பழங்களின் சாலட் : fruit salad என்று சொல்லக் கூடிய பழக் கலவைகளை சாப்பிட்ட உடனேயே தண்ணீர் குடிப்பது உங்களுக்கு வயிறு தொடர்பான பிரச்சனைகளை உண்டாக்கலாம். குறிப்பாக அஜீரணத்தை உண்டாக்கும். அதிலும் சிட்ரஸ் பழங்களை சாப்பிட்டால் தண்ணீரை உடனே குடிக்கவே கூடாது. அவ்வாறு குடிப்பதால் தொண்டை கரகரப்பு, தொண்டை வலியை உண்டாக்கும். எனவே உடனே தண்ணீர் குடிக்காமல் அரை மணி நேரம் கழித்து குடிப்பது நல்லது.
ஐஸ்கிரீம் : ஐஸ்கிரீம் சாப்பிட்ட உடனேயே தெகிட்டும் இனிப்பு சுவை காரணமாக சிலர் உடனே தண்ணீர் அருந்துவார்கள். அது மிக மிகத் தவறான செயலாகும். நீங்கள் ஐஸ்கிரீம் சாப்பிட்ட உடனே தண்ணீர் குடித்தால் மறுநாள் தொண்டை வலி, தொண்டை கரகரப்பு, சளி போன்ற உபாதைகளை அனுபவிக்கக் கூடும். எனவே ஐஸ்கிரீன் சாப்பிட்டு 15 நிமிடங்கள் அல்லது 30 நிமிடங்கள் கழித்து தண்ணீர் குடிக்கலாம்.
இனிப்பு அல்லது டெசர்ட் வகைகள் : இனிப்பு வகைகள், டெசர்ட் வகைகள் மற்றும் சுத்தீகரிக்கப்பட்ட சர்க்கரை கலந்த உணவு வகைகளான டோனட், கேக் போன்ற பேக்கரி உணவுகளை சாப்பிட்ட உடனேயே தண்ணீர் அருந்துவதை தவிர்க்க வேண்டும். அவ்வாறு குடித்தால் தண்ணீர் சர்க்கரையை உடனே உறிஞ்சிவிடும். இதனால் உடலில் சர்க்கரை அளவு அதிகரிக்கக் கூடும். இதுகுறித்து அமெரிக்காவிலும் ஆய்வு செய்யப்பட்டுள்ளது. அதில் அவ்வாறு தண்ணீர் குடிப்பதால் டைப் 2 நீரிழிவு நோய் வரும் என்று உறுதி செய்யப்பட்டுள்ளது. எனவே இனிப்பு வகைகளை சாப்பிட்டால் உடனே தண்ணீர் குடிக்காதீர்கள்.
உணவு : ஆம்... உணவு சாப்பிடும்போது இடையே தண்ணீர் குடிக்கக் கூடாது என்று சொல்வதற்கு காரணம் இதுதான். உணவு சாப்பிட்ட உடனேயே தண்ணீர் குடிப்பது அல்லது உணவு சாப்பிடும்போதே இடையில் தண்ணீர் குடிப்பது செரிமானத்தை தாமதப்படுத்தும். இதனால் வயிற்று மந்தம், நெஞ்சு எரிச்சல், வாயுப் பிரச்சனை போன்றவற்றை அனுபவிப்பீர்கள். எனவே சாப்பிடுவதற்கு முன் அல்லது சாப்பிட்டு 15 நிமிடங்கள் கழித்து தண்ணீர் குடிக்கலாம். ஒருவேளை உணவு நெஞ்சை அடைப்பதுபோல் இருந்தால் கொஞ்சமாக குடித்துக்கொள்ளலாம்.