இஞ்சி அனைவரது வீட்டிலும் இருக்கும் ஒரு நறுமணப் பொருளாகும். பலருக்கு இஞ்சி தேநீர் அருந்தாமல் காலை நேரம் முழுமையடையாது. மசாலாப் பொருட்களாக மட்டுமல்லாமல், ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக இஞ்சி பயன்படுத்தப்பட்டு வருகிறது. குறிப்பாக அனைத்து அசைவ உணவுகளிலும் இஞ்சி கண்டிப்பாக சேர்க்கப்படும். இது உணவின் கூடுதல் சுவைக்காக மட்டுமின்றி பல்வேறு ஆரோக்கிய நன்மைகளையும் கொண்டுள்ளது. இஞ்சி எண்ணற்ற சத்துக்களை கொண்டிருந்தாலும் இதனை அதிகமாக உணவில் சேர்க்கும் போது பக்க விளைவுகளையும் ஏற்படுத்தக்கூடும் என்பது குறிப்பிடத்தக்கது.உணவில் அதிகமாக இஞ்சி சேர்ப்பதால் ஏற்படும் பக்க விளைவுகள்....
நெஞ்செரிச்சல் : இஞ்சி, அதிக அளவுகளில் எடுத்துக் கொள்ளும்போது, லேசான நெஞ்செரிச்சல் ஏற்படலாம். வயிற்றுப்போக்கு மற்றும் பெல்ச்சிங் போன்ற பிற பக்கவிளைவுகளும் இதனுடன் அடங்கும். இஞ்சி குறித்து நடத்தப்பட்ட ஆய்வில் நெஞ்செரிச்சலுக்கு இது முக்கியமான காரணமாக அமைவது கண்டறியப்பட்டுள்ளது. அதிகளவில் எடுத்துக்கொள்ளும் போது மட்டும் இந்த பக்கவிளைவு ஏற்படுவதாக கூறப்படுகிறது.
தோல் மற்றும் கண் ஒவ்வாமை : அதிகப்படியான இஞ்சி உட்கொள்வதால் ஏற்படும் அடிப்படை பக்க விளைவுகளில் தோல் வெடிப்பு, கண் சிவத்தல், மூச்சுத்திணறல், அரிப்பு, வீக்கம், கண்கள் அரிப்பு மற்றும் தொண்டை அசௌகரியம் போன்ற பிரச்சனைகள் அடங்கும். இத்தகைய சூழ்நிலைகளில், உடனடியாக மருத்துவ உதவியை நாட அறிவுறுத்தப்படுகிறது.