வேர்க்கடலையை சாப்பிட்டால் உடல் எடை கூடும் என்று பலர் நம்புகிறார்கள். இதில் எண்ணெய் சத்து அதிகம் இருப்பதால், அதிகம் உட்கொள்வது நமது எடையை அதிகரிக்கிறது என்று கூறுகிறார்கள்.
இருப்பினும், இந்த கூற்றுடன் தொடர்புடைய அறிவியல் உண்மைகள் வேறுவிதமாக உள்ளன. உண்மையில் வேர்க்கடலை சாப்பிடுவதால் உடல் எடை கூடுமா என்பதை பற்றிய உண்மை தகவலை இந்த பதிவில் பார்க்கலாம்.
வேர்க்கடலையின் ஊட்டச்சத்துகள் : 100 கிராம் வேர்க்கடலையில் 567 கலோரிகள், 25 கிராம் புரதம், 16 கிராம் கார்போஹைட்ரேட் மற்றும் 50 கிராம் கொழுப்பு உள்ளது. இது தவிர வேர்க்கடலையில் நார்ச்சத்து, ஒமேகா 6 கொழுப்பு அமிலமும் நிறைந்துள்ளது. வேர்க்கடலையில் கொழுப்பு நிறைந்துள்ளது, ஆனால் இந்த உணவுப் பொருளை நம் உணவில் இருந்து நிராகரிக்க இது காரணமாக இருக்க வேண்டியதில்லை.
வேர்க்கடலையில் புரதம் : மேலே உள்ள தரவுகளிலிருந்து பார்க்கையில், வேர்க்கடலையில் அதிக அளவு புரதம் உள்ளது. இது எடையை குறைக்க சிறந்த காரணியாக அமைகிறது. வேர்க்கடலையில் உள்ள புரதம் மொத்த கலோரிகளில் கிட்டத்தட்ட 25% ஆகும். இது தாவர அடிப்படையிலான புரதத்தின் நல்ல ஆதாரமாக அமைகிறது. எனவே இது உங்களுக்கு பெரிதும் உதவுகிறது.
நிறைவான உணவு : வேர்க்கடலையில் உள்ள அதிக புரதம் மற்றும் நார்ச்சத்து நம்மை நீண்ட காலத்திற்கு நிறைவாக வைத்திருக்கும். இதன் விளைவாக, நாம் நமது உணவில் குறைவான பகுதிகளை உட்கொள்கிறோம். எனவே இவை ஒரு நபரின் எடையை திறம்பட நிர்வகிக்கின்றன. வேர்க்கடலையை உட்கொள்பவர்கள், அவற்றை சாப்பிடாதவர்களைக் காட்டிலும் காலப்போக்கில் குறைவான எடை அதிகரிப்பதாக ஆய்வுகள் கண்டறிந்துள்ளன. ஊட்டச்சத்து நிபுணர்கள் பதப்படுத்தப்பட்ட தின்பண்டங்களுக்கு மாற்றாக வேர்க்கடலையை சாப்பிடுவதற்கு பரிந்துரைக்க இதுவும் முக்கிய காரணமாகும்.
ஆரோக்கியம் நிறைந்தது : கவர்ச்சியான நட்ஸ் வகைகளில் பெயர்களால் நாம் அடிக்கடி ஈர்க்கப்படுகிறோம். இது போன்ற நட்ஸ் வகைகள் அதிக விலை கொண்டவையாக இருக்கும். ஆனால், இந்தியாவில் வேர்க்கடலை அதிகமாகக் விளைவிக்கப்படுகிறது. வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் நட்ஸ் வகைகளை போலவே இதுவும் சத்து நிறைந்தது. வேர்க்கடலையில் உள்ள ஊட்டச் சத்துக்களை பொறுத்து அதை உட்கொள்ள வேண்டும். வெல்லத்தால் செய்யப்பட்ட இனிப்பு வேர்க்கடலை பலருக்கும் பிடித்தமான ஒன்றாக உள்ளது. இதை குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை விரும்பி சாப்பிடுவார்கள்.
அளவு : வேர்க்கடலை ஒவ்வாமை சிலருக்கு உள்ளது. இது கடுமையான ஒவ்வாமைகளில் ஒன்றாக கருதப்படுகிறது. வேர்க்கடலையில் அராச்சின் மற்றும் கோனாராச்சின் ஆகிய இரண்டு புரதங்கள் உள்ளன, இவை உட்கொள்ளும் போது மக்களின் உயிருக்கு ஆபத்தான ஒவ்வாமையை கூட ஏற்படுத்தும். இருப்பினும், வேர்க்கடலை அருகில் இருந்தாலும் ஒவ்வாமையை ஏற்படுத்தும் என்று ஒரு கட்டுக்கதை உள்ளது. இது உண்மை இல்லை. வேர்க்கடலை சாப்பிடும்போது மட்டுமே ஒவ்வாமையை ஏற்படும். எனவே, ஒவ்வாமை உள்ளவர்கள் இதை தவிர்க்கலாம். மேலும், இதை உங்களின் உணவில் சேர்த்து கொள்ள விரும்பினால் உங்கள் மருத்துவரின் ஆலோசனையை பெறுவது மிக அவசியம்.