கோடை காலத்தில் உடலில் வறட்சி ஏற்படாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். அதற்காக நம் வீட்டி உள்ள தாத்தா பாட்டி வெயில் காலத்தில் தண்ணீரை அதிகம் பருக வேண்டும் என்பார்கள். அது மட்டுமில்லாமல் குளிர்ச்சி தன்மை அதிகம் நிறைந்த பானங்களான மோர், இளநீர், பானகம், கரும்பு, தர்பூசணி, வெள்ளரிகாய் ஆகிவற்றை அருந்த சொல்வார்கள். இவை அனைத்தும் இயற்கையாக நமக்கு கிடைக்கக்கூடிய மற்றும் எளிமையாக கிடைக்கக்கூடிய பானங்கள். ஆனால் இன்றைய தலைமுறையினர் யாரும் இதை கடைப்பிடிப்பதில்லை. கோடைக்காலத்தில் உடலின் வெப்பத்தை தணிக்க இது போன்ற இயற்கையான முறையில் கிடைக்ககூடிய பானங்களை அருந்துவது சிறந்தது.
பானகம்: கிராமங்களில் திருவிழாவின் போது வீட்டின் வாசலில் வைத்து அனைவருக்கும் இந்த பானகத்தை கொடுபார்கள். அவற்றில் பனைவெள்ளம், எலுமிச்சை, ஏலக்காய், சுக்குப்பொடி, தண்ணீர், வேப்பம் மரத்தின் இலை அல்லது புதினா, ஆகிவற்றை கலந்து ஒரு ஆரோக்கியமான பானகமாக தயார் செய்வார்கள். இதனை வெயிலின் போது பருகினால் உடலுக்கு தேவையான எனர்ஜியை கொடுக்கும் மற்றும் இந்த பானகத்தில் பனைவெல்லத்தை சேர்ப்பதினால் உடலுக்கு இரும்புச்சத்து கிடைக்கும், விட்டமின் சி நிறைந்தது.
வெள்ளரி: வெள்ளரிகள் அதிக அளவு ஹைட்ரேடிங் மற்றும் மினரல்ஸ், வைட்டமின்ஸ் மற்றும் எலக்ட்ரோலைட்ஸ்கள் அதிகம் உள்ளன. கோடை மற்றும் வெப்பம் மிகுந்த நாட்களில் இது உடலுக்கு குளிர்ச்சியை தரும் உணவாக இருக்கிறது. உடலின் வாட்டர் பேலன்ஸை மேம்படுத்த வெள்ளரிகள் உதவுகின்றன. வெள்ளரியில் மிகுந்துள்ள நீர்ச்சத்து உள்ளது. வெள்ளரிக்காயை அப்படியே சாப்பிட்டாலும் சரி அல்லது அதனை ஜூஸ் போட்டு குடித்தால் சரி அது உடலை ஈரபதத்துடன் வைத்துக்கொள்ளும்.