன்மைகளா..? தெரிஞ்சுக்கிட்டா மிஸ் பண்ணவே மாட்டீங்க..!

எடையை குறைக்கும் முயற்சியில் இருப்பவர்கள் தங்கள் டயட்டில் அடிக்கடி அவரையை சேர்த்து கொள்ளலாம்.

 • 19

  அவரைக்காயில் இத்தனை நன்மைகளா..? தெரிஞ்சுக்கிட்டா மிஸ் பண்ணவே மாட்டீங்க..!

  ஆண்டு முழுவதும் எல்லா சீசன்களிலும் எளிதில் கிடைக்க கூடியவை அவரைக்காய். இது இந்தியன் பீன்ஸ், ஹைசின்த் பீன், பீல்ட் பீன், லேப்லாப் பீன், மியூசிக்கல் பீன், டோங்கா பீன் மற்றும் வைல்ட் பீன் என்று பெயர்களில் குறிப்பிடப்படுகிறது. நம் அன்றாட உணவுகளில் பயன்படுத்து கூடிய வகையில் மிகவும் பொதுவான காய்கறிகளில் ஒன்றாக கிடைக்க கூடிய அவரையின் இலைகள், வேர்கள், விதைகள், காய்கள் மற்றும் பூக்கள் என அனைத்துமே நாம் உண்ண கூடிய அளவிற்கு ஏராளமான நன்மைகளை கொண்டுள்ளன. முக்கிய ஊட்டச்சத்துக்கள், வைட்டமின்ஸ், மினரல்ஸ் மற்றும் லிப்பிட்ஸ் உள்ளிட்ட பலவற்றின் ஆற்றல் மையமாக அவரை தாவரம் இருக்கிறது.

  MORE
  GALLERIES

 • 29

  அவரைக்காயில் இத்தனை நன்மைகளா..? தெரிஞ்சுக்கிட்டா மிஸ் பண்ணவே மாட்டீங்க..!

  எனவே போதுமான அளவு அவரை காய்களை நம் உணவில் சேர்ப்பது நம் உடலில் நோய்கள் மற்றும் குறைபாடுகள் ஏற்படாமல் தடுக்க உதவுகிறது. அவரையில் உள்ள ஆன்டிஆக்ஸிடன்ட்ஸ் நம் சருமம் வயதாகும் செயல்முறையை மெதுவாக்க உதவுகின்றன. மேலும் அவரை காய்களில் நிறைவுற்ற கொழுப்பு, கொலஸ்ட்ரால் மற்றும் சோடியம் மிக குறைந்த அளவில் உள்ளது.

  MORE
  GALLERIES

 • 39

  அவரைக்காயில் இத்தனை நன்மைகளா..? தெரிஞ்சுக்கிட்டா மிஸ் பண்ணவே மாட்டீங்க..!

  தவிர இதில் கால்சியம், புரோட்டின், பாஸ்பரஸ், பொட்டாசியம், துத்தநாகம்,காப்பர், மெக்னீசியம் மற்றும் மாங்கனீஸ் உள்ளிட்டவை நிறைந்துள்ளன. பல்வேறு ஊட்டச்சத்துக்கள் மிக்க அவரைக்காயை உங்கள் டயட்டில் சேர்த்து கொள்வதால் கிடைக்கும் அற்புத நன்மைகளை இங்கே தெரிந்து கொள்ளுங்கள்.

  MORE
  GALLERIES

 • 49

  அவரைக்காயில் இத்தனை நன்மைகளா..? தெரிஞ்சுக்கிட்டா மிஸ் பண்ணவே மாட்டீங்க..!

  அவரையில் ஜிங் அதிகம் காணப்படுவதால் புற்றுநோய்க்கு எதிராக போராட மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது. புற்றுநோய் எதிர்ப்பு பாதுகாப்பு வழிமுறைகளில் துத்தநாகத்தின் பங்கு தொடர்பாக நடத்தப்பட்ட ஆராய்ச்சி ஒன்றில், ஜிங்கின் ஆன்டி-கேன்சர் எஃபக்ட் பெரும்பாலும் அதன் ஆன்டிஆக்ஸிடன்ட்ஸ் பண்புகளுடன் தொடர்புடையது என கண்டறியப்பட்டது. மேலே குறிப்பிட்டது போல இதே ஆன்டிஆக்ஸிடன்ட்ஸ் தான் நம்முடைய வயதான செயல்முறையை மெதுவாக்கவும், நரம்பியல் நோய்களைத் தடுக்கவும் உதவுகின்றன.

  MORE
  GALLERIES

 • 59

  அவரைக்காயில் இத்தனை நன்மைகளா..? தெரிஞ்சுக்கிட்டா மிஸ் பண்ணவே மாட்டீங்க..!

  அவரைக்காயை டயட்டில் சேர்த்து கொள்வது எல்டிஎல் எனப்படும் கெட்ட கொலஸ்ட்ராலின் அளவை குறைக்க உதவி இதய நோய்களை தடுக்கிறது. மேலும் இந்த காயில் அடங்கியிருக்கும் வைட்டமின் பி 1, ஆரோக்கியமான வென்ட்ரிகுலர் செயல்பாட்டை பராமரிக்க உதவுகிறது மற்றும் இதய செயலிழப்பை தடுக்கிறது. நரம்புகளிலிருந்து தசைகளுக்கு செய்திகளை அனுப்பும் நரம்பியக்கடத்தியான அசிடைல்கொலின் உற்பத்திக்கு வைட்டமின் பி1 இன்றியமையாதது.

  MORE
  GALLERIES

 • 69

  அவரைக்காயில் இத்தனை நன்மைகளா..? தெரிஞ்சுக்கிட்டா மிஸ் பண்ணவே மாட்டீங்க..!

  அவரையில் இருக்கும் கரையாத ஃபைபர் சத்து (insoluble fibre), மலத்தை பெருமளவில் வெளியேற்றுகிறது. அதே நேரம் இதில் உள்ள கரையக்கூடிய ஃபைபர் சத்து (soluble fibre) நமது செரிமானத்தை மேம்படுத்த உதவி வீக்கம், அஜீரணம் மற்றும் மலச்சிக்கல் உள்ளிட்ட சிக்கல்களை தடுக்க உதவுகிறது. மேலும் அவரைக்காயை டயட்டில் சேர்ப்பது வாந்தி, அல்சர், வயிற்றுப்போக்கு, குடற்புழுக்கள் போன்ற வயிற்று கோளாறுகளை சரி செய்ய உதவுகிறது.

  MORE
  GALLERIES

 • 79

  அவரைக்காயில் இத்தனை நன்மைகளா..? தெரிஞ்சுக்கிட்டா மிஸ் பண்ணவே மாட்டீங்க..!

  அவரைக்காயில் அடங்கி இருக்கும் வைட்டமின் டி, கால்சியம், பாஸ்பரஸ் உள்ளிட்ட அத்தியாவசிய ஊட்டச்சத்துக்கள் நம் எலும்புகள் மாற்று பற்களின் ஆரோக்கியம் மற்றும் வலிமையை பராமரிக்க, பற்சிதைவுகளை தடுக்க உதவுகின்றன.

  MORE
  GALLERIES

 • 89

  அவரைக்காயில் இத்தனை நன்மைகளா..? தெரிஞ்சுக்கிட்டா மிஸ் பண்ணவே மாட்டீங்க..!

  இதிலிருக்கும் பொட்டாசியம் தசைகளை வலுப்படுத்த, தசை பிடிப்புகளுக்கு நிவாரணமளிக்க உதவுகிறது.அவரையில் இருக்கும் மாங்கனீஸ், ஜிங்க் உள்ளிட்ட மினரல்ஸ் நுரையீரல் மற்றும் சுவாச நோய்களை சமாளிக்க உதவுகின்றன. மேலும் இது ஹார்மோன்களை சமநிலைப்படுத்த உதவும் அமினோ ஆசிட்களை கொண்டுள்ளது.

  MORE
  GALLERIES

 • 99

  அவரைக்காயில் இத்தனை நன்மைகளா..? தெரிஞ்சுக்கிட்டா மிஸ் பண்ணவே மாட்டீங்க..!

  எடையை குறைக்கும் முயற்சியில் இருப்பவர்கள் தங்கள் டயட்டில் அடிக்கடி அவரையை சேர்த்து கொள்ளலாம். இதில் அடங்கியுள்ள காம்ப்ளக்ஸ் கார்ப்ஸ் முழுதாக உணர வைப்பதன் மூலம் நீண்ட நேரம் பசி உணர்வு இல்லாமல் இருக்க உதவுகிறது.

  MORE
  GALLERIES