உங்களுக்கு காய்ச்சல் எனில், நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கத் தேவையான அனைத்து ஊட்டச்சத்துக்களும் நிறைந்த சரியான உணவை சரியான நேரத்தில் சாப்பிடுவது அவசியம். அதே நேரத்தில், உங்கள் வயிற்றில் மிதமான மற்றும் எளிதான உணவாகவும் இருக்க வேண்டும். அதாவது அவை எளிதில் ஜீரணிக்கக்கூடிய உணவுகளாக இருக்க வேண்டும். காரணம் காய்ச்சலின் போது ஜீரண சக்தியின் வேகம் குறைவாக இருக்கும். எனவே அந்த சமயத்தில் விரைவில் ஜீரணிக்கக் கூடிய அதேசமயம் ஆரோக்கியமான உணவுகள் எவை என்பதை பட்டியலிடுகிறது இந்தக் கட்டுரை.
சூப் : தொண்டை வலிம் , சளி, காய்ச்சல் , இருமல் இப்படி எதுவாக இருந்தாலும் சூடான சூப் இதமாக இருக்கும். காய்கறி அல்லது சிக்கன் சூப் எதுவாயினும் அது ஊட்டச்சத்து மிக்கதாகத்தான் இருக்கும். இது ஜீரண சக்திக்கு ஏதுவாகவும் இருக்கும். திட உணவு ஏற்றுக்கொள்ளவில்லை எனில் ஆரோக்கியம் நிறைந்த சூப் நல்ல தேர்வாக இருக்கும்.