ஹோம் » போடோகல்லெரி » லைஃப்ஸ்டைல் » ரகசியமாக உடல் எடையை கூட்டும் குடிபானங்கள்..! எடை குறைப்பின்போது இதை தவிர்த்திடுங்க..!

ரகசியமாக உடல் எடையை கூட்டும் குடிபானங்கள்..! எடை குறைப்பின்போது இதை தவிர்த்திடுங்க..!

ஆரோக்கியமானவை என்று கருதப்படும் பழச்சாறுகளும் உடல் எடையை அதிகரிக்கும் ஒரு காரணியாக உள்ளது.

 • 16

  ரகசியமாக உடல் எடையை கூட்டும் குடிபானங்கள்..! எடை குறைப்பின்போது இதை தவிர்த்திடுங்க..!

  ் உடல் எடையை குறைக்கும் ஆர்வமும் நம்மில் பல பேருக்கு உண்டு. அதற்காக கடுமையான உடற்பயிற்சி, தொலை தூர நடைபயிற்சி, உணவுக் கட்டுப்பாடு, என பல்வேறு விஷயங்களை நம்மில் பலபேர் எடையைக் குறைக்கும் நோக்கில் பல கட்டுப்பாட்டுடன் இருப்பதுண்டு. பெரும்பாலும் நமது உணவு பழக்கங்கள் நாம் எதை உட்கொள்கிறோம் என்பதை பொறுத்தே உள்ளது. ஆனால் நீங்கள் எதை பருகுகிறீர்கள் என்பதை கவனித்திருக்கிறீர்களா? நாம் உணவுடன் சேர்த்து அருந்தும் பானங்களில் உள்ள ஊட்டச்சத்து இல்லாத வெற்று கலோரிகள் உங்களின் உடல் எடையை குறைக்கும் முயற்ச்சியை இரகசியமாக சீரழித்துக் கொண்டிருக்கிறது. அப்படி கலோரிகளை ரகசியமாக கூட்டி உங்கள் உடல் எடை குறைப்பை சீரழிக்கும் சில பானங்கள் இதோ..

  MORE
  GALLERIES

 • 26

  ரகசியமாக உடல் எடையை கூட்டும் குடிபானங்கள்..! எடை குறைப்பின்போது இதை தவிர்த்திடுங்க..!

  காஃபி : காஃபி பிரியர்களுக்கு இது ஒரு கசப்பான செய்தியாக இருந்தாலும் உங்களுடைய உடல் எடையை குறைப்பதற்கு காஃபி ஒரு தடையாக உள்ளது. காஃபியில் உள்ள கஃபீன் (caffeine) சரியான முறையில் அதாவது பிளாக் காஃபியாக உட்கொள்ளப்பட்டால் உடல் எடையை குறைக்க உதவும். ஆனால் காஃபியுடன் சர்க்கரை, கிரீம் , மிகுதியான பால், விப்புடு கிரீம் (whipped cream) ஆகியவை அதன் பலனை குறைத்து கலோரியை அதிகப்படுத்தும். கருப்பு காஃபியுடன் மசாலா சேர்த்துக்கொள்வது சரியான உடல் எடையை பராமரிக்க உதவுவதாக நிபுணர்கள் பரிந்துரைக்கின்றனர்.

  MORE
  GALLERIES

 • 36

  ரகசியமாக உடல் எடையை கூட்டும் குடிபானங்கள்..! எடை குறைப்பின்போது இதை தவிர்த்திடுங்க..!

  Premixed Tea : Premixed குடிபானங்கள் : உடல் எடையை குறைப்பதற்கு எளிதான தேர்வாக இருக்கலாம். ஆனால் தற்போது கடைகளில் கிடைக்கும் உங்களுக்கு பிடித்தமான Premixed டீ என்பது சர்க்கரை, பிற சேர்க்கைகள், சுவையூட்டிகள், டீ யின் நற்குணங்கள் சிறிதளவேயுள்ளது. அதனால் அவற்றில் வெற்று கலோரிகளை தவிர வேறொன்றுமில்லை. Premixed Tea க்கு மாறாக ஃபிரெஷான தேநீர், மூலிகை தேநீர் ஆகியவற்றை பருகுவது ஆரோக்கியமானதும் நாவின் சுவைக்கு ஆறுதல் தரக்கூடியதுமாகும்.

  MORE
  GALLERIES

 • 46

  ரகசியமாக உடல் எடையை கூட்டும் குடிபானங்கள்..! எடை குறைப்பின்போது இதை தவிர்த்திடுங்க..!

  கார்பனேற்றப்பட்ட பானங்கள் : குளிர் பானங்கள், சோடா அடிப்படையிலான எனர்ஜி ட்ரிங்க்ஸ் ஆகியவற்றின் சுவை நம்மை கவர்ந்திழுத்து, தாகத்தை வேண்டுமானால் பூர்த்தி செய்யலாம். ஆனால் அவற்றில் குவிந்திருக்கும் சர்க்கரை, வெற்று கலோரிகள் உடனடியாக ஆற்றலளித்தாலும் மெல்ல மெல்ல உடலின் நீர்ச்சத்தை குறைத்து இரத்தத்தின் சர்க்கரை, இரத்த அழுத்தம், இருதய கோளாறுகள் ஆகியவற்றை அதிகரிக்கும் அபாயம் உள்ளதாக நிபுணர்கள் நம்புகின்றனர்.

  MORE
  GALLERIES

 • 56

  ரகசியமாக உடல் எடையை கூட்டும் குடிபானங்கள்..! எடை குறைப்பின்போது இதை தவிர்த்திடுங்க..!

  மதுபானங்கள் : உணவுடன் ஒயின், பீர் மற்ற மதுபானங்களை சேர்த்து கொள்வது கலோரி எண்ணிக்கையை கூட்டுவதோடு உடல் எடையை குறைக்கும் திட்டத்தை பாழாக்கும். அமெரிக்கர்கள் தினமும் சராசரியாக 100 கலோரிகளை மதுபானங்களின் மூலம் உட்கொள்கின்றனர் என நோய் கட்டுப்பாட்டு மையத்தால் கண்டறியப்பட்டுள்ளது என ஒரு டிஜிட்டல் பத்திரிக்கையில் ஆய்வறிக்கை வெளியிடப்பட்டது. மதுபானங்களை இரவு உணவுடன் சேர்த்து கொள்ளுதல் வளர்சிதை மாற்றம் மற்றும் இதய கோளாறுகளை அதிகப்படுத்தும்.

  MORE
  GALLERIES

 • 66

  ரகசியமாக உடல் எடையை கூட்டும் குடிபானங்கள்..! எடை குறைப்பின்போது இதை தவிர்த்திடுங்க..!

  பழச்சாறுகள் : ஆரோக்கியமானவை என்று கருதப்படும் பழச்சாறுகளும் உடல் எடையை அதிகரிக்கும் ஒரு காரணியாக உள்ளது. சுவைக்காக சேர்க்கப்படும் சர்க்கரை, சேர்க்கைகள், சுவையூட்டிகள் கலோரிகளை கூட்டுவதோடு உங்கள் உணவு திட்டங்களை கெடுத்துவிடும். பேக்கேஜ்ட் ஜூஸ்கள் உடலெடையை கூட்டுவதோடு ஆரோக்கிய குறைபாடுகளையும் ஏற்படுத்தும். எனவே பேக்கேஜ்ட் ஜூஸ்க்கு மாறாக ஃபிரெஷ் ஜூஸ் குடிக்கலாம் அதுவும் இனிப்பு சுவையூட்டுவதற்கு ஏதேனும் கூடுதலாக சேர்க்காமல் அப்பழத்தின் இயற்கையான இனிப்பு சுவையிலேயே குடிப்பது சிறந்தது என்று நிபுணர்கள் பரிந்துரைக்கின்றனர்.

  MORE
  GALLERIES