கிரேப் ஃப்ரூட் ஜூஸ்: சிட்ரஸ் பழமான இதில் உள்ள வைட்டமின் சி மற்றும் ஆன்டிஆக்ஸிடன்ட்கள் வளர்சிதை மாற்றத்தை அதிகரிக்க உதவுகிறது. மேலும் உடலில் தங்கியுள்ள கொழுப்பை எரிக்கிறது மற்றும் இன்சுலின் உணர்திறனை நிர்வகிக்கிறது. யு.சி நடத்திய ஆய்வின் படி, “அதிக கொழுப்புள்ள உணவு எடுப்பவர்களுக்கு கிரேப் ஃப்ரூட் ஜூஸ் எடுத்துக்கொள்வது ரத்ததில் குளுக்கோஸ் அளவை கட்டுப்படுத்தவும், உடல் எடையை குறைக்கவும் உதவுகிறது.
தண்ணீர்: இயற்கையாகவே உடல் எடையை குறைக்க உதவும் பானமாக தண்ணீர் செயல்படுகிறது. ஏனென்றால், நமது உடலின் 75 சதவிகிதம் தண்ணீரால் ஆனது மற்றும் உடலின் சரியான செயல்பாட்டிற்கும் அவசியமானது. தண்ணீர் ஆற்றல் உற்பத்தியில் ஈடுபடும் வளர்சிதை மாற்ற எதிர்வினைக்கு பயன்படுகிறது. நீர் சரியான செரிமானம், உறிஞ்சுதல் மற்றும் அமைப்புக்குள் ஊட்டச்சத்துக்களை கொண்டு செல்ல உதவுகிறது. மேலும் இது நச்சுகளை வெளியேற்றவும், மலச்சிக்கல் மற்றும் வீக்கத்தை குறைக்கவும் உதவுகிறது. பசியை கட்டுப்படுத்துவதிலும் தண்ணீர் சிறப்பாக செயலாற்றுகிறது.
ஆப்பிள் சைடர் வினிகர் : புளிப்பு தன்மை கொண்ட ஆப்பிள் சைட வினிகர், உண்மையில் உடல் எடையை குறைக்க உதவுகிறது. ஏனெனில் ஆப்பிள் சைடர் வினிகரில் அசிட்டிக் அமிலம் உள்ளது, இது பசியை அடக்கும் பொருளாக செயல்படுகிறது. உணவுக்கு முன் வெதுவெதுப்பான நீரில் ஆப்பிள் சைடர் வினிகரை உட்கொள்வது தொப்பையைக் குறைக்கவும், நீரிழிவு நோயைக் கட்டுப்படுத்தவும் உதவும். ஆப்பிள் சைடர் வினிகரை மிதமான அளவில் உட்கொள்வது மட்டுமே எடையைக் குறைக்க உதவுகிறது.
மசாலா கலந்த டீ: மசாலா மற்றும் மூலிகைகளின் கலவை வளர்சிதை மாற்றத்தை மேம்படுத்தவும், கொழுப்பை எரிக்கவும் உதவுகிறது. ஒரு அங்குல இலவங்க பட்டை, துளசி இலைகள், சிறிதளவு இஞ்சி ஆகியவற்றை நன்றாக நீரில் கொதிக்க வைத்து, வடிகட்டுங்கள். அதனுடன் எலுமிச்சை சாறு, ஒரு சிட்டிகை ஜாதிக்காய் மற்றும் தேன் சேர்த்து கலக்கவும். இந்த மசாலா பானத்தை ஒருநாளைக்கு இரண்டு முறை குடித்து வந்தால், கொழுப்பை குறைப்பதில் சிறப்பாக செயல்படுவதை கண்கூடாக பார்க்கலாம்.