நமது உடலுக்கு தேவையான இன்றியமையாத ஊட்டச்சத்துக்களில் துத்தநாகமும் ஒன்றாகும். ஜிங்க் என அழைக்கப்படும் இது நமது உடலுக்கு பல்வேறு வழிகளில் நன்மை செய்கிறது. ஜிங்க் குறைபாடு ஏற்படும்போது இவை நமது உடலில் பல்வேறு விதமான பிரச்சினைகளை உண்டாக்கக்கூடும். எனவே தினசரி உணவில் துத்தநாகம் நிறைந்த உணவுப் பொருட்களை சேர்த்துக் கொள்வது அவசியமாகும் அந்த வகையில் எந்தெந்த உணவு பொருட்களில் துத்தநாகம் அதிக அளவு உள்ளது என்பதை பற்றி இப்போது பார்ப்போம்.
முட்டைகள் : முட்டைகளில் துத்தநாகம் மட்டுமின்றி புரதம் வைட்டமின்கள் என பல்வேறு விதமான சத்துக்கள் நிறைந்துள்ளன. மேலும் உடல் எடையை அதிகரிக்க விரும்புபவர்களுக்கு முட்டை ஒரு சிறந்த உணவாக கருதப்படுகிறது. மேலும் முட்டைகளை நாம் விதவிதமான முறைகளில் சமைத்து உண்ணலாம் என்பதால் இவை குழந்தைகளுக்கும் மிகவும் பிடித்தமான ஒன்றாக இருக்கும்.