இந்த கண்டுபிடிப்புகள் லெபாரட்டரி இன்வஸ்டிகேஷன் என்ற பத்திரிக்கையில் வெளியானது. குடலின் சுவரில் உள்ள குறிப்பிட்ட சில செல்கள் நன்மை நிறைந்த தண்ணீர் மற்றும் ஊட்டச்சத்துக்கள் உடலில் நுழைவதற்கு உதவியாக அமைகிறது. அதே நேரத்தில், கெட்ட உணவுப் பொருட்கள் மற்றும் பாக்டீரியா உடலில் நுழையாமல் பாதுகாக்கிறது.
இந்த ஆய்வில் பயன்படுத்தப்பட்ட எலிகளுக்கு 15 சதவீதம் ப்ரோக்கோலி உடனான உணவு வழங்கப்பட்டது. இது மனிதர்கள் சாப்பிடும் 3.5 கிண்ணத்திற்கு சமம். மேலும் வேறொரு ஒரு எலிகள் குழுவிற்கு பிராக்கோலி அல்லாத உணவு வழங்கப்பட்டது. பின்னர் ஏஎச்ஆர் ஆக்டிவேஷன் எந்த அளவிற்கு நடைப்பெற்றுள்ளது என்பதை அறிய எலிகளின் திசுக்களை ஆய்வு செய்வதனர். ப்ரோக்கோலி வழங்கப்படாத எலிகள் ஏஎச்ஆர் செயல்பாடு இல்லாதது இதன் மூலம் கண்டுபிடிக்கப்பட்டது.
பிராக்கோலி வைத்து செய்யக்கூடிய ஏராளமான ரெசிபிகள் உள்ளன. ஆகவே, உங்கள் அன்றாட உணவில் பிராக்கோலி சேர்ப்பதன் மூலமாக செரிமான பிரச்சினைகளில் இருந்து நீங்கள் விலகி இருக்கலாம். நீங்கள் ஏற்கனவே மலச்சிக்கல், நெஞ்செரிச்சல் போன்ற செரிமான கோளாறுகளால் அவதிப்பட்டு வருகிறீர்கள் என்றால், பிராக்கோலியை உங்கள் உணவில் அடிக்கடி சேர்த்து சாப்பிடுவது நல்ல பலன் தரும்.