நமது உடலில் உள்ள நச்சுக்களை வெளியேற்றுவதற்காக தற்போது பலரும் காய்கறிகளையும் பழங்களையும் சேர்த்து செய்யப்படும் பழச்சாறுகளை அருந்துவதை வழக்கமாக கொண்டுள்ளார்கள். இதன் மூலம் நமது உடலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள முடியும் என்பது அவர்களது நம்பிக்கை. மேலும் இவ்வாறு பழங்களையும் பச்சை காய்கறிகளையும் சேர்த்து ஜூஸ் போட்டு குடிப்பதால் உடலுக்கு பல்வேறு நன்மைகள் கிடைப்பதாக சமூக வலைத்தளங்களில் பல்வேறு வீடியோக்கள் வந்த வண்ணம் இருக்கின்றன. அதன் காரணமாகவே இப்போது இது ஒரு ஃபேஷனாக மாறிவிட்டது.
ஆனால் உண்மையிலேயே பச்சைக் காய்கறிகளையும் பழங்கலையும் சேர்த்து டிடாக்ஸ் ஜூஸ் தயாரித்தால் அவை உயிருக்கே ஆபத்தாக முடியலாம் என மருத்துவர்கள். எச்சரிக்கின்றனர் குறிப்பாக கல்லீரல் சம்பந்தப்பட்ட நோய் இருப்பவர்களுக்கும், சிறுநீரக சம்பந்தப்பட்ட பிரச்சனை இருப்பவர்களுக்கும் இவை மிகவும் ஆபத்தானவையாக முடியலாம்.
கூஸ்பெரிஸ், பீட்ரூட், கீரை வகைகள், பச்சை காய்கறிகள் மற்றும் சிட்ரஸ் பல வகைகள் ஆகியவை அனைத்தையும் ஒன்றாக சேர்த்து ஜூஸாக குடிக்க வேண்டும் என பல்வேறு யூடியுப் மருத்துவர்கள் சமூக வலைதளங்களில் வீடியோக்களை வெளியிட்டு வருகின்றனர் இதனால் கல்லீரலில் ஆரோக்கியம் அதிகரிக்கும் என்பது அவர்கள் கூற்று. ஆனால் உண்மையிலேயே அவ்வாறு செய்யும்போது அவை சிறுநீரகத்தில் நிரந்தர பாதிப்பை ஏற்படுத்தக் கூடும். இவற்றில் இருந்து மீள்வதற்கு நீண்ட காலம் எடுக்கும் இடம் மருத்துவர்கள் எச்சரித்துள்ளனர்.
இவ்வாறு பழங்களையும் பச்சை காய்கறிகளையும் கொண்டு தயாரிக்கப்படும் ஜூஸை உடல் எடை குறைப்பதற்காகவும் ஆரோக்கியமாக இருப்பதற்காகவும் பலரும் என்று குடித்து வருகின்றனர். உண்மையிலேயே பழங்களும் பச்சை காய்கறிகளும் ஆரோக்கியமானவை தான் என்றாலுமே, என்னென்ன விதமான பழங்களையும் பச்சை காய்கறிகளையும் ஒன்று சேர்த்து ஜூஸ் குடிக்கிறோம் என்பது முக்கியமான ஒன்று. முக்கியமாக கல்லீரல் மற்றும் சிறுநீரக பிரச்சனை இருப்பவர்கள் இதில் கவனமாக இருக்க வேண்டும்.
ஏனெனில் இதனால் நமது உடலின் வளர்ச்சியை மாற்றத்தில் பல்வேறு விதமான பாதிப்புகள் உண்டாகக்கூடும் இதன் காரணமாகவே ஜூஸ் தயாரிக்கும் போது என்ன விதமான காய்கறிகளுடன் என்ன விதமான பழங்களை சேர்த்து தயாரிக்கிறோம் என்பதில் அதிக கவனம் செலுத்த வேண்டும். இல்லையெனில் அவை நமது உடலில் ஆக்சலேட் அதிகம் உருவாக காரணமாகிவிடும் என்று மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர்.
இவ்வாறு ஆக்ஸிலேட் அதிகரிப்பதால் சிறுநீரகம் உடனடியாகவோ அல்லது நீண்டகால அடிப்படையிலோ பாதிப்படையலாம். மேலும் சிறுநீரகத்தில் கால்சியம், ஆக்சலேட் கிறிஸ்டல்கள் உருவாவதற்கான வாய்ப்புகளும் உண்டு என எச்சரிக்கின்றனர். பச்சை காய்கறிகள், சாக்லேட், டீ, நட்ஸ் வகைகள், கோதுமை ஆகியவை ஆக்சலேட் அதிகரிக்க காரணமாக இருக்கின்றன. இதைத் தவிர வைட்டமின் சி மற்றும் அமினோ அமிலங்கள் அதிகம் நிறைந்த உணவு பொருட்கள் சிறுநீரகத்தில் ஆக்சிலேட்டுகள் அதிகரிக்கின்றன. இதனுடன் பழங்களையும் பச்சை காய்கறிகளையும் கலந்த பழச்சாறை அருந்தும் போது அவை இன்னும் அதிக பாதிப்பை உண்டாக்குகின்றன.
இதைத்தவிர இவ்வாறு டிடாக்ஸ் ஜூஸை குடிக்கும்போது அவை செரிமான மண்டலத்திலும் பிரச்சினையை உண்டாக்கி வயிற்றுப்போக்கு, வயிற்று வீக்கம், அசிடிட்டி போன்ற பல்வேறு பிரச்சனைகளை உண்டாக்கலாம் என்று எச்சரித்துள்ளனர். எனவே நீங்கள் கல்லீரலை பாதுகாக்க செய்யும் இந்த செயல்முறை, உண்மையிலேயே உங்களது கல்லீரலுக்கும் சிறுநீரகத்துக்கும் எமனாக வந்த முடியலாம் என்பதே மருத்துவர்களின் எச்சரிக்கையாகும்.