வீட்டில் ஒரு முருங்கை மரம் இருந்தால் போதும் அந்த வீட்டில் நோயே வராது என பெரியவர்கள் சொல்வதுண்டு. அதற்குக் காரணம் அதில் இருக்கும் மருத்துவ குணங்கள்தான். அதன் இலை, காய் , பூ , பிசின் என அனைத்தும் உடலுக்கு ஊட்டச்சத்து தருகின்றன. அந்த வகையில் நீரிழிவு நோயாளிகள் சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்தவும், நீரிழிவு நோய் வராமல் இருக்கவும் முருக்கைக்காயில் தேநீர் செய்து குடித்து வரலாம்.