முகப்பு » புகைப்பட செய்தி » லைஃப்ஸ்டைல் » இந்த காய்கறிகளை ஒருபோதும் சமைக்காம சாப்பிடாதீங்க... லிஸ்ட் இதோ...!

இந்த காய்கறிகளை ஒருபோதும் சமைக்காம சாப்பிடாதீங்க... லிஸ்ட் இதோ...!

பாஸ்சுரைஸ் செய்யப்பட்ட பாலை காய்ச்சாமல் பருகலாம். ஆனால் பிறவற்றை ஒருபோதும் காய்ச்சாமல் பருகக்கூடாது.

 • 18

  இந்த காய்கறிகளை ஒருபோதும் சமைக்காம சாப்பிடாதீங்க... லிஸ்ட் இதோ...!

  உணவுகள் நம் ஆரோக்கியத்தில் முக்கிய பங்கு வகிக்கின்றது. காய்கறிகள், இறைச்சி என்று எதுவாக இருந்தாலும் அதனை நமக்கு பிடித்த விதமாக சமைத்து சாப்பிடுகிறோம். ஆனால் ஒரு சில காய்கறிகளை சமைக்காமலே பச்சையாகவோ அல்லது பாதி அளவு வேக வைத்தோ சாப்பிடுவோம்.

  MORE
  GALLERIES

 • 28

  இந்த காய்கறிகளை ஒருபோதும் சமைக்காம சாப்பிடாதீங்க... லிஸ்ட் இதோ...!

  காய்கறிகளை பச்சையாக சாப்பிடுவது உடலுக்கு நன்மை பயக்கும் என்று நாம் நினைக்கிறோம். ஆனால் ஒரு சில காய்கறிகளை பச்சையாக அல்லது சரியாக சமைக்காமல் சாப்பிடுவது உடலுக்கு தீங்கு விளைவிக்கும். அந்த வகையில் என்னென்ன காய்கறிகளை சமைக்காமல் சாப்பிட கூடாது என்பதை இந்த பதிவில் பார்க்கலாம்.

  MORE
  GALLERIES

 • 38

  இந்த காய்கறிகளை ஒருபோதும் சமைக்காம சாப்பிடாதீங்க... லிஸ்ட் இதோ...!

  கீரை வகைகள் : கீரைகள் என்ன தான் ஊட்டச்சத்து நிறைந்த உணவாக இருந்தாலும் அதனை சமைக்காமல் சாப்பிடுவது ஏராளமான பிரச்னைகளைத் தரும். ஆகையால், கீரைகளை ஒரு போதும் சமைக்காமல் சாப்பிடக்கூடாது. கீரைகளில் உடலுக்கு கேடு தரும் அதிக ஆக்சலேட் அளவுகள் காணப்படுகிறது. கீரைகளை சமைக்கும் பொழுது இந்த அளவானது குறைகிறது.

  MORE
  GALLERIES

 • 48

  இந்த காய்கறிகளை ஒருபோதும் சமைக்காம சாப்பிடாதீங்க... லிஸ்ட் இதோ...!

  முட்டைக்கோஸ், காலிஃப்ளவர், ப்ரோக்கோலி... முட்டைக்கோஸ், காலிஃப்ளவர், ப்ரோக்கோலி போன்ற இந்த வகையான க்ருசிஃபரஸ் காய்கறிகளில் நோய் கிருமிகள் காணப்படுகிறது. காலிஃப்ளவரில் புழுக்கள் இருப்பதை நீங்கள் கவனித்து இருக்கலாம். பொதுவாக நாம் காலிஃபிளவரை சுடு நீரில் போட்ட பிறகே பயன்படுத்துவோம். எனவே, க்ருசிஃபரஸ் காய்கறிகளை சமைக்காமல் சாப்பிடக்கூடாது. அதோடு இந்த காய்கறிகளை சமைக்காமல் சாப்பிடுவது செரிமான பிரச்சினைகளை உண்டாக்கும்.

  MORE
  GALLERIES

 • 58

  இந்த காய்கறிகளை ஒருபோதும் சமைக்காம சாப்பிடாதீங்க... லிஸ்ட் இதோ...!

  முட்டை : முட்டையின் வெள்ளை மற்றும் மஞ்சள் கரு திடமாக மாறும் வரை அவற்றை சமைத்து சாப்பிடுவதே நல்லது. ஒரு வேலை நீங்கள் முட்டையை பச்சையாக சாப்பிட விரும்பினால் பாஸ்சுரைஸ் செய்யப்பட்ட முட்டைகளை வாங்கவும்.

  MORE
  GALLERIES

 • 68

  இந்த காய்கறிகளை ஒருபோதும் சமைக்காம சாப்பிடாதீங்க... லிஸ்ட் இதோ...!

  பால் : பாஸ்சுரைஸ் செய்யப்பட்ட பாலை காய்ச்சாமல் பருகலாம். ஆனால் பிறவற்றை ஒருபோதும் காய்ச்சாமல் பருகக்கூடாது.

  MORE
  GALLERIES

 • 78

  இந்த காய்கறிகளை ஒருபோதும் சமைக்காம சாப்பிடாதீங்க... லிஸ்ட் இதோ...!

  முளைக்கட்டிய பயிர்கள் : முளைக்கட்டிய பயிர்களை பச்சையாக சாப்பிட நம்மில் பலருக்கு பிடிக்கும். ஆனால் அவ்வாறு செய்வது தவறு. ஏனெனில், முளைக்கட்டிய பயிர்களில் பாக்டீரியாக்கள் இருக்கலாம். அதோடு முளைக்கட்டிய பயிர்களை சமைக்காமல் சாப்பிடும் போது, அதனை ஜீரணிப்பது கடினமாகிறது. ஆனால் முளைக்கட்டிய பயிர்களை சமைத்துவிட்டால் அதில் உள்ள வைட்டமின் சி குறைந்துவிடுமே என்று நீங்கள் கேட்கலாம். எனவே முளைக்கட்டிய பயிர்களை சாப்பிடும் போது, அவற்றுடன் எலுமிச்சை சாறு, தக்காளி போன்றவற்றை சேர்த்து சாப்பிடுவது பலன் தரும்.

  MORE
  GALLERIES

 • 88

  இந்த காய்கறிகளை ஒருபோதும் சமைக்காம சாப்பிடாதீங்க... லிஸ்ட் இதோ...!

  இது போன்ற விதிகள் குறிப்பாக குழந்தைகள், சிறுவர்கள், வயதானவர்கள், கர்ப்பிணி பெண்கள், பாலூட்டும் தாய்மார்கள், பலவீனமான நோய் எதிர்ப்பு அமைப்பு கொண்டவர்கள் மற்றும் குடல் சார்ந்த கோளாறுகளால் அவதிப்படுவர்களுக்கு கண்டிப்பாக பின்பற்றப்பட வேண்டும்.

  MORE
  GALLERIES