உருளைக் கிழங்கை வைத்து பல வகையான உணவுகளை சமைக்கலாம். ஆனால் அது கார்போஹைட்ரேட் அதிகம் கொண்டது என்பதால் உடல் எடையை அதிகரிக்கும் என்பதே பெரும்பாலும் பேசப்படுகிறது. ஆனால் அது உண்மையில் ஆரோக்கியம் நிறைந்ததுதான். எந்த இயற்கை உணவும் உடலுக்குக் கெடுதல் அல்ல. அவரவர் வாழ்க்கை முறையை வைத்தே அதன் ஆரோக்கியம் அடங்கும் என ஊட்டச்சத்து நிபுணர் Luke Coutinho தன் இன்ஸ்டாகிராமில் குறிப்பிட்டுள்ளார். மேலும் அதன் சில நன்மைகளையும் குறிப்பிட்டுள்ளார். அவை என்னென்ன பார்க்கலாம்.
சரும அழகு : கண்கள் வீக்கம், முகம் வீங்கியது போல் இருந்தால் உருளைக்கிழங்கு சாறை தடவி ஓய்வு எடுத்தால் போதும் சரியாகிவிடும் அல்லது ஒரு கிளாஸ் சாறை குடித்தால் இன்னும் நல்லது. அலர்ஜி , சொரி ,சிரங்கிற்கு நல்லது : கைகள் சொரி, சிரங்கால் அரிப்பு, அலர்ஜி ஏற்பட்டிருந்தால் அதன் மீது உருளைக்கிழங்கு சாறை தடவினால் அரிப்பு, எரிச்சல் நீங்கும்.