காளான் பதபடுத்த: காளான்களில் அதிக ஈரப்பதம் இருக்கும் அதனால் அவை சீக்கிரமாகவே காலாவதியாகிவிடும். ஆனால், இந்த எளிய ஹேக் மூலம், நீங்கள் இப்போது காளான்களை அதிக நேரம் பதபடுத்தி வைக்க முடியும். அதற்கு முதலில் காற்று புகாத பாத்திரத்தை எடுத்து காய்ந்த துணி அல்லது டிஷ்யூ பேப்பரை வைத்து, காளான்களை அதன்மீது வைக்கவும். பின்னர் காளான்களுக்கு மேலே டிஷ்யூ பேப்பரை வைத்து பாத்திரத்தை மூட வேண்டும். இதனால் காளான்கள் குறைந்தது ஒரு வாரம் வரை கெட்டு போகாமல் ஃபரெஷாக இருக்கும்.
பனீர்: ஒரு பாத்திரத்தில் தண்ணீரை எடுத்து அதில் பனீரை வைத்து பின் ஃபிரிட்ஜில் எடுத்து வைக்க வேண்டும். இது பனீர் கடினமாகவும், கசப்பாகவும் மாறுவதைத் தடுக்கும். ஒருவேளை பனீர் அறை வெப்பநிலையை அடைந்த பிறகும் கூட நீங்கள் எதிர்பார்க்கும் அளவு மென்மையாக இல்லாவிட்டால் இந்த டிப்ஸை பயனப்டுத்தி பாருங்கள். மிதமாக சுட வைக்கப்பட்ட வெதுவெதுப்பான நீரை ஒரு பாத்திரத்தில் எடுத்து கொண்டு, பனீர் ஸ்லாப்பை க்யூப்ஸாக வெட்டி அதில் ஊற வைக்கவும். பன்னீர் முழுவதும் மூழ்கும் அளவிற்கு போதுமான தண்ணீரை பயன்படுத்த வேண்டும். சரியாக 5 நிமிடங்கள் கழித்து தண்ணீரிலிருந்து எடுத்து விடுங்கள். அதிக நேரம் ஊறினால் இன்னும் மென்மையாகும் என்று நீங்கள் நினைக்கலாம். ஆனால் வெதுவெதுப்பான நீரில் பனீரை அதிக நேரம் ஊறவைப்பது டிஷ் செய்ய பயன்படுத்தும் போது எளிதில் உடைந்து விடும்.
எலுமிச்சை: எலுமிச்சை பழங்கள் ஒரு மாதத்திற்கு ஃப்ரெஷாகவே இருக்க, அவற்றை தண்ணீர் உள்ள ஒரு கண்ணாடி பாத்திரத்தில் போட்டு வைக்க வேண்டும். இதனால் எலுமிச்சை நீண்ட காலத்திற்கு ஃப்ரெஷாகவே இருக்கும். எலுமிச்சையிலிருந்து அதிக சாற்றைப் பெற, அவற்றை வெட்டுவதற்கு முன் அவற்றை மேசையில் வைத்து கையில் உருட்டவும். அப்படி செய்தால் சாறு அதிகமாக வரும்.