இன்றைக்கு பெரும்பாலான பெண்கள் சந்திக்கும் முக்கிய பிரச்சனைகளில் ஒன்றாக உள்ளது பாலிசிஸ்டிக் ஓவரி சின்ட்ரோம் எனப்படும் பிசிஓடி. பெண்களுக்கு கருப்பையின் இரு பக்கங்களிலும் ஓவரி என்று சொல்லக்கூடிய சினைப்பைகளில் சிறிய, சிறிய நீர்க்கட்டிகள் தோன்றுவது தான் பாலிசிஸ்டிக் ஓவரி சின்ட்ரோம். பெண்களுக்கு ஹார்மோன் சமநிலையில் இல்லாத போதும் பிசிஓஎஸ் பிரச்சனை ஏற்படுகிறது.
குறிப்பாக மாறிவரும் உணவுப்பழக்கங்கள், உடல் உழைப்பின்றி இல்லாதது போன்ற காரணங்களால் பெண்களுக்கு இந்த பிரச்சனை ஏற்படும். இதனால் எடை அதிகரிப்பு, தேவையற்ற இடங்களில் முடி அதிகம் வளர்தல், முகத்தில் அதிக பருக்கள் தோன்றுவது போன்ற பல பிரச்சனைகள் ஏற்படும். இதோடு மாதம் மாதம் வரக்கூடிய மாதவிடாயும் முறையாக வருவதில்லை. இதனால் கருவுறுதலின் போல் குழந்தைப் பிறப்பில் தாமதம் ஏற்படுகிறது. இதனால் தான் இந்த பிரச்சனையை சரி செய்வதற்கு மருத்துவமனைக்கு செல்லக்கூடிய நிலை ஏற்படுகிறது.
இந்நிலையில் தான் கடந்த 2018 ஆம் ஆண்டு அமெரிக்காவில் நடத்தப்பட்ட ஆய்வில், பிசிஓஎஸ் பிரச்சனைக்கு வைட்டமின்கள் , தூத்தநாகம், மெக்னீசியம், செலினியம், மற்றும் தாதுக்கள் அதிகம் உள்ள உணவுகள் மூலம் சிகிச்சையளிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில் என்னென்ன நீங்கள் சாப்பிடலாம் என இங்கே தெரிந்துக் கொள்ளலாம்.
ஆளி விதைகள்: நம்முடைய உடலில் ஆரோக்கியமான இனப்பெருக்கு அமைப்புக்குத் தேவையான பல்வேறு வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள் ஆளி விதைகளில் உள்ளன. இதில் உள்ள ஆன்டி ஆக்ஸிடன்ட்கள், ஒமேகா 3 கொழுப்பு அமிலங்கள் ஈஸ்ட்ரோஜன் உற்பத்தியைச் சமநிலைப்படுத்துகிறது. பெண்களுக்கு ஈஸ்ட்ரோஜன் அளவு தேவையானதை விட அதிகமாக இருந்தால், மாதவிடாய் சுழற்சியில் பிரச்சனை ஏற்படும். எனவே பெண்கள் ஆளி விதைகளை உங்களுடைய உணவில் சேர்த்துக் கொள்ளவும்.