முகப்பு » புகைப்பட செய்தி » லைஃப்ஸ்டைல் » வேகமாக பரவி வரும் டெங்கு... தப்பிக்க இந்த 5 வகை ஜூஸ்களை தவறாமல் குடியுங்கள்..!

வேகமாக பரவி வரும் டெங்கு... தப்பிக்க இந்த 5 வகை ஜூஸ்களை தவறாமல் குடியுங்கள்..!

கொய்யா பழத்தில் இயற்கையாகவே வைட்டமின் சி அதிகமாக உள்ளது மேலும் நோய் எதிர்ப்பு சக்தியையும் அதிகரிக்கிறது. கடைகளில் பாக்கெட் செய்து விற்கப்படும் கொய்யா ஜூசை வாங்காமல் நீங்களாகவே கொய்யா பழத்தை வாங்கி வந்து வீட்டிலே ஜூஸ் செய்து குடித்து வர அதன் நற்குணங்கள் அனைத்தும் உங்களுக்கு கிடைக்கும்.

  • 17

    வேகமாக பரவி வரும் டெங்கு... தப்பிக்க இந்த 5 வகை ஜூஸ்களை தவறாமல் குடியுங்கள்..!

    இந்தியாவின் சில மாநிலங்களில் பருவ தொடங்கியுள்ள நிலையில், பல இடங்களில் தேங்கியுள்ள நீரின் மூலம் கொசுக்களின் உற்பத்தியும் அதிகரித்து வருகிறது. இதனால் இந்தியாவில் உள்ள 12க்கும் மேற்பட்ட மாநிலங்களில் டெங்கு காய்ச்சல் வேகமாக பரவி வருகிறது. வழக்கத்தைவிட சிறிது தாமதமாக பருவ மழை துவங்கி உள்ள நிலையில் டெங்கு கொசுக்கள் உற்பத்தியானது, இந்த முறை அதிகரித்துள்ளது.

    MORE
    GALLERIES

  • 27

    வேகமாக பரவி வரும் டெங்கு... தப்பிக்க இந்த 5 வகை ஜூஸ்களை தவறாமல் குடியுங்கள்..!

    கடந்த செப்டம்பர் மாத கணக்கீட்டின்படி இந்தியாவில் மட்டும் 63,230 எண்ணிக்கையிலான நபர்கள் டெங்கு காய்ச்சலினால் பாதிக்கப்பட்டுள்ளனர். மருத்துவ வல்லுனர்கள் தெரிவித்துள்ளதன் படி டெங்குவை முழுமையாக சரி செய்ய இன்னும் எந்த முறையும் கண்டறியப்படவில்லை. ஆனால் டெங்குவினால் ஏற்படும் நீர்ச்சத்து இழப்பை சரி செய்வதற்கும், காய்ச்சலை குறைப்பதற்கும் தேவையான சிகிச்சைகள் அளிக்கப்பட்டு வருகின்றன டெங்குவினால் கடுமையாக பாதிக்கப்பட்ட மக்களுக்கு மிகச் சிறப்பான சிகிச்சை முறைகள் அளிக்கப்பட்டு வருவதாக தெரிவித்துள்ளார். டெங்கு பாதித்த நோயாளிகள் ஒரு நாளுக்கு குறைந்த பட்சம் 4 லிட்டர் தண்ணீர் ஆவது குடிக்க வேண்டும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். மேலும் டெங்குவில் இருந்து நம்மை பாதுகாத்துக் கொள்ளவும் நோய் பாதித்த பிறகு அதன் வீரியத்தை குறைக்கவும் சில மருத்துவ குணம் உடைய உணவு பொருட்களின் மூலம் செய்ய முடியும்.

    MORE
    GALLERIES

  • 37

    வேகமாக பரவி வரும் டெங்கு... தப்பிக்க இந்த 5 வகை ஜூஸ்களை தவறாமல் குடியுங்கள்..!

    சீந்தில் ஜுஸ் : சீந்தில் அல்லது கிலாய் எனப்படுவது ஒருவித மூலிகை தாவரம் ஆகும். இது வளர்ச்சிதை மாற்றத்தை அதிகப்படுத்துவதோடு உடலில் உள்ள நோய் எதிர்ப்பு சக்தியையும் அதிகரிக்கிறது. இரண்டு சிறிய சீந்தில் இலைகளை எடுத்து கொதிக்க வைத்து பின்பு மிதமான சூட்டில் இருக்கும் போது அந்த நீரை குடிக்க வேண்டும் இதனால் டெங்குவில் இருந்து பாதுகாப்பதுடன் உடலில் உள்ள கிருமிகளை அழிக்கவும் முடியும்.

    MORE
    GALLERIES

  • 47

    வேகமாக பரவி வரும் டெங்கு... தப்பிக்க இந்த 5 வகை ஜூஸ்களை தவறாமல் குடியுங்கள்..!

    பப்பாளி இலை ஜூஸ் : பப்பாளி இலைகள் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிப்பதில் முக்கியமானவை. அதுமட்டுமில்லாமல் ரத்தத்தில் உள்ள ரத்த தட்டை அணுக்களின் எண்ணிக்கையையும் அதிகரிக்கின்றன. தேவையான அளவு பப்பாளி இலைகளை எடுத்துக்கொண்டு அவற்றை நன்றாக பிழிந்து சாரை வெளியே எடுக்க வேண்டும். அந்த சாரை ஒரு நாளைக்கு இரண்டு முறை என்ற முறையில் குடித்து வர நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்.

    MORE
    GALLERIES

  • 57

    வேகமாக பரவி வரும் டெங்கு... தப்பிக்க இந்த 5 வகை ஜூஸ்களை தவறாமல் குடியுங்கள்..!

    கொய்யா ஜூஸ் : கொய்யா பழத்தில் இயற்கையாகவே வைட்டமின் சி அதிகமாக உள்ளது மேலும் நோய் எதிர்ப்பு சக்தியையும் அதிகரிக்கிறது. கடைகளில் பாக்கெட் செய்து விற்கப்படும் கொய்யா ஜூசை வாங்காமல் நீங்களாகவே கொய்யா பழத்தை வாங்கி வந்து வீட்டிலே ஜூஸ் செய்து குடித்து வர அதன் நற்குணங்கள் அனைத்தும் உங்களுக்கு கிடைக்கும். மேலும் ஜூசாக குடித்து விரும்ப விட்டால் நீங்கள் கொய்யாப்பழத்தை அப்படியே சாப்பிடலாம்.

    MORE
    GALLERIES

  • 67

    வேகமாக பரவி வரும் டெங்கு... தப்பிக்க இந்த 5 வகை ஜூஸ்களை தவறாமல் குடியுங்கள்..!

    துளசி நீர் : துளசி செடியின் மருத்துவ குணங்கள் நம் அனைவருக்கும் ஏற்கனவே தெரியும். இவை இயற்கையாகவே டெங்கு காய்ச்சலுக்கு மருந்தாக செயல்படுகிறது. டெங்கு காய்ச்சல் பாதிக்கப்பட்டவர்களுக்கு நோய் தொற்று உடன் போராடவும் மேலும் மிக விரைவாக குணமடைவதற்கும் துளசி உதவுகிறது. துளசிச் செடியை தண்ணீரில் சேர்த்து கொதிக்க வைக்க வேண்டும். அதன் பிறகு வேண்டுமென்றால் சிறிது எலுமிச்சை சாறு அல்லது தேன் சேர்த்து அந்த தண்ணீரை குடிக்க வேண்டும்.

    MORE
    GALLERIES

  • 77

    வேகமாக பரவி வரும் டெங்கு... தப்பிக்க இந்த 5 வகை ஜூஸ்களை தவறாமல் குடியுங்கள்..!

    பாகற்காய் ஜூஸ் : பாகற்காய் உடலில் உள்ள நச்சுக்களையும் கிருமிகளையும் வெளியேற்றுவதில் முக்கிய பங்காற்றுவதாக சமீபத்திய ஆய்வுகள் தெரிவிக்கின்றன. பாகற்காய் ஜூஸ் செய்வதற்கு முதலில் அதன் தோலை நீக்கிவிட்டு பாகற்காயை சிறுசிறு துண்டுகளாக வெட்டி எடுத்துக் கொள்ள வேண்டும். பின்பு அதனோடு தேவையான அளவு தண்ணீர் சேர்த்து நன்றாக அரைத்துக் கொள்ள வேண்டும். பிறகு மீண்டும் என்றால் சிறிதளவு நீரை சேர்த்தோம் அல்லது வடிகட்டியோ நீங்கள் பாகற்காய் ஜூஸை குடிக்கலாம்.

    MORE
    GALLERIES