

பேரிச்சம்பழத்தில் கார்போ ஹைட்ரேட் 70 முதல் 80 சதவீதம் உள்ளது. மேலும் க்ளுகோஸ், ப்ரக்டோஸ், நார்ச்சத்து, வைட்டமின்கள், மக்னீசியம், மினரல்கள் (தாது உப்புகள்) மற்றும் பாலிபீனால்கள், பீனாலிக் அமிலம் போன்ற எண்ணற்ற சத்துக்கள் நிறைந்துள்ளன. உடலுக்கு தேவையான அத்தியாவசிய ஊட்டச்சத்துக்களை அளிப்பதன் காரணமாகவே ஒரு நாளுக்கு 2 பேரிச்சம்பழம் சாப்பிடுவது மிகவும் நல்லது என சொல்லுவார்கள்.


அதிலும் பேரிச்சம்பழத்தை பாலில் ஊறவைத்து சாப்பிடுவதால் பல பிரச்சனைகளுக்கு தீர்வு காண முடியும் என்றால் நம்பமுடிகிறதா? இதனை செய்வதால் தூக்கமில்லாத இரவுகள் உட்பட பல நோய்களைக் குணப்படுத்த முடியும் என்று கூறப்படுகிறது. மேலும், பேரிச்சம்பழத்தை பாலில் கலந்து சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள் குறித்து காண்போம்.


இருமல் பிரச்சனை நீங்கும்: தேன் மற்றும் சூடான பாலுடன் சில பேரிச்சம்பழங்களை சேர்த்து சாப்பிட வேண்டும். இது தொண்டையில் குமிழியை நீக்கி, நீடித்த இருமலைக் குறைகிறது. நீங்கள் செய்ய வேண்டியது எல்லாம் 5 முதல் 8 பேரிச்சம் பழங்களை பாலுடன் வேகவைத்து சூடாக குடிக்க வேண்டும்.


இரத்த சோகை, நரம்பு நோய்கள், விறைப்புத்தன்மை நீங்கும்: சில பேரிச்சம் பழங்களை பாலில் 24 மணி நேரம் ஊறவைக்க வேண்டும். பின்னர் குங்குமப்பூ மற்றும் ஏலக்காய், ஒரு தேக்கரண்டி அரைத்த இஞ்சியை பாலுடன் கலந்து அதனை கொதிக்க வைத்து குடிக்க வேண்டும்.


தூக்கமின்மை பிரச்சனை குறையும்: இன்றைய காலத்தில் மொபைல் பயன்பாடுகளால் இரவு நேர தூக்கம் என்பது பலரிடம் கேள்விக்குறியாக இருக்கிறது. இதுபோன்ற தூக்கமின்மை பிரச்சினை நீங்க சூடான பாலுடன் 2 அல்லது 3 பேரிச்சம்பழங்களை கலந்து குடிக்க வேண்டும்.


இதய வலி நீங்கும்: அதிக இதயத் துடிப்புக்கு, நீங்கள் 2 பேரிச்சம்பழம், 2 தேக்கரண்டி தேன் ஆகியவற்றை அரை கிளாஸ் பாலில் சேர்த்து குடிக்க வேண்டும்.


மலச்சிக்கல் பிரச்சனை அகலும்: 5 முதல் 8 பேரிச்சம்பழத்தை அரை லிட்டர் பாலில் சேர்த்து காய்ச்சி பின்னர் குளிர வைத்து காலையில் வெறும் வயிற்றில் குடிக்கலாம்.


உயர் இரத்த அழுத்தம் : உணவுக்கு 30 நிமிடங்களுக்கு முன்பு பாலில் ஊறவைத்த 50 முதல் 70 கிராம் பேரிச்சம் பழங்களை சாப்பிடுவது அவசியம். இதை மூன்று வாரங்கள் செய்து வந்தால் உயர் ரத்த அழுத்த பிரச்னை அகலும்.


வாய்வு தொல்லை: 2:1 என்ற விகிதத்தில் கருப்பு சீரகத்துடன் பேரிச்சம் பழங்களை நன்கு அரைத்துக்கொள்ளுங்கள். பின்னர் அதனை ஒரு கிளாஸ் பாலில் சேர்த்துக் கொள்ளுங்கள். இது அதிகப்படியான வாயு உருவாவதை குணப்படுத்த உதவும்.


ஹேங்கொவர்: ஒரு நாள் முழுவதும் பேரிச்சம் பழத்தை பாலில் ஊற வைக்க வேண்டும். பின்னர் பேரிச்சம்பழம் மிருதுவான உடன் அதனை சாப்பிட வேண்டும். இதனை செய்வதால் ஹேங்கொவர் பிரச்சனை அகலும்.