ஹோம் » போடோகல்லெரி » லைஃப்ஸ்டைல் » வெங்காயம் நறுக்குவதில் இத்தனை வகைகள் இருக்கா..? ஒவ்வொரு டிஷுக்கும் ஏற்ப நறுக்க டிப்ஸ்..!

வெங்காயம் நறுக்குவதில் இத்தனை வகைகள் இருக்கா..? ஒவ்வொரு டிஷுக்கும் ஏற்ப நறுக்க டிப்ஸ்..!

வெங்காயத்தை சம பங்குகளாக நறுக்குதல் என்பது அனைத்து வகையான குழம்புகள் மற்றும் சப்ஜிகளுக்கு நாம் பயன்படுத்தலாம். இவ்வாறு வெங்காயத்தை நறுக்கி பருப்பு, காய்கறிகள் போன்ற உணவுகளில் சேர்க்கும் போது சுவையை அதிகரிப்பதோடு சீக்கிரம் வெந்துவிடுகிறது.

 • 16

  வெங்காயம் நறுக்குவதில் இத்தனை வகைகள் இருக்கா..? ஒவ்வொரு டிஷுக்கும் ஏற்ப நறுக்க டிப்ஸ்..!

  நம்முடைய சமையலில் மற்ற காய்கறிகளை விட அதிக ஆதிக்கம் செலுத்தக்கூடிய உணவுப்பொருள்களில் ஒன்றாக உள்ளது வெங்காயம். காலை, மதியம் மற்றும் இரவு நேர உணவு என அனைத்திலும் வெங்காயம் இல்லாமல் எந்தவொரு குழம்புகள் மற்றும் கலவை சாதங்களை செய்ய முடியாது. இதோடு வெங்காயம் இல்லையென்றால் என்ன சமைத்தாலும் சுவையும் இருக்காது. இதனால் தான் நம்முடைய அம்மாக்கள், என்ன சமையல் செய்தாலும் கொஞ்சம் வெங்காயம் கிள்ளிப்போடுங்கள் என்பார்கள். ஆனால்தற்போது ஒவ்வொரு டிஸ்களுக்கும், ஒவ்வொரு விதமாக நாம் வெட்டுகிறோம் என்பது யாருக்கும் தெரியுமா? நாம் நமக்கு தெரிந்தோ? தெரியாமலோ? ஒவ்வொரு வகையான குழம்புகள் மற்றும் சாலட்டுகளுக்கு சுவையை அதிகரிக்க வெங்காயத்தை வெட்டுகிறோம். இதோ என்னென்ன வழிமுறைகள்? என்பது குறித்து இங்கே அறிந்துக் கொள்வோம்.

  MORE
  GALLERIES

 • 26

  வெங்காயம் நறுக்குவதில் இத்தனை வகைகள் இருக்கா..? ஒவ்வொரு டிஷுக்கும் ஏற்ப நறுக்க டிப்ஸ்..!

  வெங்காயத்தை வெட்டும் வழிமுறைகள்: துண்டு துண்டாக வெட்டுதல் : கூர்மையான கத்தியைப் பயன்படுத்தி வெங்காயத்தை சிறிய சிறிய துண்டுகளாக வெட்டப்படும் போது சூப்கள், மாரினேட்ஸ், மஞ்சூரியன், ரைதா போன்ற உணவுப்பொருள்களை சமைக்க நாம் பயன்படுத்தலாம்.

  MORE
  GALLERIES

 • 36

  வெங்காயம் நறுக்குவதில் இத்தனை வகைகள் இருக்கா..? ஒவ்வொரு டிஷுக்கும் ஏற்ப நறுக்க டிப்ஸ்..!

  நறுக்கிய வெங்காயம் : வெங்காயத்தை சம பங்குகளாக நறுக்குதல் என்பது அனைத்து வகையான குழம்புகள் மற்றும் சப்ஜிகளுக்கு நாம் பயன்படுத்தலாம். இவ்வாறு வெங்காயத்தை நறுக்கி பருப்பு, காய்கறிகள் போன்ற உணவுகளில் சேர்க்கும் போது சுவையை அதிகரிப்பதோடு சீக்கிரம் வெந்துவிடுகிறது. இதனால் அதிக நேரம் காத்திருக்கத் தேவையில்லை. இதோடு பருப்பு மற்றும் காய்கறிகளுக்கு நறுக்கும் வெங்காயத்தைப் போன்று கொஞ்சம் சிறிய துண்டுகளாக வெட்டும் போது அதை, பராத்தரா ஸ்டஃபிங், தோசை ஸ்டஃபிங், கட்லெட், ஆம்லெட் போன்றவற்றிற்கு நாம் உபயோகித்துக் கொள்ள முடியும்.

  MORE
  GALLERIES

 • 46

  வெங்காயம் நறுக்குவதில் இத்தனை வகைகள் இருக்கா..? ஒவ்வொரு டிஷுக்கும் ஏற்ப நறுக்க டிப்ஸ்..!

  அடுத்ததாக வெங்காயத்தை உரித்து, மெல்லிய மற்றும் ஒரளவிற்கு தடினமாகவும் வெட்டலாம். இவ்வாறு வெட்டப்படும் வெங்காயங்கள் பெரும்பாலும் பர்கர்கள் மற்றும் சான்ட்விச்சகளில் பயன்படுத்தப்படகிறது.

  MORE
  GALLERIES

 • 56

  வெங்காயம் நறுக்குவதில் இத்தனை வகைகள் இருக்கா..? ஒவ்வொரு டிஷுக்கும் ஏற்ப நறுக்க டிப்ஸ்..!

  சாலட்டிற்கான வெங்காயம் : வெங்காயத்தைத் தோலுரித்து பாதியாக சிறு சிறு கீற்றுகளாக வெட்டலாம். இவை பிரியாணி, வெஜ் ரோல்கள் மற்றும் பக்கோடா செய்யப் பயன்படுகிறது.

  MORE
  GALLERIES

 • 66

  வெங்காயம் நறுக்குவதில் இத்தனை வகைகள் இருக்கா..? ஒவ்வொரு டிஷுக்கும் ஏற்ப நறுக்க டிப்ஸ்..!

  இவ்வாறு ஒவ்வொரு உணவுகள் செய்யும் போது நம் விதவிதமாக வெங்காயம் வெட்டலாம். அதே சமயம் குழம்புகள், பிரியாணி போன்றவற்றிற்கு நாம் வெங்காயம் சேர்க்கும் போது, அதை பொன்னிறமாக வரும் வரை வதக்க வேண்டும். இவ்வாறு நாம் மேற்கொள்ளும் போது தான் நாம் என்ன செய்தாலும் உணவில் கூடுதல் சுவையை நமக்குத் தரும் என்பதை நினைவில் வைத்துக்கொள்ளவும்.

  MORE
  GALLERIES