முகப்பு » புகைப்பட செய்தி » லைஃப்ஸ்டைல் » கோடைக்காலத்தில் அன்னாசி பழம் சாப்பிடலாமா..? குழப்பத்திற்கான விடை இதோ..

கோடைக்காலத்தில் அன்னாசி பழம் சாப்பிடலாமா..? குழப்பத்திற்கான விடை இதோ..

நீங்கள் நீண்ட காலமாக உடல் எடையை குறைப்பதற்காக போராடி வருபவர் எனில் தேவையான அளவு அன்னாசி பழத்தை கோடை காலங்களில் உட்கொள்வதன் மூலம் கனிசமான அளவில் உடல் எடையை உங்களால் குறைக்க இயலும்.

  • 17

    கோடைக்காலத்தில் அன்னாசி பழம் சாப்பிடலாமா..? குழப்பத்திற்கான விடை இதோ..

    ஏற்கனவே கோடை காலம் ஆரம்பித்து வெப்பம் சுட்டெரித்து வரும் நிலையில் அன்னாசி பழம் போன்ற இனிப்பான ஜூஸியான உணவுப் பொருட்கள் நமது நாவிற்கு சுவையை தருவதுடன், உடலில் உள்ள நீர் சத்தையும் தக்க வைத்துக் கொள்ள உதவுகிறது.

    MORE
    GALLERIES

  • 27

    கோடைக்காலத்தில் அன்னாசி பழம் சாப்பிடலாமா..? குழப்பத்திற்கான விடை இதோ..

    அன்னாசி பழத்தில் அதிக அளவில் ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளன. உடலின் செரிமானம் முதல் நமது நோய் எதிர்ப்பு சக்தியை அதிகப்படுத்துவது வரை பல்வேறு நன்மைகளை இது செய்கிறது. அந்த வகையில் அன்னாசி பழம் உட்கொள்வதால் கிடைக்கும் நன்மைகளைப் பற்றி இப்பதிவில் பார்ப்போம்.

    MORE
    GALLERIES

  • 37

    கோடைக்காலத்தில் அன்னாசி பழம் சாப்பிடலாமா..? குழப்பத்திற்கான விடை இதோ..

    எலும்புகளை வலுபடுத்துகிறது : கோடையில் அன்னாசி பழத்தை உட்கொள்ளும் போது அவை நமது எலும்புகளின் ஆரோக்கியத்தை மேம்படுத்தி உடலை கட்டுக்கோப்பாக வைக்க உதவுகிறது. இதில் நிறைந்துள்ள கால்சியம் நமது தசைகளில் உள்ள வலியை போக்கி உடலுக்கு ஆரோக்கியத்தை அளிக்கிறது. இதைத் தவிர அண்ணாச்சி பழத்தில் உள்ள மாங்கனிசு மற்றும் கால்சியம் ஆகியவை பல்வேறு வித எலும்பு சம்பந்தப்பட்ட பிரச்சனைகளுக்கு தீர்வாக விளங்குகிறது.

    MORE
    GALLERIES

  • 47

    கோடைக்காலத்தில் அன்னாசி பழம் சாப்பிடலாமா..? குழப்பத்திற்கான விடை இதோ..

    இதயத்தின் ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவுகிறது : அன்னாசி பழத்தில் உள்ள நார்ச்சத்தானது உடலில் உள்ள கொழுப்புக்களின் அளவை குறைத்து இதயத்தின் ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது. இந்த பழத்தை உட்கொள்வதால் இதயம் சம்பந்தப்பட்ட பிரச்சனைகள் வருவது குறைவதுடன் உடல் பருமன் ஏற்படுவதையும் தடுக்க உதவுகிறது.

    MORE
    GALLERIES

  • 57

    கோடைக்காலத்தில் அன்னாசி பழம் சாப்பிடலாமா..? குழப்பத்திற்கான விடை இதோ..

    உடல் எடை குறைப்பிற்கு உதவுகிறது : நீங்கள் நீண்ட காலமாக உடல் எடையை குறைப்பதற்காக போராடி வருபவர் எனில் தேவையான அளவு அன்னாசி பழத்தை கோடை காலங்களில் உட்கொள்வதன் மூலம் கனிசமான அளவில் உடல் எடையை உங்களால் குறைக்க இயலும். அன்னாசி பழம் உடலின் வளர்ச்சியை மாற்றத்தை அதிகப்படுத்துவதாலும், நமது உடலில் உள்ள நீர்ச்சத்து குறைவதை தடுப்பதாலும் உடல் எடை குறைப்பிற்கு இது மிகவும் உதவுகிறது.

    MORE
    GALLERIES

  • 67

    கோடைக்காலத்தில் அன்னாசி பழம் சாப்பிடலாமா..? குழப்பத்திற்கான விடை இதோ..

    குமட்டல் ஏற்படுவதை தடுக்க உதவுகிறது : பலருக்கும் கோடை காலங்களில் குமட்டல் போன்ற ஒரு உணர்வு ஏற்படுவது இயல்பானதே. இதுபோன்ற சூழ்நிலைகளில் சிறிதளவு அன்னாசி பழத்தை உட்கொள்வதன் மூலம் அதிலிருந்து விடுதலை பெற முடியும். மேலும் நீண்டதூர பயணங்களின் போது “மோஷன் சிக்னஸ்” காரணத்தினால் ஏற்படும் குமட்டலின் போதும் அண்ணாச்சி பழம் தகுந்த ஒரு தீர்வாக அமையும்.

    MORE
    GALLERIES

  • 77

    கோடைக்காலத்தில் அன்னாசி பழம் சாப்பிடலாமா..? குழப்பத்திற்கான விடை இதோ..

    நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது : கோடை காலங்களில் அன்னாசி பழத்தை உட்கொள்வதினால் நமது உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவுவதுடன் உடலை ஆரோக்கியமாகவும் வைத்துக் கொள்ளவும் வழி செய்கிறது. இதில் நிறைந்துள்ள வைட்டமின் சி ஆனது பருவநிலை மாற்றங்களினால் உடலின் நோய் எதிர்ப்பு சக்தி குறைபாடு ஏற்படுவதை தடுத்து, உடலின் ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது. போதுமான அளவு அன்னாசி பழம் உட்கொள்வதன் மூலம் நீண்ட நாட்களுக்கு நமது உடலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள முடியும்.

    MORE
    GALLERIES