உடல் எடையில் ஒரு கிலோவிற்கு 0.8 கிராம் புரதம் தேவை என நிபுணர்கள் தெரிவிக்கின்றனர். RDA என்பது உங்களின் அடிப்படை ஊட்டச்சத்து தேவைகளை பூர்த்தி செய்ய தேவையான ஊட்டச்சத்துக்களில் ஒன்றாக புரதம் உள்ளது. அசைவம் மற்றும் தாவரங்களில் இருந்து இரண்டு வகையான புரதங்கள் கிடைக்கின்றன. இவை இரண்டிற்கும் இடையிலான வித்தியாசம் என்ன, என்ன மாதிரியான பலன்கள் கிடைக்கும் என என்றாவது யோசித்து பார்த்திருக்கிறீர்களா?. விலங்குகள் மற்றும் தாவரங்களில் இருந்து கிடைக்கும் புரதத்திற்கு இடைப்பட்ட வித்தியாசங்கள் பற்றி முழுமையாக பார்க்கலாம்...
1. விலங்கு மற்றும் தாவர புரதங்களுக்கு இடையிலான வேறுபாடு : புரதம் என்றாலே பெரும்பாலானோருக்கு நினைவுக்கு வருவது விலங்கு இறைச்சி தான். மேலும் புரதம் நிறைந்த பல காய்கறி உணவுகள் உள்ளன என்ற உண்மையை பலரும் அறிவது கிடையாது. இரண்டிற்கும் இடையிலான முக்கிய வேறுபாடு என்னவென்றால், தாவர புரதம், விலங்கு புரதத்தை விட குறைவான அமினோ அமிலங்களைக் கொண்டுள்ளது. அதனால் தான் விலங்குகளிடம் இருந்து கிடைக்கும் புரதம் முழுமையானதாக கருதப்படுகிறது.
2. விலங்கு புரதம் என்றால் என்ன? : விலங்குகளிடம் இருந்து நமக்கு கிடைக்கும் புரதமானது, உடலில் உள்ள புரதத்தை ஒத்திருக்கும். மேலும் தாவரங்களில் உள்ள புரதத்தை விட விங்குகளிடம் இருந்து கிடைக்கும் புரதத்தை நமது உடலால் எளிதில் உறிஞ்சிக்கொள்ள முடியும். விலங்குகளிடம் இருந்து கிடைக்கும் புரதத்தில் காணப்படும் 9 அத்தியாவசிய அமினோ அமிலங்கள், அதனை ஒரு 'முழுமையான' புரதமாக உருவாக்குகிறது மற்றும் தசைகள் மற்றும் எலும்புகளை உருவாக்க உடலுக்கு உதவுகிறது. இது பெரும்பாலும் இறைச்சி, முட்டை மற்றும் பால் பொருட்களில் காணப்படுகிறது. இதற்கு உங்கள் உணவில் காய்கறிகளின் அளவை குறைக்க வேண்டும் என அர்த்தம் கிடையாது.
3. தாவர புரதம் என்றால் என்ன? : காய்கறிகளில் வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள் நிறைந்துள்ளன. மேலும், இறைச்சி அல்லது முட்டையை விட குறைவான கலோரிகள் உள்ளன. இருப்பினும், தாவரங்களில் இருந்து இறைச்சியை விட அதிக புரதம் கிடைப்பது இல்லை. தாவரங்களில் இருந்து கிடைக்கும் புரதத்தில் குறைவான அளவிலான அமினோ அமிலங்களே உள்ளன. எனவே சைவ உணவு உண்பவர்கள் தங்களுக்கு தேவையான அனைத்து அமினோ அமிலங்களையும் பொறுகிறார்களா? என்ற கேள்வி எழுகிறது. சைவ உணவில் கொட்டைகள், பருப்பு வகைகள், சோயா சார்ந்த பொருட்கள் மற்றும் தானியங்கள் அத்துடன் பழங்கள் மற்றும் காய்கறிகள் உட்பட பல்வேறு தாவர புரதங்கள் உள்ளன என்பதை உறுதி செய்ய வேண்டும்.
4. எது ஆரோக்கியமானது? : விலங்கு மற்றும் தாவரத்தில் இருந்து கிடைக்கும் புரதங்களில் எது சிறந்தது என்ற விவாதம் நீண்ட காலமாகவே நடைபெற்று வருகிறது. பல ஆராய்ச்சி முடிவுகளின் படி விலங்கு புரதம் உடலுக்கு தேவையான அனைத்து ஆதாரங்களையும் வழங்குகிறது நிரூபணமாகியுள்ளது. அதே சமயத்தில் விலங்கு புரதத்தால் உடலுக்கு சில எதிர்மறையான விஷயங்களும் ஏற்பட வாய்ப்புள்ளது கண்டறியப்பட்டுள்ளது. மறுபுறம், தாவர அடிப்படையிலான புரதம் ஆரோக்கியமான அளவு ஊட்டச்சத்துக்களை வழங்குகிறது. உண்மையில், சைவ உணவு உண்பவர்களின் ஒட்டுமொத்த ஆரோக்கியம் அசைவ உணவு உண்பவர்களை விட சிறப்பாக இருப்பதாக பல ஆய்வுகள் மூலம் தெரியவந்துள்ளது.