சிவப்பு பயறு என்றும் அழைக்கப்படும் மசூர் பருப்பு ஆற்றல் மற்றும் ஊட்டச்சத்துக்களால் நிரம்பியுள்ளது. இதை தினசரி உணவில் எடுத்துக் கொண்டால் அதிக நன்மைகள் கிடைக்கும். இது இந்திய உணவுகளில் அதிகமாக பயன்படுத்தப்படும் பருப்பு வகைகளில் ஒன்று. ஒரு கப் மசூர் பருப்பு ஊட்டச்சத்து மற்றும் உணவின் முழு தேவையை பூர்த்தி செய்கிறது என கூறப்படுகிறது.
மசூர் பருப்பில் இரும்பு, புரதம், நார்ச்சத்து, வைட்டமின் C, B6, B2, ஃபோலிக் அமிலம், கால்சியம், துத்தநாகம், மெக்னீசியம் மற்றும் தாதுக்கள் அதிகம் உள்ளது. உடல் எடையை குறைக்க விரும்புபவர்கள், இந்த பருப்பை தினமும் எடுத்துக்கொண்டால் நல்ல பலன் கிடைக்கும். இது சமைப்பதற்கு எளிமையாகவும், மற்ற பருப்பு வகைகளை விட மிகவும் சுவை மிகுந்தது. நம் ரசனைக்கேற்ப, பல்வேறு மசாலா பொருட்களை சேர்த்து சமைக்கலாம். மசூர் பருப்பை எளிமையான மற்றும் சுவகையாக சமைக்கும் முறைகளை இங்கே காணலாம்.
மைசூர் பருப்பில் உள்ள சத்துக்கள் : ஒரு கப் மசூர் பருப்பில் 230 கலோரிகள், 15 கிராம் நார்ச்சத்து மற்றும் 17 கிராம் புரதம் உள்ளன. 44.5 கிராம் கார்போஹைட்ரேட் மற்றும் 6 மி.கி இரும்புசத்து மற்றும் புரதச்சத்து நிறைந்துள்ளது. எனவே, இந்த பருப்பு சத்துக்கள் நிறைந்த ஒரு சிறந்த சைவ உணவாகும். மசூர் பருப்பில் உள்ள ஆன்டிஅக்சிடேன்டுகள் தோலில் உள்ள திசுக்களின் சேதத்தை எதிர்த்து போராடுவதுடன், வயதான தோற்றத்தில் இருந்து நம்மை காக்கிறது. இது எலும்புகளை பலப்படுத்துகிறது.
இது விலை குறைந்த து மற்றும் சமைப்பதற்கு எளிமையாக இருக்கும் பருப்பு. இதை வைத்து பல வகையில் வித விதமான முறைகளில் சமைக்கலாம். தால் தட்கா, மசூர் தால் சூப், மசூர் தால் கிச்சடி, மசூர் தால் கபாப்ஸ், மசூர் தால் தோசை மற்றும் பல உணவுகளை சிவப்பு பருப்பை வைத்து செய்யலாம். இந்த உணவுகளை வீட்டிலேயே எப்படி செய்யலாம் என இங்கே காணலாம்.
தால் தட்கா : Dal Tadka அல்லது Tadka Dal என்பது மிகவும் அடிப்படையான உணவுகளில் ஒன்று. இது உணவகங்கள் மற்றும் சாலையோர தாபாக்களில் கிடைக்கும் மிகவும் பிரபலமான பருப்பு ரெசிபிகளில் ஒன்றாகும். இது இரண்டு பருப்புகளின் கிரீமி கலவையாகும். மசூர் பருப்பை முதலில் வேகவைத்து எடுத்துக்கொள்ளவும். பின்னர், 1 தக்காளி, உப்பு, மஞ்சள் மற்றும் இஞ்சி எடுத்துக்கொள்ளவும். நெய் / எண்ணெய் கொண்டு இவற்றை வதக்கிய பின், பருப்பை சேர்த்து கொதிக்க வைத்து இறக்கவும்.
மசூர் தால் சூப் : இது காலை உணவுக்கு ஏற்ற உணவு வகைகளில் ஒன்று. இது நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும். இந்த சூப் செய்ய, நீங்கள் செய்ய வேண்டியது எல்லாம், மசூர் பருப்பை நன்கு கழுவி, வெங்காயம், தக்காளி, பூண்டு, மிளகு, உப்பு மற்றும் சிறிது சிவப்பு மிளகாய் தூள் சேர்த்து குக்கரில் 3-4 விசில் வைக்கவும். பின்னர், அதை ப்யூரியில் நன்றாக அரைத்து, சிறிது நெய்யில் தாளித்து எடுத்தால் சுவையான சூப் ரெடி.
மசூர் தால் கிச்சடி : இந்த சத்தான கிச்சடியை குழந்தைகள் முதல் பெரியவர்களுக்கும் கொடுக்கலாம். ஏனெனில், இது புரதம் மற்றும் நார்ச்சத்து நிறைந்தது. முதலில் அரிசி மற்றும் மசூர் பருப்பை ஒன்றாக ஊறவைக்கவும். பின்னர், குக்கரில் சிறிது எண்ணெய் அல்லது நெய் சேர்த்து சிறிது வெங்காயம், தக்காளி, இஞ்சி-பூண்டு விழுது மற்றும் அரைத்த மசாலாப் பொருட்களை சேர்த்து வதக்கவும். பச்சை வாசனை போகும் வரை வதக்கவும். பின்னர், ஊறவைத்தை அரிசியை சேர்ந்து தேவையான அளவு தண்ணீர் சேர்த்து 3-4 விசில் வைத்து இறக்கவும். பரிமாறும் போது, சிறிது பசு நெய் மற்றும் கொத்தமல்லி சேர்க்கவும். தேவைப்பட்டால் காய்கறிகள் சேர்க்கலாம்.
மசூர் தால் தோசை : தோசைக்கு மாவு அரைக்கும் போது, மாவு புளிக்க சிறிது கடலை பருப்பை சேர்த்து அரைக்கவும். மசூர் பருப்பு மற்றும் கடலை பருப்பை தனித்தனியாக ஊற வைக்கவும். ஊறவைத்த பருப்பை அரிசியுடன் சேர்த்து 1 மணிநேரம் 1 மணிநேரம் ஊற வைக்கவும். பின்னர், சீரகம், காய்ந்த மிளகாய், உப்பு சேர்த்து நன்றாக அரைத்து எடுக்கவும். தோசை கல்லில் சிறிது எண்ணெய் ஊற்றி தோசை உதவும். தேவைப்பட்டால் உளுத்தம்பருப்பும் சேர்க்கலாம். இதனுடன் சட்னி அல்லது சாம்பார் வைத்து பரிமாறலாம்.