ஹோம் » போடோகல்லெரி » லைஃப்ஸ்டைல் » குளிக்காலங்களில் மிகவும் எளிமையாக சமைத்து சாப்பிட கூடிய 5 வகை ஒன்-பாட் உணவுகள்..!

குளிக்காலங்களில் மிகவும் எளிமையாக சமைத்து சாப்பிட கூடிய 5 வகை ஒன்-பாட் உணவுகள்..!

குளிர்காலத்தில் என்ன சமைக்கலாம் என்று ஒருவர் யோசிக்கும் போது முதலில் நம் நினைவிற்கு வருவது கிச்சடி தான். இது நாம் சுலபமாக செய்யக்கூடிய சுவையான அதே சமயம் மிகவும் சத்துள்ள ஒரு-பாத்திர உணவுகளில் பாலக் தால் கிச்சடியும் ஒன்றாகும் என்பதில் சந்தேகமே வேண்டாம்.

 • 18

  குளிக்காலங்களில் மிகவும் எளிமையாக சமைத்து சாப்பிட கூடிய 5 வகை ஒன்-பாட் உணவுகள்..!

  குளிர்காலம் எவரையுமே சோம்பேறிகளாக மாற்றும் ஒரு காலாமாகும். வெப்பநிலை குறைவதன் விளைவாக யாருமே மிகவும் வசதியான தத்தம் போர்வைகளுக்குள் இருந்து வெளியேற விரும்ப மாட்டார்கள், அதிலும் சமைக்க வேண்டும், சமையலறையில் மணிகணக்கில் நேரம் செலவிட வேண்டும் என்று நினைத்தாலே சலிப்பு தட்டும். அதே சமயம் வயிறும், மனதும் சூடான மற்றும் ருசியான உணவை தேடி அலைவதும் இதே குளிர்காலங்களில் தான்.

  MORE
  GALLERIES

 • 28

  குளிக்காலங்களில் மிகவும் எளிமையாக சமைத்து சாப்பிட கூடிய 5 வகை ஒன்-பாட் உணவுகள்..!

  இது போன்ற "சோம்பேறித்தனமும் சமையல்கட்டும்" சண்டைபோடும் நேரத்தில் உங்களுக்கு உதவுவது தான் - ஒன்-பாட் உணவுகள் எனப்படும் ஒரு-பாத்திர உணவுகள். அப்படியான சில உணவுகளை தான் உங்களுக்காக இங்கே பட்டியலிட்டுள்ளோம். இவைகளை நீங்கள் இரவு உணவாகவோ அல்லது மதிய உணவாகவோ தயாரித்து சுவைக்கலாம்.

  MORE
  GALLERIES

 • 38

  குளிக்காலங்களில் மிகவும் எளிமையாக சமைத்து சாப்பிட கூடிய 5 வகை ஒன்-பாட் உணவுகள்..!

  1) பாலக் தால் கிச்சடி (பாலக் கீரை பருப்பு கிச்சடி) : குளிர்காலத்தில் என்ன சமைக்கலாம் என்று ஒருவர் யோசிக்கும் போது முதலில் நம் நினைவிற்கு வருவது கிச்சடி தான். இது நாம் சுலபமாக செய்யக்கூடிய சுவையான அதே சமயம் மிகவும் சத்துள்ள ஒரு-பாத்திர உணவுகளில் பாலக் தால் கிச்சடியும் ஒன்றாகும் என்பதில் சந்தேகமே வேண்டாம். இதில் கீரையில் உள்ள ஊட்டச்சத்துக்களும், பருப்பில் உள்ள நற்குணங்களும் உள்ளது என்பதால் அவசர அவசரமாக செய்த ஒரு உணவாகிற்றே, இதில் சத்துக்கள் இருக்குமா? என்கிற தயக்கமே வராது. உங்கள் நாவின் தேவைக்கேற்ப இதில் சில மசாலாக்களை சேர்த்துக்கொள்ள ருசி இரட்டிப்பாகும். கிச்சடி என்பது குளிர்காலத்திற்கு மட்டுமல்ல கிட்டத்தட்ட எல்லா வகையான காலங்களிலும் அனைவருமே விரும்பி சாப்பிடக்கூடிய ஒரு எளிமையான உணவாகும்.

  MORE
  GALLERIES

 • 48

  குளிக்காலங்களில் மிகவும் எளிமையாக சமைத்து சாப்பிட கூடிய 5 வகை ஒன்-பாட் உணவுகள்..!

  2) அலகாபாத் கி தெஹ்ரி (வெஜிடெபிள் புலாவ்) : நீங்கள் கடும் பசியில் இருக்கிறீர்கள் ஆனால் அதே சமயம் மிகவும் ருசியான ஒரு உணவை சாப்பிட விரும்புகிறீர்கள் என்றால், இந்த குறிப்பிட்ட ஒரு-பாத்திர உணவு உங்களுக்கானது தான். அலகாபாத் கி தெஹ்ரி எனபது உங்களின் வழக்கமான காய்கறி சேர்க்கப்பட்ட புலாவுக்கு கூடுதல் நறுமணம் மற்றும் சற்றே கூடுதல் சத்துக்களை சேர்க்கும் ஒரு உணவாகும். இதை இன்றே செய்து பார்க்கவும் மற்றும் பரிமாறும் முன்னர் சிறிது நெய் சேர்த்துக்கொண்டால்.. ஆஹா! அதை விவரிக்க வார்த்தைகளே இல்லை!

  MORE
  GALLERIES

 • 58

  குளிக்காலங்களில் மிகவும் எளிமையாக சமைத்து சாப்பிட கூடிய 5 வகை ஒன்-பாட் உணவுகள்..!

  3) மசாலா மக்ரோனி : குளிர்காலம் வந்துவிட்டாலே நம் வயிற்றுக்கும், நாவிற்கும் ருசியான, சீஸியான, அதே சமயம் குறுகிய நேரத்தில் சமைக்கக்கூடிய ஒரு உணவு அடிக்கடி தேவைப்படும். அது போன்ற தருணங்களில் நீங்கள் மசாலா மக்ரோனிக்கு இடம் தருவது புத்திசாலித்தனம். இதற்காக நீங்கள் செய்ய வேண்டியது எல்லாமே, சிறிது மக்ரோனியை சூடு நீரிலிட்டு வேகவைத்து, பின் காய்கறிகள் மற்றும் இந்திய மசாலாப் பொருட்களுடன் கலந்து ஒரு கிண்டு கிண்ட வேண்டும், அவவ்ளவுதான். வயிற்றை ரொம்ப நேரம் பசியோடு காத்திருக்க வைப்பது பாவம்!

  MORE
  GALLERIES

 • 68

  குளிக்காலங்களில் மிகவும் எளிமையாக சமைத்து சாப்பிட கூடிய 5 வகை ஒன்-பாட் உணவுகள்..!

  4) சிக்கன் பிரியாணி : ஒவ்வொரு அசைவ பிரியருக்குமே தெரியும் - பிரியாணி என்பது வெறும் ஒரு உணவோ அல்லது ஒரு வார்த்தையோ அல்ல, அது ஒரு உணர்வு என்பது! எனவே தான் இது எந்தவொரு நாளுக்கும் பொருத்தமான ஒரு உன்னதமான உணவாக திகழ்கிறது. நீங்கள் ஒரு பிரியாணி விரும்பி என்றால் நிச்சயமாக ஒன்-பாட் பிரியாணியை செய்து பார்த்து சுவைக்க வேண்டும். ஒருவேளை நீங்களொரு சைவ சாப்பாட்டுக்காரர் என்றால் கோழிக்கறியை சேர்ப்பதற்கு பதிலாக பன்னீரை சேர்த்து அசைவ விரும்பிகளுக்கு 'டஃப்' கொடுக்கலாம்!

  MORE
  GALLERIES

 • 78

  குளிக்காலங்களில் மிகவும் எளிமையாக சமைத்து சாப்பிட கூடிய 5 வகை ஒன்-பாட் உணவுகள்..!

  5) சிக்கன் பேலா : சிக்கன் உணவுகளை மிகவும் எளிமையாக கையாளும் பழக்கம் கொண்டவர் நீங்களென்றால் இந்த உணவு செய்முறை உங்களுக்கானது தான். சிக்கன் பேலா என்பது உங்கள் வீட்டில் எளிதாகக் கிடைக்கும் பொருட்களை வைத்து சமைக்கும் ஒரு சுலபமான ஒரு-பாத்திர உணவாகும். இதை செய்யும் போதே சமைப்பவருக்கே எச்சில் ஊறும் என்கிற போது, ஒரு நல்ல குளிர்கால மதிய பொழுதில் பசியோடு காத்திருக்கும் ஒருவருக்கு எதையெல்லாம் ஊற வைக்கும் என்பதை நீங்களே ஊகித்துக்கொள்ளுங்கள். இந்த பேலா, குளிர்காலத்தில் நீங்கள் கட்டாயம் முயற்சி செய்து பார்க்க வேண்டிய ஒன்-பாட் உணவாகும்.

  MORE
  GALLERIES

 • 88

  குளிக்காலங்களில் மிகவும் எளிமையாக சமைத்து சாப்பிட கூடிய 5 வகை ஒன்-பாட் உணவுகள்..!

  நாம் மேற்கண்ட செய்முறை பட்டியலைக் கையில் வைத்துக்கொண்டு, சமையலறையில் ஒரு கலக்கு கலக்க வாழ்த்துக்கள்!

  MORE
  GALLERIES