மழைக்காலம் வந்துவிட்டாலே பருவநிலை மாற்றம், குளிர்ந்த காற்று, ஈரப்பதம், தொற்று போன்ற காரணங்களால் சளித்தொல்லை வந்துவிடும். இதை ஆரம்பத்திலேயே தடுக்க அல்லது சளி வந்துவிட்டாலும் சரி உணவில் உள்ள வைட்டமின்கள், மினரல்கள், நோய் எதிர்ப்பு பண்புகள் மூலமாகவே சரி செய்துவிடலாம். அவை என்னென்ன உணவுகள் என்று பார்க்கலாம்.
சிக்கன் சூப் : ஒரு பவுல் நிறைய சிக்கன் சூப் பெப்பர் தூவி சாப்பிடுவது சளி, இறுமல் , தொண்டை கரகரப்பிற்கு சிறந்த உணவாக இருக்கும். சிக்கனில் உள்ள புரோட்டீன், விட்டமின்கள், மினரல்கள் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவும். காய்ச்சல் இருந்தாலும் சூடாக வீட்டிலேயே சிக்கன் சூப் செய்து சாப்பிடுவது நல்லது.
இஞ்சி : குளிர்காலத்தில், மழைக்காலத்தில் இஞ்சியை அப்படியே சாப்பிடுவது மிகவும் நல்லது. அப்படி சாப்பிட பிடிக்கவில்லை எனில் தினமும் குடிக்கும் டீயில் இஞ்சி சேர்க்கலாம். சூப் செய்யும்போது சேர்த்து குடிக்கலாம். இதில் சளி, இறுமல் போன்றவற்றிற்கான மருத்துவ குணங்கள் நிறைந்துள்ளன. காலையில் வெறும் வயிற்றில் கூட இஞ்சியை சாப்பிடலாம்.