முகப்பு » புகைப்பட செய்தி » லைஃப்ஸ்டைல் » சர்க்கரை நோய் முதல் டெங்கு வரை... பழுக்காத பப்பாளியை சாப்பிட்டால் இவ்வளவு நன்மைகளா..?

சர்க்கரை நோய் முதல் டெங்கு வரை... பழுக்காத பப்பாளியை சாப்பிட்டால் இவ்வளவு நன்மைகளா..?

Health Care | முகப்பரு தழும்புகள், பிக்மென்டேஷன் உள்ளிட்ட பல சரும பிரச்சனைகளுக்கு பச்சை பப்பாளியை தினமும் சாப்பிடுவது சிறந்த தீர்வு

 • 18

  சர்க்கரை நோய் முதல் டெங்கு வரை... பழுக்காத பப்பாளியை சாப்பிட்டால் இவ்வளவு நன்மைகளா..?

  நன்றாக பழுத்த பப்பாளி மிகவும் சுவையாக இருக்கும் என்பதால் அனைவராலும் விரும்பி சாப்பிடப்படுகிறது. பழுத்த பப்பாளி தரும் ஆரோக்கிய நன்மைகள் பற்றி பலரும் அறிந்திருக்கும் நிலையில், பச்சை பப்பாளியின் ஆரோக்கிய நன்மைகள் பற்றி அவ்வளவாக வெளியில் தெரியாமல் இருக்கிறது.முழுவதும் பழுப்பதற்குள்ளாகவே பறிக்கப்பட்டு விடும் பச்சை பப்பாளியில், நன்கு பழுத்த பப்பாளியை விட அதிக என்சைம்கள் (நொதிகள்) உள்ளன. பச்சை பப்பாளியை காய்கறி போல சமைத்து சாப்பிடலாம். மேலும் சாலட், டெஸர்ட், ஊறுகாய் அல்லது ஸ்மூத்தியில் பயன்படுத்தலாம். பழுத்த பப்பாளி பழங்களை போல பச்சை பப்பாளியை ஏன் உண்ண வேண்டும் என்பதற்கான காரணங்கள் கீழே...

  MORE
  GALLERIES

 • 28

  சர்க்கரை நோய் முதல் டெங்கு வரை... பழுக்காத பப்பாளியை சாப்பிட்டால் இவ்வளவு நன்மைகளா..?

  செரிமானத்தை மேம்படுத்த உதவுகிறது : பச்சை பப்பாளி நம் உடலை சுத்தப்படுத்தவும், செரிமானத்தை மேம்படுத்தவும் உதவுகிறது. பச்சை பப்பாளியில் உள்ள papain என்ற நொதி செரிமானத்திற்கான இரைப்பை அமிலங்களின் சுரப்பை ஊக்குவிக்க உதவுகிறது. மேலும் இது குடல் பாக்டீரியாவுக்கு நன்மை பயக்கிறது. பச்சை பப்பாளியில் நிறைந்திருக்கும் ஃபைபர் சத்தானது ஃபெர்மென்டட் ஸ்டார்ச்சை உற்பத்தி செய்ய உதவுகிறது. இது குடலில் உள்ள நல்ல பாக்டீரியாக்களுக்கு உணவாக மாறி குடல் ஆரோக்கியத்திற்கு உதவுகிறது.

  MORE
  GALLERIES

 • 38

  சர்க்கரை நோய் முதல் டெங்கு வரை... பழுக்காத பப்பாளியை சாப்பிட்டால் இவ்வளவு நன்மைகளா..?

  செல்களின் வளர்ச்சிக்கு உதவிகிறது  : பச்சை பப்பாளியில் காணப்படும் புரோட்டின், பைட்டோ நியூட்ரியன்ட்ஸ், பப்பைன் மற்றும் சைமோபபைன் போன்ற நொதிகள் உடலில் புதிய செல்களின் வளர்ச்சிக்கு பெரிதும் உதவுகிறது. இவை புதிய செல்களை உருவாக்க உதவுவதோடு, வலி, வீக்கம், தொற்று உள்ளிட்ட நிகழ்வுகளில் பாதிப்புகளை சரி செய்ய உதவும்.

  MORE
  GALLERIES

 • 48

  சர்க்கரை நோய் முதல் டெங்கு வரை... பழுக்காத பப்பாளியை சாப்பிட்டால் இவ்வளவு நன்மைகளா..?

  மலச்சிக்கலை தீர்க்கிறது : பச்சை பப்பாளியில் நிறைந்துள்ள நார்ச்சத்து குடல் இயக்கத்தை ஒழுங்குபடுத்தி மலச்சிக்கலைத் தடுக்கிறது. தவிர பச்சை பப்பாளியில் உள்ள பல ஆரோக்கிய நொதிகள் வயிற்றை நன்றாக சுத்தம் செய்து, நச்சுக்களை வெளியேற்ற உதவுகிறது.

  MORE
  GALLERIES

 • 58

  சர்க்கரை நோய் முதல் டெங்கு வரை... பழுக்காத பப்பாளியை சாப்பிட்டால் இவ்வளவு நன்மைகளா..?

  அழற்சிகளை தணிக்கும் : உடல் மற்றும் தோலில் ஏற்படும் அழற்சிகளை தணிக்கும் தன்மையை பச்சை பப்பாளி கொண்டுள்ளது. சுவாச தொற்று, தொண்டை தொற்று அல்லது மாதவிடாய் பிடிப்புகள் உள்ளிட்ட பல அழற்சிக்கு எதிராக நன்மை பயக்க கூடியது பச்சை பப்பாளி.

  MORE
  GALLERIES

 • 68

  சர்க்கரை நோய் முதல் டெங்கு வரை... பழுக்காத பப்பாளியை சாப்பிட்டால் இவ்வளவு நன்மைகளா..?

  சரும பிரச்சனைகளுக்கு சிறந்தது : முகப்பரு தழும்புகள், பிக்மென்டேஷன் உள்ளிட்ட பல சரும பிரச்சனைகளுக்கு பச்சை பப்பாளியை தினமும் சாப்பிடுவது சிறந்த தீர்வு. பச்சை பப்பாளியில் உள்ள நார்ச்சத்து உடலின் உள்ளே உள்ள நச்சுகளை மட்டுமல்ல சருமத்தில் உள்ள சிக்கல்களையும் சரி செய்ய உதவுகிறது. இறந்த செல்களை கரைக்கும் திறன் பச்சை பப்பாளியில் உள்ளது.

  MORE
  GALLERIES

 • 78

  சர்க்கரை நோய் முதல் டெங்கு வரை... பழுக்காத பப்பாளியை சாப்பிட்டால் இவ்வளவு நன்மைகளா..?

  நீரிழிவை கட்டுப்படுத்த : நீரிழிவு உள்ளவர்கள் இனிப்பான பப்பாளி பழத்தை சாப்பிட தயங்குவார்கள். ஆனால் பச்சை பப்பாளியின் சுவை வேறு தன்மை கொண்டது மற்றும் பல முக்கிய தாதுக்களை கொண்டது என்பதால் உடலில் குளுக்கோஸ் அளவை நிர்வகிக்க உதவுகிறது.

  MORE
  GALLERIES

 • 88

  சர்க்கரை நோய் முதல் டெங்கு வரை... பழுக்காத பப்பாளியை சாப்பிட்டால் இவ்வளவு நன்மைகளா..?

  டெங்கு பாதிப்பிற்கு : பச்சை பப்பாளி இலைகளின் ஜூஸை டெங்கு பாதிக்கப்பட்டவர்களுக்கு கொடுத்தால் கடுமையாக குறைந்துள்ள வெள்ளை ரத்த அணுக்களின் பிளேட்லெட் எண்ணிக்கையை அதிகரிக்க செய்யும்.

  MORE
  GALLERIES