சப்பாத்தியில் உள்ள ஊட்டச்சத்துக்கள் : சப்பாத்தியில் வைட்டமின்கள் பி1, பி2, பி3, பி6 மற்றும் பி9, இரும்பு, கால்சியம், பாஸ்பரஸ், மெக்னீசியம் மற்றும் பொட்டாசியம் உள்ளிட்ட தாதுக்களால் நிரம்பியுள்ளது. மேலும், கார்போ ஹைட்ரேட்டுகள், நார்ச்சத்துகள் அதிகளவில் நிரம்பியுள்ளதால் உடல் எடையை நிர்வகிக்க பேருதவியாக உள்ளது.
உடல் எடைக்குறைப்பில் சப்பாத்தி எப்படி உதவும்? சப்பாத்தியில் அதிகளவு கார்போஹைட்ரேட் உள்ளதால், உடலுக்குத் தேவையான ஆற்றலை வழங்குவதோடு நீண்ட நேரம் வயிறு நிரம்பியிருப்பது போன்ற உணர்வை நமக்கு ஏற்படுத்துகிறது. நமது உடலுக்குத் தேவையான ஆற்றலை வழங்குவதோடு, மனநிலையையும் மேம்படுத்தவும் உதவியாக உள்ளது. பொதுவாக சப்பாத்திக்கு அதிகளவில் நாம் எண்ணெய் பயன்படுத்துவதில்லை. இதனால் தேவையில்லாத கலோரிகள் உடலில் சேர்வதற்கு வாய்ப்பில்லை.
அதிகளவு நார் சத்துக்கள் சப்பாத்தியில் இருப்பதால், மலச்சிக்கலை தடுக்கிறது. செரிமான அமைப்பு சீராக இயங்க உதவியாக உள்ளது. இதோடு ரத்தத்தில் உள்ள கெட்ட கொலஸ்ட்ராலின் அளவையும் குறைக்க உதவியாக உள்ளது. மேலும் நீங்கள் உங்களது டயட்டில் சப்பாத்தியை அதிகளவில் சேர்க்கும்போது, சருமம் எப்போதும் பளபளப்பாக இருக்கவும் உதவுகிறது.
உடல் எடை குறைப்பின் போது சப்பாத்தியை எவ்வளவு சாப்பிட வேண்டும்? ஊட்டச்சத்து நிபுணர்களின் கூற்றுப்படி, சப்பாத்தியில் கார்போ ஹைட்ரேட்டுகள், நார்ச் சத்துகள் நிறைந்திருந்தாலும் இதை அதிகளவில் சாப்பிடக்கூடாது என்கின்றனர். ஆம் 50 கிராம் எடைக் கொண்ட ஒரு சப்பாத்தியில் 120 கிராம் கலோரிகள் உள்ளது என்றும், ஒரு நாளைக்கு நீங்கள் 5-க்கும் மேற்பட்ட சப்பாத்திகளை சாப்பிடும் போது, சுமார் 720 கலோரி உடலில் சேர்கின்றது.
எனவே எப்போதும் சப்பாத்தியை தனியாக சாப்பிடாதீர்கள். சாலட், உருளைக்கிழங்கு, காய்கறிகள், பருப்பு வகைகள் போன்றவற்றுடன் சேர்த்து சாப்பிடுங்கள். இதன் மூலம் உங்களது உடல் எடையை சீராக வைத்திருக்க முடியும் என்கின்றனர். மேலும் இதற்காக நீங்கள் உடல் எடையைக் குறைப்பிற்கு சாப்பிடக்கூடிய சப்பாத்தி உள்ளிட்ட உணவு பொருள்களை முழுமையாக நிறுத்த வேண்டியது இல்லை எனவும், புத்திசாலித்தனமாகவும், புரிதலுடன் நீங்கள் சாப்பிட வேண்டும் என்பதை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள் என்கின்றனர் நிபுணர்கள்.