முகப்பு » புகைப்பட செய்தி » லைஃப்ஸ்டைல் » வயதாக வயதாக செரிமானம் குறைகிறதா..? உங்கள் உணவுப்பழக்கத்தை இப்படி மாத்துங்க...

வயதாக வயதாக செரிமானம் குறைகிறதா..? உங்கள் உணவுப்பழக்கத்தை இப்படி மாத்துங்க...

இன்றைக்கு 50 வயதைக் கடந்தாலே எண்ணற்ற உடல் நலப்பிரச்சனைகளை நாம் சந்திக்க நேரிடுகிறது. மாறிவரும் கலாச்சாரம் மற்றும் உணவு முறைகள் தான் இதுப்போன்ற நிலைக்கு காரணம் என்கின்றனர் ஊட்டச்சத்து நிபுணர்கள்.

  • 18

    வயதாக வயதாக செரிமானம் குறைகிறதா..? உங்கள் உணவுப்பழக்கத்தை இப்படி மாத்துங்க...

    மீன், முட்டை, நார்ச்சத்துள்ள உணவுகள், தயிர் போன்ற எளிதில் ஜீரணிக்கக்கூடிய உணவு வகைகளை வயதானவர்களின் டயட் லிஸ்டில் சேர்க்கும் போது நிச்சயம் எவ்வித உடல் நல பிரச்சனைகளும் ஏற்படுவதற்கு வாய்ப்பில்லை.

    MORE
    GALLERIES

  • 28

    வயதாக வயதாக செரிமானம் குறைகிறதா..? உங்கள் உணவுப்பழக்கத்தை இப்படி மாத்துங்க...

    நம்முடைய முன்னோர்கள் 80 வயதிற்கு மேல் நோய் நொடியின்றி உடல் வலுவுடன் இருந்தார்கள். ஆனால் இன்றைக்கு 50 வயதைக் கடந்தாலே எண்ணற்ற உடல் நலப்பிரச்சனைகளை நாம் சந்திக்க நேரிடுகிறது. மாறிவரும் கலாச்சாரம் மற்றும் உணவு முறைகள் தான் இதுப்போன்ற நிலைக்கு காரணம் என்கின்றனர் ஊட்டச்சத்து நிபுணர்கள். குறிப்பாக 60 வயதை எட்டியவுடன் நம்முடைய ஆரோக்கியத்தில் கவனமுடன் இருப்பது அவசியம். அதிலும் உணவு முறைகளை முறையாக பின்பற்றாவிடில் சொல்லவே தேவையில்லை நிச்சயம் பல பிரச்சனைகளை நீங்கள் மட்டுமில்லாது, உங்களால் குடும்ப உறுப்பினர்களும் சந்திக்க நேரிடும்.

    MORE
    GALLERIES

  • 38

    வயதாக வயதாக செரிமானம் குறைகிறதா..? உங்கள் உணவுப்பழக்கத்தை இப்படி மாத்துங்க...

    எனவே உடல் நலத்தை ஆரோக்கியமாக வைத்துக் கொள்வதோடு, எளிதில் ஜீரணிக்கக்கூடிய உணவுகளை உங்களது வீட்டில் உள்ள வயதானவர்களுக்குக் கொடுக்க வேண்டியது அத்தியாவசியமான ஒன்று. இந்நேரத்தில் வயதானவர்களுக்கான எளிதில் ஜீரணிக்கக்கூடிய உணவு வகைகள் என்னென்ன? என்பது குறித்த இங்கே விரிவாகத் தெரிந்துக் கொள்வோம்.

    MORE
    GALLERIES

  • 48

    வயதாக வயதாக செரிமானம் குறைகிறதா..? உங்கள் உணவுப்பழக்கத்தை இப்படி மாத்துங்க...

    தயிர்: சிறு வயதில் எலும்புகள் வலுவுடன் இருந்தாலும், வயதாக வயதாக பலவீனமடைகின்றன. இந்நேரத்தில் கால்சியம் குறைபாட்டை சரிசெய்வது அவசியமான ஒன்று. எனவே தினமும் கால்சியம் நிறைந்த தயிரை வயதானவர்களின் உணவு முறையில் சேர்த்துக் கொள்ள வேண்டும். இது உங்களது எலும்புகளைப் பாதுகாப்பாக வைத்திருக்க உதவியாக இருக்கும். பொதுவாக தயிரில் வைட்டமின் பி 12, கால்சியம், பாஸ்பரஸ், மெக்னீசயம் மற்றும் பல மினரல்கள் உள்ளதால் ஆரோக்கியமாக வைத்திருக்க உதவுகிறது. இதோ எளிதில் ஜீரணிக்கவும் உதவியாக உள்ளது.

    MORE
    GALLERIES

  • 58

    வயதாக வயதாக செரிமானம் குறைகிறதா..? உங்கள் உணவுப்பழக்கத்தை இப்படி மாத்துங்க...

    முட்டை: முட்டையில் வைட்டமின் டி, கோலின், புரதம் உள்பட 13 அத்தியாவசிய ஊட்டச்சத்துகள் உள்ளதால், உடலுக்கு வலுவைச் சேர்க்கிறது. தங்களுடைய உணவு முறையில் முட்டை சேர்த்துக் கொள்ளும் போது கல்லீரல் செயல்பாடு, மூளை வளர்ச்சி, தசை இயக்கம் போன்றவற்றை வலுப்பெற உதவியாக உள்ளது. இதோடு எளிதில் ஜீரணிக்கும் வகையில் உள்ளதால் 65 வயதைக் கடந்தவர்கள் கண்டிப்பாக சாப்பிட வேண்டும். இது உங்கள் உடல் நலத்திற்கு பாதுகாப்பாக அமையும்.

    MORE
    GALLERIES

  • 68

    வயதாக வயதாக செரிமானம் குறைகிறதா..? உங்கள் உணவுப்பழக்கத்தை இப்படி மாத்துங்க...

    மீன் : மீன் ஆரோக்கியம் நிறைந்த உணவு பட்டியலில் இடம் பெற்றுள்ளது. இதில் உள்ள புரோட்டீன், வைட்டமின்கள், கால்சியம், பாஸ்பரஸ், இரும்பு, அயோடின், மெக்னீசியம் போன்ற எண்ணற்ற சத்துக்கள் உள்ளன. சிக்கல், மட்டன் போன்றவற்றை விட கொழுப்பு குறைந்த அளவில் உள்ளதால் கொலஸ்ட்ரால் பிரச்சனையிலிருந்து தப்பிக்கலாம். சிறியவர்கள் முதல் வயதானவர்கள் வரை தங்களுடைய ஹெல்த்தி உணவுப்பட்டியலில் சேர்த்துக்கொள்ளலாம. இரத்தக்குழாய் மற்றும் இதயத்தில் ஏற்படும் பிரச்சனைகளை சரி செய்து இதய ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது.

    MORE
    GALLERIES

  • 78

    வயதாக வயதாக செரிமானம் குறைகிறதா..? உங்கள் உணவுப்பழக்கத்தை இப்படி மாத்துங்க...

    நார்ச்சத்து நிறைந்த உணவுகள்: பொதுவாக வயதானாலே செரிமானப் பிரச்சனைகளை அதிகளவில் சந்திப்பார்கள். இது போன்ற பிரச்சனையிலிருந்து தப்பிக்க பூண்டு, பீன்ஸ், பச்சை இலைக் காய்கறிகள் பழங்கள், ஓட்ஸ், பீன்ஸ், வேர்க்கடலை, அரிசி, பார்லி. சாத்துக்குடி, ஆரஞ்சு, கோதுமை, பருப்பு போன்ற நார்ச்சத்துள்ள உணவு முறைகளை நீங்கள் பின்பற்றலாம். இது போன்ற உணவுகள் குடல் மற்றும் செரிமான அமைப்பை சீராக்கி தேவையற்ற நச்சுக்களை வெளியேற்ற உதவுகிறது.

    MORE
    GALLERIES

  • 88

    வயதாக வயதாக செரிமானம் குறைகிறதா..? உங்கள் உணவுப்பழக்கத்தை இப்படி மாத்துங்க...

    இது போன்ற உணவுமுறைகளை நீங்கள் வயதானவர்களுக்குக் கொடுக்கும் போது உடல் ஆரோக்கியத்துடன் இருப்பதற்கு உதவியாக இருக்கும். இதோடு அவர்களது உணவில் மல்டி வைட்டமின்கள் கண்டிப்பாக தினமும் சேர்க்கப்பட வேண்டும். நுண்ணூட்டச்சத்துக்களின் தேவை அறிந்தும் உணவல் சேர்ப்பதற்கு மறந்துவிடக்கூடாது. இது போன்ற உணவுமுறைகளைக் கடைப்பிடித்தாலே பாதி உடல் பிரச்சனைக்குத் தீர்வு காண முடியும் என்கின்றனர் ஊட்டச்சத்து நிபுணர்கள்.

    MORE
    GALLERIES