Benefits of Fennel Seeds : இந்திய உணவுகளில் சேர்க்கப்படும் முக்கியமான மசாலா பொருட்களில் ஒன்று சோம்பு என அழைக்கப்படும் பெருஞ்சீரகம். இது, உணவில் வாசனை மற்றும் சுவையை அதிகரிக்க பயன்படுத்தப்படுகிறது. பெருஞ்சீரகம் உணவின் சுவையை மேம்படுத்துவது மட்டுமல்லாமல், ஆரோக்கியத்திற்கு மிகவும் நன்மை பயக்கும். இதை, மவுத் ஃப்ரெஷனராகவும் பயன்படுத்தப்படுகிறது. இது தவிர, ஆயுர்வேதத்தில் பெருஞ்சீரகம் ஒரு மருந்தாகவும் பயன்படுத்தப்படுகிறது.
பெருஞ்சீரகத்தில் கால்சியம், சோடியம், இரும்பு மற்றும் பொட்டாசியம் போன்றவை உள்ளன. அவை, உடலை பல நோய்களிலிருந்து பாதுகாக்க உதவுகின்றன. செரிமானம், வயிற்று வலி, வாய் மற்றும் கண்பார்வை ஆகியவற்றுக்கு சிறந்த மருந்தாக உள்ளது. பெருஞ்சீரகத்தைப் பயன்படுத்துவதன் மூலம் உடல் எடையை எளிமையாக குறைக்கலாம். மேலும், இது நியாபக சக்தியை அதிகப்படுத்துகிறது. இது மட்டும் அல்ல, இன்னும் பல நன்மைகளை சோம்பு கொண்டுள்ளது.