பிரெட் உலகம் முழுவதும் காலை உணவுக்காகவும், சாட் உணவாகவும் பயன்படுத்தப்பட்டு வருகிறது. அதனாலேயே அதுவும் இன்று அத்தியாவசிய உணவுப் பொருட்களில் ஒன்றாக மாறிவிட்டது. இந்த பிரெட்டுகள் மைதா அல்லது கோதுமை மாவிலிருந்து தயாரிக்கப்படுகிறது. அதன் சுவை மற்றும் உப்பி வரும் தன்மைக்காக ஈஸ்ட் மற்றும் நல்ல பாக்டீரியாக்கள் பயன்படுத்தப்படுகின்றன. அதேசமயம் இவை இரண்டும்தான் பிரெட்டை கெட்ட உணவாகவும் மாற்றுகிறது. அதாவது இந்த ஈஸ்டுகள் நீண்ட நாட்களுக்குத் தாங்காது.
எனவே பிரெட்டை உடனே கெட்டுப்போக வைத்துவிடும். இதனால்தான் பிரெட்டின் மேலே பச்சை, சாம்பல் , மஞ்சள் அல்லது கருப்பு ஆகிய நிறங்களில் பூஞ்சைகள் போன்று உருவாகின்றன. ஆனால் சிலர் ஒன்றிரண்டு பிரெட் துண்டுகளில் மட்டும் அப்படி இருந்தால் அவற்றை நீக்கிவிட்டு மற்ற பிரெட்டுகளை பயன்படுத்துவார்கள் அல்லது நிறம் மாறிய இடத்தை மட்டும் நீக்கிவிட்டு மீதி பிரெட்டை சாப்பிடுவார்கள். ஆனால் அப்படி சாப்பிடுவதால் என்னென்ன உபாதைகள் வரும் தெரியுமா..?
வாந்தி மற்றும் குமட்டல் : கெட்டுப்போன பிரெட் என்றாலே முற்றிலும் பாக்டீரியாக்கள் படிந்துவிட்டன என்று அர்த்தம். எனவே ஒரு பிரெட் கெட்டுப்போனாலும் அவற்றை தூக்கி எறிவது நல்லது. தெரியாமல் அவற்றை சாப்பிட்டுவிட்டாலும் இதற்காக மருத்துவமனை செல்ல வேண்டியதில்லை. உங்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தி பலமாக இருந்தால் அது செரிமாணமடைந்து வெளியேறிவிடும் இல்லையெனில் வாந்தி, குமட்டல் போன்ற அறிகுறிகளை காட்டும். வாந்தி வழியேவும் வெளியேறிவிடும்.
மைக்கோடாக்ஸின் : இந்த வகை பக்கவிளைவுகள் உண்டாவது மிகவும் அரிதானதுதான். இருந்தாலும் விழிப்புணர்வுடன் இருப்பது நல்லது. மைகோடாக்ஸின் என்பது நோய்களை உருவாக்கும் பாக்டீரியாக்களின் தலைவன் என்று கூறுவார்கள். எனவே இது பிரெட்டில் இருப்பின் புற்றுநோயை உண்டாக்கலாம். ஏன் இறப்பை கூட சந்திக்கலாம். எனவே ரிஸ்க் எடுக்காமல் தூக்கி எறிவது நல்லது.