குறிப்பாக, உயர் ரத்த அழுத்தம் என்பது ஒரு சைலண்ட் கில்லர் என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும். இதய நோய்களை இது வரவழைக்கும். சில சமயங்களில் ஹைப்பர்டென்சன் மற்றும் ஸ்ட்ரோக் ஆகிய பிரச்சினைகள் கூட ஏற்படும். உயர் ரத்த அழுத்தம் இருப்பது கண்டறியப்படாமல் இருப்பதாலும் அல்லது போதுமான சிகிச்சை எடுத்துக் கொள்ளாமல் இருப்பதாலும் அந்த நிலை ஏற்படுகிறது. ஆனால், உயர் ரத்த அழுத்தத்தை நமது உணவியல் மாற்றங்கள் மூலமாக சரி செய்து விடலாம். அதை இந்தச் செய்தி மூலமாக தெரிந்து கொள்வோம்.
நிபுணர்கள் சொல்வது என்ன : உணவில் சோடியம் அளவை குறைப்பதன் மூலமாக உயர் ரத்த அழுத்தத்தை கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வரலாம் என்று அனுபவம் கொண்ட மருத்துவர்களும், நிபுணர்களும் பரிந்துரை செய்கின்றனர். சோடியம் அளவை நீங்கள் அதிகம் எடுத்துக் கொள்ளும்போது உடலில் இருந்து வெளியேற்ற அதிக நீர்ச்சத்து தேவைபடுகிறது. அத்தகைய சூழலில், ரத்த அழுத்தம் அதிகரிக்கிறது. ஆகவே, உணவில் உப்பின் அளவை குறைத்துக் கொள்ள வேண்டும்.
வாழைப்பழம் : வாழைப்பழத்தில் பொட்டாசியம் சத்து நிறைந்துள்ளது. ரத்த அழுத்த அளவை மேலாண்மை செய்ய இது உதவும். அதாவது பொட்டாசியம் மற்றும் சோடியம் ஆகியவை 2:! என்ற அளவில் இருந்தால், உங்கள் உடலில் ரத்த அழுத்தம் சீராக இருக்கும். நீங்கள் எடுத்துக் கொள்ளும் சோடியத்தை விட இரு மடங்காக பொட்டாசியம் இருக்க வேண்டும். அதற்கு வாழைப்பழம் உதவிகரமாக இருக்கும்.
அரிசி சாதம், கடலை மற்றும் பாதாம் பருப்புகள் : அரிசி சாதம், கடலை, பரங்கிக்காய் விதைகள், முந்திரி, பாதாம் மற்றும் ஓட்ஸ் ஆகிய உணவுகளில் மெக்னீசியம் சத்து நிறைந்துள்ளது. ரத்த அழுத்தத்தை குறைக்க இந்த மெக்னீசியம் உதவிகரமாக இருக்கும். மெக்னீசியத்தில் இடம்பெறும் நைட்ரிக் ஆசிட் என்பது உங்கள் ரத்த நாளச் சுவர்களுக்குள் நுழைந்து அதை இலகுவாக்கும். இதனால், ரத்த ஓட்டம் அதிகரிக்கும். நாளொன்றுக்கு 500 மி.கி. முதல் 1,000 மி.கி. வரையில் மெக்னீசியம் எடுத்துக் கொண்டால் ரத்த அழுத்தம் குறையும்.
பால் மற்றும் பால் சார்ந்த பொருட்கள் : இதய நலனுக்கு கால்சியம் சத்து இன்றியமையாத ஒன்று. ஆனால், நம் உடலில் பற்கள் மற்றும் எலும்புகளில் தான் அதிக கால்சியம் சேமிக்கப்படுகிறது. ரத்த நாளங்கள் விரிவடைய கால்சியம் உதவிகரமாக இருக்கும் என்பதால், அதன் எதிரொலியாக ரத்த அழுத்தம் குறையும். ஆகவே, வீட்டில் தயார் செய்யப்பட்ட பால் சார்ந்த பொருட்களை அதிகம் எடுத்துக் கொள்ள வேண்டும்.