தைராய்டு சுரப்பியானது பட்டாம்பூச்சியின் வடிவத்தில் நமது முன் கழுத்துப் பகுதியில் அமைந்திருக்கும் ஒரு சுரப்பியாகும். இந்த தைராய்டு சுரப்பியில் இருந்து வெளிவரும் ஹார்மோன்கள் மூலம் தான் நமது உடலின் வளர்ச்சிதை மாற்றம், வளர்ச்சி மற்றும் வேறு பல முக்கியமான செயல்கள் நடைபெறுகிறது. இந்த தைராய்டு சுரப்பிகளில் ஏதேனும் பிரச்சனைகள் உண்டாகும் போது அவை நமது உடலில் பல்வேறு உபாதைகள் ஏற்படுவதற்கு காரணமாகின்றன. வளர்ச்சிதை மாற்றத்தில் பிரச்சனை அதிகப்படியான உடல் எடை கூடுதல், தலை முடி உதிர்தல், இதயக் கோளாறுகள், ஹார்மோன் பிரச்சனைகள், நீரிழிவு நோய் போன்ற பல நோய்கள் உண்டாவதற்கு காரணமாகின்றன.
பொதுவாகவே ஹைப்போதைராய்டிசம் எனப்படும் அளவுக்கு குறைவான ஹார்மோன்கள் சுரக்கும் பிரச்சினை தான் பல்வேறு நபர்களுக்கு உண்டாகிறது. இதன் மூலம் அவர்களது உடல் எடையும் கூடுகிறது. இந்த ஹைப்போதைராய்டிசம் என்பது குழந்தைகள் பெரியவர்கள் என்றில்லாமல் அனைத்து வயதை சார்ந்தவர்களையும் தாக்கக்கூடும். ஒருவேளை உங்களுக்கு ஹைப்போதைராய்டிசம் இருக்கிறதா என்பதை கண்டறிய கீழே உள்ள அறிகுறிகள் உங்களுக்கு உள்ளதா என்பதை உறுதி செய்து கொள்ள வேண்டும்.
ஹைப்போதைராய்டிசம் உள்ளவர்களுக்கு பொதுவாகவே உடல் சோர்வு சளி, மலச்சிக்கல், முகத்தில் வீக்கம், வறட்சியான சருமம், அதிக அளவிலான கொழுப்பு, மூட்டு இணைப்புகளில் வலி, ஞாபகம் மறதி அல்லது மன அழுத்தம் போன்ற பிரச்சனைகள் உண்டாகக்கூடும். இவ்வாறு ஹைப்போதைராய்டிசம் பாதிக்கப்பட்டு சிகிச்சை எடுத்து வரும் நோயாளிகளில் பலரும் உடல் எடை அதிகரிப்பு பிரச்சனையால் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் அவ்வாறு அதிகரித்த உடல் எடையை குறைப்பது என்பது மிகவும் சவாலான விஷயமாகும். ஆனாலும் முடியாத காரியம் அல்ல.
நட்ஸ் மற்றும் விதைகள் : பிரேசில் நட்ஸ் பொதுவாகவே செலினியம் மற்றும் ஜிங்க் ஆகியவை அதிகம் நிறைந்துள்ளன. இவை தைராய்டு சுரப்பிகள் நன்றாக வேலை செய்வதற்கு முக்கியமானவை ஆகும்.. இதைத் தவிர பூசணிக்காய் விதைகளிலும் ஜிங்க் அதிக அளவில் நிறைந்துள்ளது இவற்றை நாம் மிகச் சிறந்த நொறுக்கு தீனியாக பயன்படுத்திக் கொள்ளலாம். அவ்வபோது ஏதேனும் ஒரு நொறுக்கு தீனிகளை உட்கொண்டு இருக்கக்கூடிய பழக்கத்தில் சிக்கி உள்ளவர்களுக்கு இந்த நட்ஸ் மற்றும் விதைகளை உட்கொள்வது உடல் எடையை குறைப்பதோடு மட்டுமல்லாமல், உடலிற்கு தேவையான ஊட்டச்சத்துக்களை பெறவும். உதவி செய்கிறது.
இதனை சரி செய்ய ஆரோக்கியமான உணவு பழக்கத்தை கடைபிடிப்பதுடன் உடல் இயக்கத்தை அதிகரிக்கும் வகையில் வாழ்க்கை முறையும் மாற்ற அமைத்துக் கொள்ள வேண்டும். மேலும் முடிந்த அளவு யோகா உடற்பயிற்சி ஆகியவற்றை செய்து உடலில் ஆக்சிஜன் அளவை அதிகரித்துக் கொள்ள வேண்டும் தைராய்டு சுரப்பிகள் நன்றாக வேலை செய்வதற்கு இது உதவுகிறது.