ஹோம் » போடோகல்லெரி » லைஃப்ஸ்டைல் » கோடைகாலத்தில் இந்த ஐந்து மசாலாக்களை குறைவாக சாப்பிடுவது நல்லது..!

கோடைகாலத்தில் இந்த ஐந்து மசாலாக்களை குறைவாக சாப்பிடுவது நல்லது..!

நீண்ட கால பழக்கம் காரணமாக ஒரு சில மசாலா பொருட்களை தினமும் சமையலில் சேர்க்கும் பழக்கம் பல வீடுகளிலும் உள்ளது. உதாரணமாக மிளகாய், இஞ்சி, பூண்டு, மஞ்சள் ஆகியவை அத்தியாவசிய மசாலாவாக தினசரி கருதப்படுகிறது.

 • 17

  கோடைகாலத்தில் இந்த ஐந்து மசாலாக்களை குறைவாக சாப்பிடுவது நல்லது..!

  இந்திய உணவுகளில் நிறம், சுவை மற்றும் நறுமணத்துக்கு பலவிதமான மசாலாக்கள் சேர்க்கப்படுகின்றன. பலரும் நறுமணமிக்க, நிறைய மசாலாக்கள் சேர்க்கப்பட்ட உணவுகளை விரும்பி சாப்பிடுவார்கள். அது மட்டுமின்றி மசாலாக்களில் மருத்துவ குணங்களும் உள்ளன என்பதை மறுக்க முடியாது. நீண்ட கால பழக்கம் காரணமாக ஒரு சில மசாலா பொருட்களை தினமும் சமையலில் சேர்க்கும் பழக்கம் பல வீடுகளிலும் உள்ளது. உதாரணமாக மிளகாய், இஞ்சி, பூண்டு, மஞ்சள் ஆகியவை அத்தியாவசிய மசாலாவாக தினசரி கருதப்படுகிறது. ஆனால் ஒரு சில மசாலா பொருட்கள் அவை எவ்வளவு ஆரோக்கியமானதாக இருந்தாலும் குறிப்பிட்ட கால கட்டத்தில் உங்களுக்கு தெரியாமலேயே உங்கள் உடல் நலத்தை பாதிக்கிறது.

  MORE
  GALLERIES

 • 27

  கோடைகாலத்தில் இந்த ஐந்து மசாலாக்களை குறைவாக சாப்பிடுவது நல்லது..!

  பொதுவாக ஒவ்வொரு உணவுப் பொருளுக்குமே ஒவ்வொரு தன்மை உள்ளது. வெந்தயம், சீரகம், தனியா போன்ற பொருட்கள் உடலை குளிர்ச்சியூட்டும் தன்மை கொண்டது. அதேபோல பூண்டு, இஞ்சி, மிளகாய் ஆகியவை வெப்பத்தன்மை கொண்டவை. இவ்வகையான மசாலா பொருட்கள் அதிகமாக சாப்பிடுவதால் கோடைக்காலத்தில் உடலில் வெப்பம் அதிகரித்து சரும பிரச்சனை முதல் செரிமான கோளாறு வரை ஏற்படும். எனவே கோடைக்காலத்தில் ஒரு சில குறிப்பிட்ட மசாலா பொருட்களை உங்கள் உணவில் சேர்ப்பதை தவிர்க்க வேண்டும் அந்தப் பட்டியல் இங்கே.

  MORE
  GALLERIES

 • 37

  கோடைகாலத்தில் இந்த ஐந்து மசாலாக்களை குறைவாக சாப்பிடுவது நல்லது..!

  இஞ்சி : இஞ்சி தேநீர் முதல் கிரேவி வகைகளில் இஞ்சி அரைத்து சேர்ப்பது வரை பல உணவு வகைகளில் இஞ்சி சேர்க்கப்படுகிறது. இஞ்சி வயிறு சம்பந்தமான அனைத்து பிரச்சனைகளையும் குணமாக்கும் தன்மையும் கொண்டுள்ளது. ஆனால் உடல் வெப்பமாக இருக்கும் பொழுது மற்றும் கோடை காலத்தில் அதிகமாக இஞ்சி சாப்பிடுவது வெப்பத்தை அதிகரித்து வயிற்றுக்கோளாறு ஏற்படுத்தும்.

  MORE
  GALLERIES

 • 47

  கோடைகாலத்தில் இந்த ஐந்து மசாலாக்களை குறைவாக சாப்பிடுவது நல்லது..!

  பூண்டு : பாரம்பரியமான குழம்பு வகை முதல் நவீன உணவுகளின் டிப்ஸ் ஸ்ப்ரெட்ஸ் வரை பூண்டு பல வகையாக பயன்படுத்தப்படுகிறது. சுவை மணம் என்பதை கடந்து பூண்டில் எக்கச்சக்கமான மருத்துவ குணங்கள் உள்ளன. ஆனால் பொதுவாகவே பூண்டு சாப்பிடும் போது உடலில் இருக்கும் வெப்பம் அதிகரிக்கும். கோடை காலத்தில் பூண்டு அதிகமாக சாப்பிடுவதைத் தவிர்க்க வேண்டும். நிறைய பூண்டு சாப்பிட்டால் உடல் வெப்பம் அதிகரித்து, அதிக வியர்வை வெளியேறும், தீவிர சோர்வும் நீர்சத்து இழப்பு ஏற்படும்.

  MORE
  GALLERIES

 • 57

  கோடைகாலத்தில் இந்த ஐந்து மசாலாக்களை குறைவாக சாப்பிடுவது நல்லது..!

  சிவப்பு மிளகாய் : காரத்திற்கு பரவலாக பயன்படுத்தப்படும் பொருள் சிவப்பு மிளகாய். தவிர்க்கவே முடியாத மசாலா பொருளாக இருந்தாலும் கோடை காலத்தில் காரமாக சாப்பிடவதை, மிளகாய் அதிகம் பயன்படுத்துவதை குறைக்க வேண்டும். அதிக காரம் சாப்பிடும் பொழுது சென்சரி நியூரான்கள் தூண்டப்பட்டு, உடல் வெப்பம் அதிகமாகும்.

  MORE
  GALLERIES

 • 67

  கோடைகாலத்தில் இந்த ஐந்து மசாலாக்களை குறைவாக சாப்பிடுவது நல்லது..!

  ஓமம் : மருத்துவ குணங்களுக்காகவே அதிகமாகப் பயன்படுத்தப்படும் மசாலா பொருட்களில் ஒன்று ஓமம். குழந்தைகளில் ஏற்படும் வயிற்று வலி, செரிமானக் கோளாறு முதல், பெரியவர்களை பாதிக்கும் வயிற்றுப் பிரச்சனைகள் வரை, ஓமம் மிகச்சிறந்த கைமருந்தாக உள்ளது. உடலில் உள்ள கொழுப்பையும் குறைத்து எடை குறைக்க உதவும். ஆனால், உடல் உஷ்ணத்தை அதிகமாக்கி நீர்ச்சத்து இழப்பு ஏற்படலாம் என்பதால், எப்போது சாப்பிட்டாலுமே, மிகக்குறைந்த அளவில் தான் சாப்பிட வேண்டும்.

  MORE
  GALLERIES

 • 77

  கோடைகாலத்தில் இந்த ஐந்து மசாலாக்களை குறைவாக சாப்பிடுவது நல்லது..!

  மஞ்சள் : கிருமி நாசினியாக செயல்படுவது முதல், கேன்சர் வராமல் செயல்படுவது வரை, மஞ்சள் பல பண்புகளைக் கொண்டுள்ளது. பொதுவாகவே உஷ்ணத் தன்மையைக் கொண்டுள்ள மஞ்சளை அளவுக்கு அதிகமாக சேர்ப்பது வயிறு உப்புசம், மலச்சிக்கல் உள்ளிட்ட பிரச்சனைகளை ஏற்படுத்தும்.

  MORE
  GALLERIES