முகப்பு » புகைப்பட செய்தி » லைஃப்ஸ்டைல் » தேனை இப்படி சாப்பிட்டால் போதும்.. சட்டுனு உடல் எடை குறையும்..!

தேனை இப்படி சாப்பிட்டால் போதும்.. சட்டுனு உடல் எடை குறையும்..!

செரிமானத்தை மேம்படுத்துவது என்று தேனில் இருக்கும் மருத்துவ குணங்களில் ஒன்றாகும்

  • 17

    தேனை இப்படி சாப்பிட்டால் போதும்.. சட்டுனு உடல் எடை குறையும்..!

    காலையில் எழுந்தவுடன் சூடான நீரில் தேன் கலந்து குடித்தால் எடை குறையும் என்று காலம் காலமாக கூறப்பட்டு வருகிறது. எடை குறைக்க உதவும் ஒரு சில உணவுகள் இருக்கின்றன. இதில் ஒவ்வொரு நபருக்கும் எடை குறைப்பு என்பது ஒவ்வொரு விதமாக செயல்படும். இருப்பினும் தேன் சாப்பிட்டால் கட்டாயமாக எடை குறையும். ஆனால் தேனை எவ்வாறு சாப்பிட வேண்டும் என்பதும் இருக்கிறது. தேனை பின்வருமாறு பயன்படுத்தினால் கண்டிப்பாக எடை குறையும். அதை பற்றிய விவரங்களை இங்கே பார்க்கலாம்.

    MORE
    GALLERIES

  • 27

    தேனை இப்படி சாப்பிட்டால் போதும்.. சட்டுனு உடல் எடை குறையும்..!

    சாதாரண புளி போல் அல்லாமல், குடம்புளி அதிக ஊட்டச்சத்து ஆனால் குறைவான புளிப்பு சுவை கொண்ட சமையலுக்குப் பயன்படும் ஒரு புளி வகையாகும். இது தமிழகத்தில் பரவலாக விளையும் தன்மை கொண்டது. சாதாரண புளிக்கு பதிலாக குடம்புளியை சாம்பார், குழம்பு, ரசம் என்று சமையலுக்கு பயன்படுத்தினால் உடல் எடையில் மாற்றங்கள் ஏற்படக்கூடும். குடம் புளி மற்றும் தேனை சேர்த்து தினசரி காலையில் பருகி வந்தால் உடல் எடையை கட்டுக்குள் வைத்திருப்பதோடு அதிக எடை இருப்பவர்கள் உடலை குறைக்க முடியும். இவை இரண்டுமே வளர்சிதை மாற்றத்தை அதிகரித்து நாள் முழுவதும் ஆற்றலை கொடுக்கும்.

    MORE
    GALLERIES

  • 37

    தேனை இப்படி சாப்பிட்டால் போதும்.. சட்டுனு உடல் எடை குறையும்..!

    சர்க்கரைக்கு பதில் மாற்று இனிப்பு  : இயற்கையான இனிப்புப் பொருளான தேன் எடை குறைப்பதற்கு உதவுவது மட்டுமல்லாமல் இனிப்பு சாப்பிட வேண்டும் என்ற ஆசையை கட்டுப்படுத்தவும் உதவுகிறது. அதாவது, பொதுவாகவே அதிக இனிப்பு சாப்பிடும் பழக்கம் இருப்பவர்கள் சர்க்கரை நிறைய சேர்த்துக் கொள்வார்கள். இனிப்புகள், கேக், டெஸர்ட் என்று சாப்பிடுவார்கள். தேனில் வைட்டமின்கள், கனிமச்சத்துக்கள் மற்றும் ஆன்டி ஆக்ஸிடன்ட் நிறைந்துள்ளன. ஜீரோ சத்துக்கள் ஆனால் அதிக கலோரி கொண்ட சுத்திகரிக்கப்பட்ட சர்க்கரைக்கு மிகச்சிறந்த மாற்றாக தேனை பயன்படுத்தி எடை குறைக்கவும் எடையை நிர்வகிக்கவும் முடியும். சூடான பானங்கள், குளிர்பானங்கள், இனிப்பு வகைகள் என்று பெரும்பாலும் தேனை பயன்படுத்த முடியும்.

    MORE
    GALLERIES

  • 47

    தேனை இப்படி சாப்பிட்டால் போதும்.. சட்டுனு உடல் எடை குறையும்..!

    தேன் செரிமானத்தை அதிகரிக்கும்  : செரிமானத்தை மேம்படுத்துவது தேனில் இருக்கும் மருத்துவ குணங்களில் ஒன்றாகும். தேனில் இருக்கும் என்சைம்கள் செரிமானத்திற்கு காத்திருக்கும் உணவுகளை பிரேக்டவுன் செய்து செரிமானத்தை எளிதாக்கும். எனவே சாப்பிட்ட பிறகு ஓரிரு டீஸ்பூன் தேன் சாப்பிடுவது செரிமான பிரச்சனையை சரி செய்யும். இதன்மூலம் செரிமான கோளாறால் ஏற்படக்கூடிய எடை அதிகரிப்பை நிவர்த்தி செய்ய முடியும்.

    MORE
    GALLERIES

  • 57

    தேனை இப்படி சாப்பிட்டால் போதும்.. சட்டுனு உடல் எடை குறையும்..!

    உடற்பயிற்சி செய்யும் முன்பு ஆற்றல் பெற உதவும் : பொதுவாகவே இனிப்பு சாப்பிடும் பொழுது உடலில் ஆற்றல் அளவு அதிகரிக்கும். தேனில் உள்ள இயற்கையான இனிப்பு உடலில் இருக்கும் ஆற்றல் அளவுகளை துரிதமாக அதிகரிக்கும் தன்மை கொண்டது. எனவே உடற்பயிற்சி செய்யும் செய்வதற்கு முன்பு தேன் கலந்த பானத்தை குடிப்பது நீண்ட நேரம் மற்றும் அதிக வலிமையுடன் உடற்பயிற்சி செய்வதற்கு உதவும்.குறிப்பாக ஹை இன்டன்சிட்டி உடற்பயிற்சி செய்வதற்கு கூடுதல் ஆற்றல் தேவைப்படும் போது தேனை பயன்படுத்தலாம்.

    MORE
    GALLERIES

  • 67

    தேனை இப்படி சாப்பிட்டால் போதும்.. சட்டுனு உடல் எடை குறையும்..!

    தேன் பசியைக் கட்டுப்படுத்தி, திருப்தியாக சாப்பிட்ட உணர்வைத் தரும்  :மேலே கூறியது போல தேன் சாப்பிடும் பொழுது எனர்ஜி லெவல் உடனடியாக அதிகரிக்கும். ஏனென்றால் தேனில் இயற்கையான சர்க்கரைகள் இருக்கின்றன. இனிப்பான உணவை சாப்பிட்ட பின்பு சாப்பிட்ட திருப்தி கிடைக்கும் சிலர், தேனை சாப்பிடலாம். செயற்கையான அதிக கலோரிகள் கொண்ட சர்க்கரை சேர்க்கப்பட்ட இனிப்பு அல்லது கேக் உள்ளிட்ட இனிப்புகளை சாப்பிடுவதற்குப் பதிலாக பசியை குறைப்பதற்கு அல்லது வயிறு நிறைவாக இருப்பதாக உணர்வதற்கு தேனை சாப்பிடலாம். இதன் மூலம் கூடுதல் கலோரிகளை சாப்பிடுவது தவிர்க்கப்படும், உங்களுக்கு தேவையான ஊட்டச்சத்தும் கிடைக்கும்.

    MORE
    GALLERIES

  • 77

    தேனை இப்படி சாப்பிட்டால் போதும்.. சட்டுனு உடல் எடை குறையும்..!

    தேனை காலையில் எழுந்தவுடன் வெறும் வயிற்றில் சாப்பிடுவது நல்ல பலன் தரும். ஒரு கிளாஸ் வெதுவெதுப்பான நீரில் தேன் கலந்து சாப்பிட்டு வரலாம்.

    MORE
    GALLERIES