நம்மில் பலருக்கு தினமும் டீ அல்லது காபி அருந்துவது வழக்கம். ஆனால், டீ அல்லது காபிக்கு பதிலாக கிரீன் ஜுஸ் எடுத்துக் கொள்வது நம் உடலுக்கு மிகவும் நல்லது. இது நம் உடலில் உள்ள தேவை இல்லாத கழிவுகளை நீக்க உதவும் ஒரு மெட்டபாலிசம் பூஸ்டர் ஆகும். இதன் பெயர் குறிப்பிடுவது போல, இதனை பச்சைக் நிறத்தில் உள்ள காய்கறிகள் கொண்டு நாம் தயாரிக்க வேண்டும்.
சிறந்த மெட்டபாலிசம் பூஸ்டர் : உங்கள் மெட்டபாலிசம் அதாவது வளர்சிதை மாற்றம் சற்று பொறுமையாக செயல்படுவது போல் நீங்கள் உணர்ந்தால் அல்லது நீங்கள் உங்கள் உடல் எடையை குறைக்க விரும்பினால், உங்கள் தினசரி உணவில் ஒரு கிளாஸ் கிரீன் ஜுஸை சேர்த்துக் கொள்ளலாம். ஃப்ரெஷ் ஆன கிரீன் ஜுஸில் உள்ள சில கலவைகள் ப்ரீபயாடிக்குகளாக செயல்படுகிறது. இது உங்கள் செரிமான மண்டலத்தில் நன்மை பயக்கும் பாக்டீரியாக்களின் வளர்ச்சியை ஊக்குவிக்கிறது. இது மலச்சிக்கல் பிரச்சனையைப் போக்கவும், உடல் எடையைக் குறைக்கவும், நோய் எதிர்ப்புச் செயல்பாட்டை மேம்படுத்தவும் உதவுகிறது.
இதனை பல விதங்களில் நாம் தயார் செய்யலாம். செய்முறையைப் பார்ப்பதற்கு முன்னர், இதில் சேர்க்கப்படும் ஒரு சிறந்த மஞ்சள் நிறத்திலான பொருளைப் பற்றி நாம் தெரிந்து கொள்வது அவசியம். அந்த மஞ்சள் நிற பொருள் வேறு ஒன்றும் இல்லை, எலுமிச்சை பழம் தான். இது உங்கள் மெட்டபாலிசம் அதாவது வளர்சிதை மாற்றத்தை அதிகரிக்கிறது. ஏனென்றால், எலுமிச்சை தெர்மோஜெனீசிஸ் செயல்முறையைத் தூண்டுகிறது - இது ஒரு வளர்சிதை மாற்ற செயல்முறையாகும், இதில் வெப்பத்தை உருவாக்க கலோரிகள் எரிக்கப்படுகின்றன.
இதனை செய்வதற்கு ஒரு கைப்பிடி அளவு பசலைக் கீரை, அரை பச்சை ஆப்பிள், கொஞ்சம் புதினா இலைகள் மற்றும் எலுமிச்சைச் சாறு முதலியவைத் தேவைப்படும். மேற்கூறிய அனைத்தையும் சுத்தம் செய்து ஒரு மிக்சி ஜாரில் போட்டு ஸ்மூத் ஆன பேஸ்ட் ஆக அரைத்து வைத்துக் கொள்ள வேண்டும். தேவைப்பட்டால் தண்ணீர் சேர்க்கவும். முன்பு கூறியது போல, இதனை செய்த உடனேயே குடித்து விட வேண்டும். அதே சமயம் இதனை அளவுக்கு அதிகமாகவும் எடுத்துக் கொள்ளக் கூடாது. ஏனெனில், அளவுக்கு அதிகமாக எடுத்துக் கொண்டால் இது மோசமான இரத்த சர்க்கரை கட்டுப்பாடு அல்லது சிறுநீரக கோளாறுகளுக்கு வழிவகுத்துவிடும்.