உலகெங்கிலும் உள்ள மக்கள் நல்ல ஆரோக்கியத்தின் முக்கியத்துவத்தை புரிந்து கொண்டவர்களாக உள்ளனர். உடற்பயிற்சி செய்வதும் சுறுசுறுப்பாக இருப்பதும் ஆரோக்கியமாக இருப்பதற்கு பரிந்துரைக்கப்படும் பரிந்துரைகளில் ஒன்றாக இருந்தாலும், நமது வாழ்க்கையில் பயன்படுத்தும் சில தேநீர் பானங்களும் நமக்கு ஆரோக்கியத்தை அளிக்கின்றன.
மஞ்சள் தேநீர் : நமது பாரம்பரியத்தில் மஞ்சளுக்கு தனி இடம் உண்டு. அதை வைத்து தயாரிக்கப்படும் தேநீரில், உடலுக்கு போதுமான ஆரோக்கியம் கிடைக்கிறது. மஞ்சள், அழற்சி எதிர்ப்பு பண்புகளைக் கொண்ட ஒரு குணப்படுத்தும் சூப்பர்ஃபுட் என்று அறியப்படுகிறது. காஃபின் இல்லாத பானமாக இந்த தேநீர் உள்ளது. மஞ்சள் பல நோய்கள் மற்றும் தொற்றுகளிலிருந்து நம்மை பாதுகாப்பது மட்டுமல்லாமல், அழகான சருமத்தை வழங்குகிறது. மஞ்சள் தூக்கத்தின் தரத்தை மேம்படுத்துவதோடு, நம் கல்லீரல் மற்றும் இதய ஆரோக்கியத்திற்கு பெரிதும் உதவுகிறது.
கெமோமில் டீ : நீங்கள் மதியம் அல்லது உறங்குவதற்கு சில மணி நேரங்களுக்கு முன் ஒரு கப் கெமோமில் தேநீரை அருந்தினால், அது சிறந்த தூக்கத்தை தரும் எனவும், மன அழுத்தம் மற்றும் பதட்டத்தை குறைத்து, மாதவிடாய் வலி, ஆஸ்டியோபோரோசிஸ் மற்றும் சளி அறிகுறிகளில் இருந்து பாதுகாக்கவும் உதவுவதாக கூறுகிறார், VAHDAM இந்தியாவின் நிறுவனர் மற்றும் CEO பாலா சர்தா. எனவே கெமோமில் தேநீர் உங்களை அமைதியாகவும் நிதானமாகவும் வைத்திருக்கவும், சரியான உணர்வை உங்களுக்குத் தருவதாக அறியப்படுகிறது.
செம்பருத்தி டீ : செம்பருத்தி டீ, இதயம் சுருங்கி விரிவதற்கு போதிய வலிமையைத் தருகிறது. இதனால் இரத்த அழுத்தம் கட்டுப்படுகிறது. மேலும் உயர் இரத்த அழுத்தத்தையும் மிதமான அளவிற்கு குறைக்க உதவுகிறது. சூடான செம்பருத்தி டீ, ஒரு கப் காலை உணவு உண்பதற்கு முன் வெறும் வயிற்றில் குடிப்பதால் நல்ல பலனைக் காணலாம். மேலும் காஃபின் இல்லாத செம்பருத்தி மூலிகை தேநீர் சில புற்றுநோய்களை எதிர்த்து போராட உதவுகிறது மற்றும் கல்லீரல் ஆரோக்கியத்தை அதிகரிக்கிறது மற்றும் உடல் எடையை குறைக்க உதவியாக இருக்கும்.
ஓலாங் டீ : பொதுவாக சீன உணவகத்தில் வழங்கப்படும் சீன தேநீர் இவ்வாறு அங்கீகரிக்கப்படுகிறது. பச்சை அல்லது கருப்பு தேயிலை வகைகளை விட ஓலாங் டீயில் உள்ள ஊட்டச்சத்துக்கள் வலுவான ஆக்ஸிஜனேற்ற மற்றும் ஆன்டிமுடேஜெனிக் விளைவுகளைக் கொண்டிருப்பதாக ஆய்வுகள் மூலம் நிரூபிக்கப்பட்டுள்ளது. ஊலாங் டீயில் பாலிஃபீனால்கள் உள்ளன. அற்புதமான ஆரோக்கிய நன்மைகளை வழங்குகிறது. கொலஸ்ட்ரால் அளவைக் குறைக்கவும், ஆரோக்கியமான இதய செயல்பாட்டிற்கு உதவும்.
இஞ்சி டீ : நாம் நோய்வாய்படும் போது அனைவரின் நினைவுக்கும் வரும் ஒரு தேநீர் இஞ்சி தேநீர். இது செரிமான பிரச்சனைகளைத் தடுக்கவும், குமட்டலுக்கு ஒரு சிறந்த தீர்வாகும். இது நீரிழிவு நோய்க்கு மருந்தாகவும் பயன்படுகிறது. நீங்கள் ஒரு கப் இஞ்சியை அப்படியே நீரில் காய்ச்சியோ, பிளாக் டீயாகவோ குடிக்கலாம். நெல்லிக்காய், எலுமிச்சை, கருப்பு மிளகு, தேன் மற்றும் மஞ்சள் போன்ற மூலிகைகள் மற்றும் மசாலாப் பொருட்கள் இஞ்சியுடன் கலக்கும்போது அதன் ஆக்ஸிஜனேற்ற பண்புகளை மேம்படுத்துகிறது.