ஹோம் » போடோகல்லெரி » லைஃப்ஸ்டைல் » வயசான தோற்றத்தை தடுக்கனுமா..? அப்போ இந்த 7 உணவுகளை கட்டாயம் சாப்பிடுங்க!

வயசான தோற்றத்தை தடுக்கனுமா..? அப்போ இந்த 7 உணவுகளை கட்டாயம் சாப்பிடுங்க!

வைட்டமின்ஸ் மற்றும் மினரல்ஸ் நிறைந்த உணவுகள் வயதாகும் அறிகுறிகளை குறைக்க மற்றும் தாமதப்படுத்த உதவும். எனவே நம்முடைய உணவுமுறைகளில் போதுமான ஆன்டிஆக்ஸிடன்ட்ஸ், லிப்பிட்ஸ் மற்றும் அத்தியாவசிய ஊட்டச்சத்துக்கள் கொண்ட உணவுகளை சேர்ப்பது பளபளப்பான சருமத்தை பெற மற்றும் இளமை தோற்றத்தை பராமரிக்க கணிசமாக உதவும்.

 • 18

  வயசான தோற்றத்தை தடுக்கனுமா..? அப்போ இந்த 7 உணவுகளை கட்டாயம் சாப்பிடுங்க!

  ஆரோக்கிய பழக்கங்கள் என்று வரும் போது அதில் ஊட்டச்சத்து மிக்க பழங்கள் மற்றும் காய்கறிகள் அடங்கிய சீரான டயட்டிற்கு முக்கிய பங்கு உண்டு.எலாஜிக் ஆசிட், பயோட்டின் மற்றும் வைட்டமின் சி மற்றும் வைட்டமின் ஈ உள்ளிட்டவை இயற்கை கொலாஜன் பூஸ்டர்களாக செயல்பட்டு உங்கள் சருமத்திற்கு சிறந்த நன்மைகளை தருகின்றன.பிரபல ஊட்டச்சத்து நிபுணரான அஞ்சலி முகர்ஜி ஆரோக்கிய உணவுக்கும் சரும பராமரிப்பிற்கும் இடையே உள்ள தொடர்பு பற்றி கூறுகையில், டயட்டில் இயற்கை உணவுகளை அதிகம் சேர்த்து கொள்வதன் மூலம் சருமத்தின் வயதாவதை வெளிப்படுத்தும் அறிகுறிகளை மெதுவாக்கலாம் மற்றும் குறைக்கலாம் என்கிறார். சரி, முதுமையை தாமதப்படுத்த அல்லது தடுக்க உதவும் பழங்கள் மற்றும் காய்கறிகளை பற்றி இங்கே தெரிந்து கொள்ளுங்கள்.

  MORE
  GALLERIES

 • 28

  வயசான தோற்றத்தை தடுக்கனுமா..? அப்போ இந்த 7 உணவுகளை கட்டாயம் சாப்பிடுங்க!

  முட்டைகோஸ் : முட்டைக்கோஸில் Indole-3-carbinol நிறைந்துள்ளது, இது ஈஸ்ட்ரோஜன் ஆதிக்கத்தை சரி செய்ய உதவுவதோடு சக்திவாய்ந்த ஆன்டி-ஏஜிங் பண்புகளை கொண்டுள்ளது. முட்டைக்கோஸில் உள்ள வைட்டமின் ஏ, வைட்டமின் டி உள்ளிட்டவை சரும செல்கள் சேதமடைவதைத் தடுத்து, தீங்கு விளைவிக்கும் சூரியனின் புறஊதா கதிர்களில் இருந்து நம் சருமத்தை பாதுகாக்கிறது. சரும ஆரோக்கியத்திற்காக முட்டைகோஸை நீங்கள் சாப்பிட நினைத்தால் பச்சையாக அல்லது லேசாக சமைத்தோ, வறுத்தோ அல்லது வேகவைத்தோ சாப்பிடுவது நன்மை தரும்.

  MORE
  GALLERIES

 • 38

  வயசான தோற்றத்தை தடுக்கனுமா..? அப்போ இந்த 7 உணவுகளை கட்டாயம் சாப்பிடுங்க!

  கேரட் : கேரட்டில் பீட்டா கரோட்டின் மற்றும் ஆரஞ்சு பிக்மென்ட்ஸ் உள்ளன. இது பிளட் கொலஸ்ட்ராலை குறைக்க மற்றும் நோய்களை எதிர்த்து போராட நோய் எதிர்ப்பு சக்தியை வலுவாக்க உதவுகிறது. நாளொன்றுக்கு ஒரு கப் கேரட் ஜூஸ் குடிப்பது பார்வை திறனை மேம்படுத்துவதோடு, சருமத்தையும் பளபளப்பாக வைத்து கொள்ள உதவும். கேரட்டில் உள்ள பீட்டா கரோட்டின் நம் உடலுக்குள் வைட்டமின் ஏ-வாக மாற்றப்படும். இது சரும திசுக்களை சரிசெய்ய மற்றும் சூரியனின் கடும் கதிர்களுக்கு எதிராக சருமத்தை பாதுகாக்க உதவுகிறது.

  MORE
  GALLERIES

 • 48

  வயசான தோற்றத்தை தடுக்கனுமா..? அப்போ இந்த 7 உணவுகளை கட்டாயம் சாப்பிடுங்க!

  திராட்சைகள் : ரெஸ்வெராட்ரோல் எனப்படும் கெமிக்கல் ஏராளமாக நிறைந்துள்ள திராட்சை முதுமையை தடுக்கும் பண்புகளைக் கொண்டிருக்கின்றன. ரெஸ்வெராட்ரோல் வயதான அறிகுறிகள் மற்றும் பிற தோல் பிரச்சனைகளைத் தடுக்கிறது என்று கண்டறியப்பட்டுள்ளது. கூடவே வைட்டமின் சி இருப்பது திராட்சையின் ஆன்டி-ஏஜிங் பண்புகளை அதிகரிப்பதோடு மற்றும் சரும செல்கள் சிதைவதும் தடுக்கப்படுகிறது.

  MORE
  GALLERIES

 • 58

  வயசான தோற்றத்தை தடுக்கனுமா..? அப்போ இந்த 7 உணவுகளை கட்டாயம் சாப்பிடுங்க!

  ஆரஞ்சு : ஆரஞ்சு பழங்களில் காணப்படும் சக்தி வாய்ந்த ஆன்டி-ஆக்ஸிடன்ட்ஸ்ஃப்ரீ ரேடிக்கல்ஸ்களிலிருந்து சருமத்தை பாதுகாக்கிறது. மேலும் சருமத்தின் வயதாகும் செயல்முறையை மெதுவாக்குகிறது. இதிலிருக்கும் வைட்டமின் சி சருமத்தில் கொலாஜன் உற்பத்தியை தூண்டி இளமையாக வைத்திருக்க உதவுகிறது. மேலும் ஆரஞ்சு பழத்தில் கேன்சரை எதிர்த்துப் போராட மற்றும் கொலஸ்ட்ரால், ரத்த அழுத்தத்தை குறைக்கவும் உதவும் ஆன்டி-ஆக்ஸிடன்ட்ஸ் நிறைந்துள்ளன.

  MORE
  GALLERIES

 • 68

  வயசான தோற்றத்தை தடுக்கனுமா..? அப்போ இந்த 7 உணவுகளை கட்டாயம் சாப்பிடுங்க!

  வெங்காயம் : வெங்காயத்தில் நிறைந்துள்ள அதிக அளவிலான ஆன்டிஆக்ஸிடன்ட்ஸ் ஃப்ரீ ரேடிக்கல்ஸ்களுக்கு எதிராக சருமத்தை பாதுகாக்கும் தன்மை கொண்டவை. ஃப்ரீ ரேடிக்கல்ஸ் என்பவை நமது சருமத்தின் கொலாஜனை சேதப்படுத்த காரணமாகின்றன. இதன் விளைவாக சருமத்தில் சுருக்கம், டார்க் ஸ்பாட்ஸ், கோடுகள் மற்றும் சரும தளர்வு உள்ளிட்ட பல சிக்கல்கள் ஏற்படுகின்றன.

  MORE
  GALLERIES

 • 78

  வயசான தோற்றத்தை தடுக்கனுமா..? அப்போ இந்த 7 உணவுகளை கட்டாயம் சாப்பிடுங்க!

  கீரைகள் : பசலை கீரை உள்ளிட்ட பல வகை கீரைகளிலும் எண்ணிலடங்கா நிறைய ஊட்டச்சத்துக்கள் உள்ளன. இவை சருமத்தை புத்துணர்ச்சியாக, இளமையாக வைத்திருக்க உதவுகின்றன. மேலும் வைட்டமின் கே நிறைந்துள்ள கீரைகள் நுரையீரல் புற்றுநோய் மற்றும் இதய நோய் அபாயத்தை குறைகின்றன. கீரைகளில் நீர்ச்சத்து அதிகம் இருப்பதால் சுருக்கம் மற்றும் கண்புரை வராமல் தடுக்க உதவுகிறது.

  MORE
  GALLERIES

 • 88

  வயசான தோற்றத்தை தடுக்கனுமா..? அப்போ இந்த 7 உணவுகளை கட்டாயம் சாப்பிடுங்க!

  தக்காளி : தக்காளியில் உள்ள லைகோபீன் மற்றும் வைட்டமின் சி போன்ற ஆன்டிஆக்ஸிடன்ட்கஸ் ஃப்ரீ ரேடிக்கல்ஸ்களை எதிர்த்துப் போராட உதவும். லைகோபீன் உணவுக்குழாய், வயிறு மற்றும் பெருங்குடல் புற்றுநோய் அபாயத்தை தடுக்கிறது. தக்காளியை சமைத்தாலும் லைகோபீன் தன்மை மாறாது என்பது ஒரு நல்ல விஷயம். தவிர தக்காளியில் உள்ள வைட்டமின் டி முதுமையின் ஆரம்ப அறிகுறிகளைக் குறைக்க உதவுகிறது.

  MORE
  GALLERIES