உணவு என்பது நம் வாழ்வின் இன்றிமையாத தேவைகளில் ஒன்றாக உள்ளது. நமது உடலுக்கும் மனதிற்கும் தேவையான ஊட்டச்சத்துக்களை வழங்கும் உன்னத பணிகளை மேற்கொண்டு வருகிறது. ஆனால் நம்மில் பெரும்பாலோனார் ஆரோக்கியமற்ற உணவுமுறையைத் தான் பின்பற்றுவார்கள். இதனால் உடலில் எதிர்மறையானப் பாதிப்புகளை ஏற்படுத்துவதோடு மனத்திற்கு பல்வேறு பாதிப்புகளையும் ஏற்படுத்தும். இதுப்போன்ற பிரச்சனைகளிலிருந்து நீங்கள் தப்பிக்க வேண்டும் என்றால் உள்ளுணர்வு மற்றும் விழிப்புணர்வுடன் ஒருவர் உணவை உட்கொள்ள வேண்டும்.
அதாவது, ஒரு நபருக்கும் மற்றும் உணவுக்கும் இடையேயான உறவை மேம்படுத்தக்கூடிய ‘mindful eating’என்ற முறை முதலில் அனைவரும் பின்பற்ற வேண்டும். அதாவது ஒருவர் தன் உடலுக்கு எவ்வளவு உணவு தேவை? என்பதை அறிந்து சாப்பிடுவது முதல், அவசரஅவசரமாக எதையும் சாப்பிடக்கூடாது, வயிற்றுக்கு தேவையான அளவு சாப்பிடுதல் , போன்ற பல நடைமுறைகள் இதில் அடங்கியுள்ளது. இதன் மூலம் உடலையும், மூளையும் நல்ல ஆரோக்கியத்தோடு வைத்துக்கொள்ள முடியும். உணவுடன் ஆரோக்கியமான மற்றும் நல்ல உறவை நோக்கி நமது பயணத்தைத் தொடங்க பல படிகள் உள்ள நிலையில், இதோ சில டிப்ஸ்கள் இங்கே..
ஆரோக்கியமான உணவைப் பற்றி சிந்தித்தல்: நீங்கள் வாழ்நாள் முழுவதும் ஆரோக்கியமானப் பயணிக்க வேண்டும் என்றால், முதலில் நமது உணவுப்பழக்கங்களைப் பற்றி நாம் அறிந்துக்கொள்ள வேண்டும். இதற்கான முதலில் நேரம் ஒதுக்க வேண்டும். என்னென்ன உணவுகள்? ஆரோக்கியமான உள்ளது என்பதைப் பற்றி நீங்கள் சிந்திப்பதோடு அதற்கான நேரத்தை ஒதுக்க வேண்டும்.
உதவியை நாடுதல்: நமது நண்பரக்ள் அல்லது உறவினர்கள் ஒவ்வொருவரும் ஒவ்வொரு வகையான உணவுகள் தான் சிறந்தது என்பார்கள். இவ்வாறு பலர் சொல்வதைக் கேட்டு நிச்சயம் நாம் குழப்பமடைவோம். இந்த நேரத்தில் நீங்கள் சிறந்த ஊட்டச்சத்து நிபுணர்களிடம் பேச வேண்டும். இதன் மூலம் என்னென்ன உணவுகள் உடல் ஆரோக்கியத்திற்கு உதவும் என்பதை அறிந்துக் கொள்ள முடியும்.
ஊட்டச்சத்துக்கு முன்னுரிமை : நமது உடலுக்குத் தேவையான ஊட்டச்சத்துக்களை வழங்கும் உணவுகளில் கவனம் செலுத்துவது, அதிக ஆற்றலுடனும் ஆரோக்கியத்துடனும் உணர்வதற்கு உதவியாக இருக்கும். இதோடு ஆரோக்கியமான உணவில் எல்லா உணவுகளும் இடம் பெறலாம் என்பதையும், அளவோடு உணவுகளை ருசிப்பது சரியே என்பதையும் உணர்ந்து, உணவைப் பற்றிய நேர்மறையான அணுகுமுறையை வளர்த்துக் கொள்ள வேண்டும்.